சிங்கப்பூர் கிளிஷே – 11
ஞாபகங்கள் இல்லாது
போகுமொரு நாளில்
நிறைய தொலைபேசி அழைப்புகள்
நீங்கள் யாரென்ற கேள்வியோடு
நிராகரிக்கபடலாம்
நிலுவையில் இருக்கும்
நிறைய வழக்குகள்
தள்ளுபடி செய்யப்படலாம்
நாளைய நம்பிக்கைகளின் வேர்கள்
நடுக்கம் காணலாம்
உறவுகளுக்கான உறுதிமொழிகள்
உடனுக்குடன் ஆவணப்படுத்தப்படலாம்
பிறந்தநாள், பிரிந்த நாள்
உபசாரங்களெல்லாம்
ஒடுங்கியோ அல்லது
ஓய்ந்தோ போகலாம்
அந்தந்தக் கணங்களில்
வாழ அநேகம்பேர் ஆயத்தமாகலாம்
நிகழ் கணங்களை உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் கவிதைகளுக்கு நேரலாம். ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் நிறைய துரோகங்கள் மன்னிக்கப்படலாம் அல்லது மறக்கப்படலாம்.
என் குடும்ப நிகழ்ச்சிக்காக ஊரிலிருந்து சுமார் 15 கல்லூரி மாணவர்கள் விருந்தினராக சிங்கப்பூர் வந்திருந்தார்கள். அவர்களை வரவேற்க விமானநிலையம் சென்றபோது காலைச் சிற்றுண்டி நேரம் நெருங்கிவிட்டது. அனைவரையும் மேக்டோனல் அழைத்துச் சென்றேன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சீனப் பெரியவர் கையில் சர்வே&நோட் புக்குடன் தங்களுக்கு ‘‘ஞாபகம் இருப்பதை எழுதுங்கள்’’ என்று வேண்டுகோளுடன் ஒரு பாரத்தை நீட்டினார். கடையில் சர்வீஸ் எப்படி கவுண்டரில் நிற்பவர்கள் முகம் சுளித்தார்களா? சிரித்தார்களா? எத்தனை நிமிடங்களில் ‘‘French fries” பொரித்துக் கொடுத்தார்கள். வெள்ளி பெற்றுக் கொள்ளும் போது மகிழ்ச்சியாக முகத்தை வைத்துக் கொண்டார்களா? என்று அவற்றிற்கு very Good/ Good/ Fair/ Normal என்று கட்டம் போட்டு வேறு டிக் அடிக்கச் சொன்னார். வெள்ளி வாங்கும்போது அவர்கள் சிரித்துக் கொண்டுதான் வாங்கினார்கள். ஆனால் எனக்குத்தான் பர்ஸ் காலியாவதை நினைத்து முகம் கோணலாகிவிட்டது. ஆனால் இதைப்பற்றி எதுவும் பார்மில் குறிப்பிட இடமில்லாததால் ‘தேமே’ என்று fill-up பண்ணிக் கொடுத்தேன்.
இன்னும் ஏதாவது ஞாபகம் இருக்கிறதா என்று வேறு கேட்டுவிட்டு நன்றி சொன்னார். வந்திருந்த மாணவர்கள் இதெல்லாம் கட்டாயம் Fill-up பண்ண வேண்டுமா என்று தெரியாத்தனமாக கேட்டார்கள். இம்க்ரேஷனில் நுழையும்போது Form fill-up பண்ணிய அனுபவங்களை பேசிச் சிரித்துக் கொண்டு வந்தார்கள். அவர்களோடு பயணித்த குடும்பத்துக்கு Form fill பண்ணிக் கொடுக்கும்போது அந்தக் குடும்பத்துப் பெண்மணி occupation என்ற இடத்தில் ‘ஹவுஸ் வொய்ஃப்’ என்று போடச் சொன்னாராம்.
அங்கிள் ‘‘நாங்கள் பரிட்சையில் Form fill-up பண்ணிய ஞாபகங்களை மறக்கத்தான் சிங்கப்பூர் வந்தோம். ஏர்போர்ட்டில் இறங்கியவுடனே இப்படி Question paperä நீட்டுகிறார்களே’’ என்றார். வேன் டிரைவர் ஏர்போர்ட்டிலிருந்து சூவா சூக் காங் செல்வதற்குப் பதில் கிரான்ஜியில் குதிரைப் பந்தயத் திடலுக்கு கொண்டுபோய் நிறுத்தினார்.தங்களுடைய போனில் GPRS ல் சுவா சுகாங் கிரசென்ட்டுக்கு வழிகாட்டி அவர்கள்தான் வேன் டிரைவரைக் கூட்டிச் சென்றார்கள்.
உலகின் பாதியளவிற்கு கைப்பற்றிய மகா அலெக்ஸாந்தர் தன் போர் வீரர்களுடன் எகிப்து நைல் ஆற்றின் போக்கில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அந்த ஆற்றின் கிளை நதிகளில் ஒரு நகரத்தை உருவாக்கும்படி கட்டளையிட்டார். அந்த இடத்தில் பல வணிக வழிகள் சந்தித்தன. அந்த இடம்தான் ‘‘அலெக்ஸாந்திரா’’ என்றழைக்கப்பட்டது. மக்கள் அந்த இடத்தை விரும்பத் தொடங்கியதால் மேலும் மேலும் நகரம் வளர்ந்து உலகின் பல பகுதிகளிலிருந்து தத்துவஞானிகள் கூடும் இடமாக பிற்காலத்தில் அது மாறியது. இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க அலெக்ஸாண்டிரா என்ற பெயர் எங்கள் வீட்டிற்கு வரும் தெருவுக்கும் வைக்கப் பட்டிருக்கிறது. ஞாபகம் வைத்துக் கொள்வதற்காக இந்த வரலாற்றைச் சொல்கிறேன். டாக்ஸி டிரைவரிடம் ‘‘அலெக்ஸாண்டிரா’’ என்று சொல்லுங்கள். சரியாகக் கொண்டுவந்து சேர்த்துவிடுவார் என்று சொல்லிவைத்தேன்.
ஆனாலும் அவர்கள் public transport பயணம் செய்வதை விரும்பினார்கள். ஒவ்வொரு பஸ்ஸையும் பார்த்து இது கேஸ், இது எலக்ட்ரிக் என்று கமென்ட்ஸ் கொடுத்து ஆச்சரியப் பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அடிக்கடி அவர்கள் இது WAB இது wabஇல்லை என்று சொன்னது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. அது என்ன WAB என்றேன்.
‘‘Wheel Chair Accessible bus” என்பதைத்தான் அப்படி சுருக்கி சொல்லியிருக்கிறார்கள்.
இவர்கள் வந்த புண்ணியத்தில் மெரினாசேன்ட்ஸ், கேஸினோ ரிசார்ட்ஸ் செல்லும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 4 பில்லியன் செலவில் 55 மாடிகளில் 820 அடி உயரத்தில் 450 சதுர அடி பரப்பில் ஒரு நீச்சல் குளம். மொத்தம் 250 பேர் தங்கும் அறைகள் இருக்கின்றன. உள்ளே ஒரு மியூசியம் கூட இருக்கிறது. முதன்முதலில் பார்க்கிறேன் என்ற சுவடு தெரியாமல் அவர்களிடம் இன்னொரு முகத்தை காட்டிக் கொண்டு சமாளித்தேன். ஆனால் உள்ளே நுழைவதற்கு அவர்களுக்கு free.. எனக்கு 100 வெள்ளி வீங்கிவிட்டது.
வித்தியாசமாக அவர்களை எங்காவது கூட்டிச் செல்லல்லாம் எனில் எனக்கு மற்ற இடங்களை விட நம் தேசிய நூலகம்தான் நினைவுக்கு வந்தது. ஜெயந்தி சங்கர் கூட ஒரு கட்டுரையும் அழுத்தமாக கூறுவார். ‘‘சிங்கப்பூரில் சுற்றுலாத் தளங்களை மட்டும் பார்த்துவிட்டுச் சென்றுவிடாதீர்கள். நூலகத்திற்கு வாருங்கள் என்று அவர்கள் அசந்துதான் போனார்கள். 5வது தளத்தில் இருந்த ‘அருங்காட்சியகம்’ அவர்களை மிகவும் கவந்துவிட்டது. அருங் காட்சியகங்கள் பற்றிய இளைய தலைமுறையினருக்கு அவ்வளவு ஈடுபாடுகள் இல்லை
தொடக்ககால அருங்காட்சியகங்கள் பழம்பொருட்களின் மேல் ஆர்வம் கொண்ட வசதிபடைத்த தனிப்பட்ட குடும்ப நிறுவனங்கள் போன்றவற்றின் சேகரிப்புகளின் அடிப்படையில் உருவாகின. காலப்போக்கில் ஒரு நாட்டின் கலாச்சாரம், பண்பாடு இவற்றின் ஞாபக விழுதுகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன. சிங்கப்பூர் அருங்காட்சியகங்களில் தெற்காசியாவின் மிகச் சிறந்த கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அவைகளின் சிலவற்றை பார்க்கும்போது அதை உருவாக்கியவர்களின் எச்சிலோ, வியர்வையோ, இரத்தமோ அதில் உறைந்திருப்பது போன்ற பிரமை எனக்குள் ஏற்படும் யுகங்கள் கடந்து அந்தக் கலைஞர்கள் வாழ்கிறார்கள்.
1974 xian மாநிலத்தில் தோண்டி எடுக்கப்பட்ட சிப்பாய்களின் மண்பாண்ட சிலைகள் ‘‘Terrcota Warriors” என்ற கண்காட்சி. இப்போது Asean Givilization Musucmத்தில் நடந்து வருகிறது. இம்மாதம் 31ந்தேதி வரை
Asean Givilization Musueum
Paranakan Museum
Memories at old ford factory
Reflections at Bulut Chanch
National Museum of Singapore
இந்த ஐந்து அருங்காட்சியகத்திலும் நுழைவுக் கட்டணம் இலவசம்.சிங்கப்பூரில் நானே பார்த்திராத பல இடங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு விருந்தினர்களால் கிடைத்தது. சாங்கி Shelotல் தங்கிவிட்டு திரும்பிச் செல்லும்போது ஏர்போர்ட்டில் வைத்து தாங்கள் தங்கியிருந்த நாட்களில் தங்களுக்கு பளிச்சென்று ஞாபகம் வரும் விஷயத்தை கேட்டேன். அதில் ஒரு மாணவர் சொன்னார் ‘‘அங்கிள் நான் சிங்கப்பூருக்கு வருவது இது இரண்டாவது முறை. நான் சென்றமுறை இங்கு வந்தபோது நிறைய இடங்களில் Mr. Bean ன் வீடியோ போட்டு காண்பித்துக் கொண்டிருந்தார்கள் இந்த முறை அவ்வளவாக பார்க்க முடியவில்லை என்றார் Mr. Bean ன் இயற்பெயர்Rowan Atkinson சென்ற வாரம் கார் விபத்தில் லண்டனில் படுகாயமடைந்து படுத்திருக்கிறார். அதனால்தான் நீங்கள் சிங்கப்பூரிலும் பார்க்கமுடியவில்லை என்றேன்.
அதற்கு அவர் விடாமல் ‘‘அவர் எப்போதும் ஓட்டும் ஓட்டைக் காரை ஓட்டியிருப்பாரோ’’ என்றார்.
உண்மையில் Mr.Bean உலகின் அதிவேக ரேஸ் கார்களை ஓட்டுவதில் வல்லவர்.
அன்று அவர் பயன்படுத்தியது Maclaren Fi/Super car என்றேன். என்னை ஒரு எழுத்தாளன் என்று ஞாபகம் வைத்திருக்க இந்த பாயிண்ட் போதும் என்று ஒரு நினைப்பில் அவர்களுக்கு பை – பை சொன்னேன்.
Ellutha enklluku sollikodungal unarvukalal kannkalaimoodikkondu
Ellutha enkuku sollikodungal unarvukalal kannkalaimoodikkondu