என்னவாக இருக்கும்?

Posted: மார்ச் 23, 2010 in பத்தி
குறிச்சொற்கள்:

மாணவப் பருவத்தில் ஆசிரியர்கள் ஒரு வேலையை கொடுத்துவிட்டால் அதை சிரமேற்கொண்டு ஓடியாடி செய்து முடிப்பது கடமையுணர்வு கொப்பளிக்கும் ஒரு அனுபவம். அதிலும் “நீதான் பொறுப்பு” என்று கல்லூரி விடுதிக் காப்பாளர் புலவர் நெயினார் முகம்மது என் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னவுடன் இன்னமும் கூடுதல் டென்ஷன் தொற்றிக் கொண்டது.

விடுதிநாள் விழாவிற்கு கவியரசர் கண்ணதாசனைக் கூட்டிவர முடியுமா? ஏன்ற சவாலுடன் சென்னைக்கு வந்து கவி க.மு.ஷரிப் இயக்குனர் கோபாலக்கிருஷ்ணன் இருவரிடமும் அறிமுகக் கடிதங்கள் வாங்கிக்கொண்டு கவிதா ஹோட்டலில் இரண்டு நாட்கள் தங்கி கவிஞரை என் நண்பர் அன்வர் மரைக்காயருடன் சென்று சந்தித்தேன்.

எங்கள் பேண்ட் பெல் பாட்டம் அளவைப் பார்த்துவிட்டுக் கவிஞர் சிரித்தார்.

“மாணவர்களுக்கு பேண்ட் வேட்டியாக மாறிக் கொண்டு வருகிறது” என்றார்.

அப்போது அவர் அரசவைக் கவிஞராக இருந்தார். யேசு காவியத்தை முடிக்கும் தருவாயில் திருச்சியில் உள்ள பேராயர்களைச் சந்திக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் 25.02.1980 எங்கள் கல்லூரி விடுதி நாளில் கலந்து கொள்ள சம்மததித்தார். கவிஞர் கல்லூரி விடுதிக்குள் நுழைந்தவுடன் மாணவர்களிடையே பரபரப்புத் தொற்றிக் கொண்டது. அகலமான பெல் பாட்டத்துடன் மாணவர்கள் சூழ்ந்து கொண்டு வரவேற்க “அத்திக்காய்”… தேன் தேன்.. பாடல்கள் பாடி அசத்திவிட்டனர்.

விழா எற்பாடுகளில் கவனம் இருந்தததால் அவர் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுக்க எனக்குத் தோன்றவில்லை கடைசி ஓரத்தில் திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பது நான்தான்…

 

கவிஞர் சொல்லாமல் விட்ட நாலாம் பக்கம்……

காதலுக்கு நான்கு பக்கம்

        கால்களுக்கு நாலு நடை

மாதருக்கு நாலு குணம்

      மை விழிக்கு நாலு மொழி

கண்களினால் எழுதுவது முதல் பக்கம்

     கலந்து கொஞ்சும் இதயங்கள் இரண்டாம் பக்கம்

என்னுவதை சொல்லுவதே மூன்றாம் பக்கம்

கவியரசு கண்ணதாசன் குரல்கள் ஜமால் முகமது கல்லூரி விடுதியின் சுவர்களில் இன்னும் எதிரொலிக்கின்றன.

அவர் பாடாமல் விட்ட நாலாவது பக்கம் என்னவாக இருக்கும்?

அப்துல் காதர் ஷாநவாஸ்

Advertisements
பின்னூட்டங்கள்
 1. சி.கருணாகரசு சொல்கிறார்:

  நல்ல நிகழ்வு பகிர்வுக்கு நன்றி.
  அந்த திரும்பி பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தையாது…. கண்ணில் (கணினியில்) காட்டியிருக்கலாமே!?

 2. சி.கருணாகரசு சொல்கிறார்:

  நல்ல நிகழ்வு பகிர்வுக்கு நன்றி.
  அந்த திரும்பி பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தையாவது…. கண்ணில் (கணினியில்) காட்டியிருக்கலாமே!?

 3. athimoolam சொல்கிறார்:

  i saw your kavithai.well.regist more .best wishes!

 4. athimoolam சொல்கிறார்:

  vaaigai aartil eravellam pathuper paduthirundu pesuvom marakkamudiyathathutoday anandavalli tirunal thodakkam janasakthinalethalil eluthukiren thalaivarkalaiparti best wishes pray for good health meet again bye

 5. athimoolam சொல்கிறார்:

  letter to nvs seen nice innum valarungal muttai parotta best wishes

 6. athimoolam சொல்கிறார்:

  kadar ungal kathai eral and kidnypadithen mathivanan letter and ur pathil anaivariyum ninaivukoordhu ullathu makilchiennathan iruntalum nammaur polakuma wishing mayday greetings to all meet again

 7. pandiammalsivamyam சொல்கிறார்:

  கண்ண்தாசன் அந்த நாலாவது பக்கத்தில் இதைத்தான் எழுதியிருப்பர்ர். அது நம் நம்பிக்கைகள் நம்மோடுயிருக்கட்டும் .அவர்க்ளது நம்பிக்கை அவர்களோடு இருக்கட்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s