துண்டு மீனும் வன்முறை கலாச்சாரமும்

Posted: ஏப்ரல் 5, 2010 in பத்தி
குறிச்சொற்கள்:,

நாஞ்சில் நாடன் மீன்கறி சமைப்பது என்றால் காரை, அயிலை, பாரை, நெத்திலி, வெளமீன், வாவல் புளிமுளம், ஒகு செய்முறை

கட்டா நெய்மீன், துப்புவாளை எனில் வறுத்து அரைத்து தேங்காய் அரைக்காமல் நிறையப் புளி விட்டு சட்டி பற்ற வைக்க வேண்டும் என்கிறார்.

பச்சைமீன் என்றால் மாங்காய் சேர்பது விசேசம். கருவாடு, உப்பு துண்டங்கள் எனில் மீனிலுள்ள உப்பை எடுக்க பிஞ்சுக் கத்தரிக்காய், முருங்கைக்காய், வாழைக்காய், பூசணிக்காய் என்று சேர்த்துக்கொள்ள வேண்டும். விலாங்கு மீன் எனில் தலை வால் குடல் செதில்கள் நீக்கி கழுவி பெரிய சட்டியில் இட்டு வேக வைத்து வாழை இலையில் புட்டு மாப்போல உதிர்த்து பச்சை மிளகாய் அரிந்து போட்டு செய்வார்கள். துப்புவாளையும் குளத்து மீன் என்றாலும் இதே பக்குவம்தான் என்கிறார்.

சினிமா உதவி இயக்குனர்கள் என் எழுத்தை திருடுகிறார்கள் என்று நாஞ்சில் நாடன் அடிக்கடி சொல்கிறார். கனி கொடுக்கும் மரம் வருத்தப்படலாமா?  நானும் என் பங்குக்கு எடுத்துக் கொண்டேன்.

ஆனால் சிங்கப்பூரில் இவ்வளவு பக்குவம் தேவைப்படாது ஆனாலும் ருசியில் குறைவிருக்காது. மீன் மசாலா கலவை (Ready made mix) உடன் சார்டின் மீன் வாங்கி மீன் கறி பக்குவமாக மணமணக்கிறது.

பண்டாரிகளின் கைப் பக்குவத்தை விட இங்கு நாம் வாங்கிக்கொடுக்கும் மசாலாவும், தேவையான  காய்கறிகளும் மீன் கறியின் மணத்தை மேலும் கொஞ்சம் தூக்கலாகி கஸ்டமரை கொண்டு வந்து சேர்க்கும்..

R.C Meeting குடியிருப்பாளர்கள் மாதாந்திரக் கூட்டங்களில் முதலில் விவாதிக்கப்படுவது அந்த பகுதியில் நடந்த அசம்பாவித சம்பவங்களைப் பற்றிய விசாரணைகள். இரண்டு போலிஸார் சமயத்தில் மூன்று போலிஸார் வருவார்கள். போலிஸார் ஒருவர் என்னிடம் கேட்டார் நீங்கள் ரொட்டிக் கடைகளில் மீன்கறி போடுகிறீர்களா? ஆல்லது தாளிச்சாவா? என்று

ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமாக வியாபாரம் நடக்கும் அதற்கு ஏற்றார் போல மீன் கறி அல்லது தாளிச்சா கிடைக்கும் சில கடைகளில் இரண்டுமே வைத்திருப்பார்கள் என்றேன்.

அப்போதுதான் அவர் சொன்னார் மீனில் உள்ள (Omega 3 Fatt) ஓமேகா 3 பேட் மனிதர்களில் சில தவறான தீவிரத் தன்மையான குணங்களை குறைக்கப் பயன்படுகிறது, அதனால் சிங்கப்பூரில் சிறைக் சாலைகளில் மீன் எண்ணையை உணவாகக் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்களாம். இது செயல்படுத்தப்பட்டால் ஆசியாவில் வன்முறைக் கலாச்சாரத்தை மீன் எண்ணை மூலம் கட்டுப்படுத்தும் முதல் நாடாக சிங்கப்பூர் இருக்கும் என்றார்.

2002ல் வெளியிட்ட பிரிட்டனின் கண்டுபிடிப்பில் எல்ஸல்பரி (Aylesbury) சிறைச் சாலையில் மீன் எண்ணைய் கொடுக்கப்பட்ட கைதிகளின் குற்ற நடவடிக்கைகள் 37% குறைவாக இருந்ததாக கணக்கிடப்படுகிறது.

நான் போலீஸாரிடம் சொன்னேன். Ok இனி எங்கள் கடைக்கு வந்தால் மீன்கறி மட்டும் கேட்காதீர்கள், மீனோடு ஒகு தட்டை வாங்கிச் சாப்பிடுங்கள் என்றேன்

சிரித்துக் கொண்டே போனார்

Advertisements
பின்னூட்டங்கள்
 1. அத்திவெட்டி ஜோதிபாரதி சொல்கிறார்:

  வலையுலகிற்கு வருக!
  வண்டமிழ் இனிதே தருக!!

 2. ஷாநவாஸ் சொல்கிறார்:

  நானும் ஜோதியில் ஐக்கியமாகிவிட்ட்டேன். உங்க ஆட்டத்தில் என்னையும் சேர்த்துக்குங்க

 3. pandiammalsivamyam சொல்கிறார்:

  நெகிழ வைத்த கண்டுபிடிப்பு!
  மீன் வகைகள் சமைக்கும் விதம் நாஞ்சில் நாடான் சொல்லியவிதம் நாக்கில் எச்சில் ஊறவைத்தது. பிரிட்டன் அய்லெஸ்பரி சிறைசாலையில் மீன் எண்ணையை குற்றவாளிகளுக்கு கொடுத்ததில் 37% குற்றம் குறைவான செய்தி நெஞ்சை நெகிழச்செய்தது!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s