விண்ணில் பறக்கும் MADE IN SINGAPORE

Posted: ஏப்ரல் 6, 2010 in பத்தி
குறிச்சொற்கள்:

உலகின் 168 நாடுகளின் சுபிட்ச நிலையை எச் டி ஐ என்ற முறையில் ஐநாவில் கணிக்கிறார்கள். எச் டி ஐ என்பது மனித வள மேம்பாட்டு சுட்டெண் ( Human development Index) இந்தக் கணிப்பில் மனிதனுடைய சராசரி வருமானம் படிப்பறிவு வாழும் வயது அனைத்தும் அடங்கும் இதில் சென்ற ஆண்டு கணக்குப்படி ஐஸ்லாண்டு நார்வே கனடா ஆஸ்திரேலியா அயர்லாந்து முறையே முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன. பல ஆசிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் 28வது இடத்தில் இருக்கிறது. உலக அளவிலும் ஆசியா தென்கிழக்கு ஆசியா நாடுகளின் வரிசைப் பட்டியலில் பல முன்னேற்றப் படிகளில் சிங்கப்பூர் உள்ளது. ஆசிய சிறந்த பல்கலைக் கழகங்கள் வரிசையில் தேசிய பல்கலைக் கழகம் 4 வது இடத்தில் உள்ளது (British Times Higher Education QS University Ranking) தெற்காசியாவில் சிறந்த வாழ்க்கை தரமுள்ள நாடு என்று எக்கானாமிக் இன்டெலிகன்ட் அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது.

 ஜப்பானின் ஒஸாக்காவுக்கு அடுத்தபடியாக ஆசியாவின் சிறந்த வாழத் தகுந்த இடமாக 4வது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. 6 மில்லியன் மக்கள் தொகையை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் நாட்டில் தன் எதிர்கால வாழ்வை விரும்பி அமைத்துக் கொள்ள விழையும் வரிசை நீண்டு கொண்டேயிருக்கிறது. சூறாவளி என்றால் ஒரு மையம் இருக்க வேண்டும் விருட்சம் என்றால் ஒரு ஆணிவேர் இருக்க வேண்டுமல்லவா! இந்நிலையை உருவாக்க பல காரணிகள் பலருடைய தியாகங்கள் துணையாக இருந்திருக்கின்றன.

அடுத்த சாதனையாக சிங்கப்பூரிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு ஐஸ் பெட்டி சைஸ் X.Sat இந்தியாவில் ஆந்திராவில் உள்ள சதீஷ் தாண் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வருகிற ஜீன் அல்லது ஜீலை மாதத்தில் ஏவப்பட இருக்கிறது. இது சிங்கப்பூரின் விண்வெளி அறிவியல் முன்னேற்றப் பாதையில் முதல் மைல் கல்.

Advertisements
பின்னூட்டங்கள்
  1. pandiammalsivamyam சொல்கிறார்:

    சிங்கப்பூர் சிருஸ்டி கர்த்தாக்களில் ஒருவர் இந்நாளைய பிரதமரின் தந்தை திரு.லீ குவான் இயூ என்பார் நண்பர் ஆரூர்சபாபதி.மக்களின் உழைப்பை நம்பியே வாழும் நாடு. மக்களுக்காக செயல்திட்டங்கள் தீட்டி மக்களுக்கு நன்மை செய்து வருகிறது.நீங்கள் 2015க்கு வந்து பல விஷயங்களை எழுதவேண்டும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s