தொலைந்த செல்லின் மீள் நினைவுகள்

Posted: ஏப்ரல் 7, 2010 in பத்தி
குறிச்சொற்கள்:

பழங்குடி மக்கள் வேட்டைக்குச் செல்லும் போது தன்னுடைய அம்பராத் துணியிலிருந்து அம்பை எடுத்துவிட்டால் அது நிச்சயமாக ஒரு விலங்கை வீழ்த்தியாக வேண்டும். அப்படி குறி தவறி எங்கேனும் காணாமல் போய் விட்டால் வேட்டைக் கும்பல் பொழுது சாய்ந்து திரும்பும்போது தொலைந்துபோய் திரும்ப கிடைக்காத அம்பின் நுனி என்றாவது ஒருநாள் குறி தவறி அம்பை தவறவிட்டவர்களுக்கு கேடு செய்ய வாய்ப்பிருக்கிறது என்ற ஒரு தகவலை நான் எங்கோ படித்த ஞாபகம் வந்துள்ளது. ஆனால் செல்லைத் தொலைத்துவிட்டால் அதோடு நாம் ரகசிய குறியீடுகள், பிரியமானவர்களின் தொடர்பு எண்கள் எல்லாம் தொலைந்து போகும். அடுத்த செல் வாங்கும் வரை நாம் பழங்குடிகள் தான்.
 
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை நண்பர் பாண்டித்துரைக்கு போன் செய்து கடைக்கு வாருங்கள் என்றேன். கைகயில் ஒரு செல்லும் நெஞ்சில் ஒரு செல்லையும் தாங்கிக் கொண்டு வந்து இரண்டிலும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தார்.
 
என் மகன் கடைக்கு வந்து சேர்ந்தவுடன் இருவரும் பேசிக்கொண்டே அல்சுனர்ட் தாண்டி பேருந்தில் வந்து கொண்டிருந்தோம். திருப்பங்கள் இல்லாத செய்திகளுடன் நாங்கள் பேசிக் கொண்டே சென்றோம். மனித வாழ்வின் வசந்த காலங்கள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் உள்ளது போலவே புகழ்பெற்ற ஸ்தலங்கள், அமைப்புகள் ஆகியவற்றுக்கும் உள்ளன என்று கருத்துகள் பரிமாறிக் கொண்டிருந்தோம். மத்திய நூலகம் வந்தவுடன் பேருந்திலிருந்து கீழே இறங்கி டிராபிக்கை கடக்கும் போது பாண்டித்துரை “ஐயோ”! என்றார்.
 
 
எதுவும் அடிபட்டுவிட்டதோ என்று நானும் பதறிவிட்டேன். செல்லை பேருந்திலேயே விட்டு விட்டேன் என்றார். எனக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது.
 
செல் காணாமல் போய் விட்டதை விட அவருடைய நண்பர்கள் தொடர்பு எண்கள் திரும்ப கிடைக்காதே என்று மிகவும் வேதனையுடன் அதைப்பற்றியே பேசிக்கொண்டு வந்தேன். தொலைந்த செல்லுக்கு முயற்சி செய்து கொண்டே நூலகத்தை நோக்கி நடந்து வந்தோம், சில நிமிடங்களில் யாரோ ஒரு கண்டுபிபடிப்பாளர் கையில் அது கிடைத்துவிட்டது. அதை லாவகமாக அவர் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார். சரி அதை விடுங்கள் என்று பாண்டித்துரை பேசிக் கொண்டிருந்த விசயங்களை மறுபடியும் ஆரம்பித்தார் ஆனால் என்னால் இயல்பாகத் தொடரமுடியவில்லை.
 
இப்போதெல்லாம் எல்லோரிடமும் செல்லின் தொலைந்த ஞாபகங்கள் கொஞ்சமாவது இருக்கிறது. சில ஞாபகங்கள் மணிக்கணக்கானது, சிலது நாட்கணக்கானது சிலது வருடங்கள் தோறும் நம்முடன் பயணிக்கும். செல் போன்கள் வீட்டு போன்களை விட எண்ணிக்கையில் அதிகமாகி விட்டன. இது “நெக்ரோ பாண்டே ஸ்விட்ச்” என்ற விதிப்படி நடப்பதாக மறைந்த எழுத்தாளர் சுஜாதா சொல்லியிருக்கிறார். எதிர்காலத்தில் கேபிளில் போவதெல்லாம் வானில் செல்லும், வானில் செல்வதெல்லாம் கேபிளுக்கு இடம் பெயரும் என்பதுதான் “நெக்ரோ பாண்டே ஸ்விட்ச் விதி”.
 
லட்சக்கணக்கான டெலிபோன் இணைப்புகள் தரையில் கம்பிகளின் மூலம் வந்து கொண்டிருந்தது. இப்போது ஆகாய மார்க்கமாக செல்போனில் செல்கிறது. ஆனால் ஆகாய மார்க்கமாக நம் வீடுகளை அடைந்து கொண்டிருந்த டெலிவிசன் இப்போது அதிகமாக கேபிள் டிவி மூலம் வருகிறது.
 
ஒரு பன்னாட்டு செருப்புக் கம்பெனி குழந்தைகளின் காலணிகள் ஒன்றில் செல்போன் வடிவத்தில் உருவாக்கியுள்ளது. காதோரம் எப்போதும் வைத்துக் கொண்டிருந்தால் மூளைக்கு கெடுதல் என்றும், சட்டை பையில் வைத்துக் கொண்டிருந்தால் இதயத்துக்கு கெடுதல் என்றும் சொல்கிறார்கள்.
 
செல்போனை நம்பி வீட்டு டெலிபோன்களின் உறவை துண்டித்துக் கொள்ளாதீர்கள் ஏனெனில் செல்போன் “ Person specific” வீட்டு போன்கள் “Location Specific” அல்லவா!
 
நாம் என்ன வேலையாக எங்கிருந்தாலும் நம்மிடம் செல்லில் தொடர்பு கொண்டவர் கேட்கும் கேள்வி எங்கே இருக்கிறீர்கள் என்பதுதான் என்னுடைய Privacy கெட்டுவிடுகிறது. அதனால் தான் நான் செல்லே வைத்துக் கொள்வதில்லை என்று இயக்குனர் பாலா ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார்.
 
காதில் வைத்து பேசிக் கொண்டே அலைபவர்களைப் பார்த்து எரிச்சலில் மூளை சூடாகிடப் போகுது என்று பேசுவோம், ஆனால் கேன்சரே வருவதற்கு காரணங்கள் உள்ளன. குறைந்த அளவே மீடியாக்களில் பிரபலபடுத்தபட்ட உலக கைத்தொலைபேசி மாநாடு கடந்த செப்டம்பரில் 2009 வாஷிங்டனில் நடந்தது 13 நாடுகளிலிருந்து இடம்பெற்ற பேராளர்கள் உலக சுகாதார நிறுவன ஏற்பாட்டில் “செல்போனும் கேன்சரும்” என்ற தலைப்பில் ஆராய்ச்சி முடிவுகளை கட்டுரைகளாக சமர்ப்பித்தனர்.
 

 


எப்படி ரேடியோ அலைகள் கைத் தொலைபேசி வழி மனிதனின் DNA வை பதம்பார்க்கிறது என்பதுதான் ஆராய்ச்சியாளர்கள் விடை காண முயலும் கேள்வி. ஆனால் எத்தனை செல்போன்கள் தினமும் உபயோகிப்பாளர் வசம் செல்கின்றன. எந்த வயதுடையவர்கள் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்ற விபரங்களை விஞ்ஞானிகள் செல்போன் நிறுவனங்களிடமிருந்து பெறுவதில் வெற்றி பெற முடியவில்லை.
 
பெரும்பாலும் செல்போன் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்த மூளைக்கும், கபாலத்திற்கும் பாதுகாப்பானதே என்கிறார்கள். ஆனால் 20 வயதுக்கும் உட்பட்டவர்களை ரேடியோ அலைகள் எப்படி பாதிக்கும் என்பதில் அவைகள் மௌனம் காக்கின்றன.
 
ஜப்பானிலும் ஸ்வீடனிலும் 1990 களில் செல்போன்கள் பிரபலமாகத் தொடங்கின. இதன்படி நாம் கணக்குப் பார்த்தால் 20 வயதில் கைத் தொலைபேசியை பயன்படுத்தியவர்களின் உண்மையான பாதிப்பு 2030ல்தான் சரியாக தெரிய வாய்ப்பிருக்கிறது.
 
இருபதாம் நூற்றாண்டின் பாதியில் ஏற்பட்ட புகைப்பழக்கம் மார்பு புற்று நோய்க்கு வித்திட்டதை அறிய 10 திலிருந்து  15 வருடங்களானது அதுவே பெண்களின் பாதிப்பை கண்டறிய 10 வருடங்கள் தள்ளிப்போனது.
 
உலக நாடுகளில் இஸ்ரேல் மட்டும் தான் கைத் தொலைபேசி நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் கைத் தொலைபேசிகளில் எந்தெந்த மாடல்களில் எவ்வளவு எமிஷன் அளவு உள்ளது என்பதைக் கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தது. ஐரொப்பிய யூனியன் சிறுவர்கள் கைத் தொலைபேசி உபயோகிப்பதற்கான விதிமுறைகளை இப்படி சொல்கிறது.
 
1.         போனைக் காதில் வைத்து பேசாதீர்கள்
2.         SMS அல்லது ஸ்பீக்கர் போன் பயன்படுத்துங்கள்
3.         சட்டைப்பையில் எந்நேரமும் போனை ஆன் செய்து காதில் ஹியரிங் பீஸ் பொருத்திக் கொண்டு பேசுவதை தவிர்த்து எப்போது தேவைப்படுகிறதோ அப்போது ஆன் செய்யுங்கள்
 
இது எல்லாம் நடக்குமா?
 
2030க்கு பிறகு செல்லைப் பற்றி கட்டுரை எழுத விசயம் கிடைக்குமா… பார்ப்போம்…
 
அப்துல்காதர் ஷாநவாஸ்

Advertisements
பின்னூட்டங்கள்
  1. pandiammalsivamyam சொல்கிறார்:

    பழங்குடி மக்களுக்கு “செல்” தெரியாது. மகிழ்ச்சியாக இருக்கத்தெரியும்.செல்போன்,
    டிவி, இத்தியாதி கண்டுபிடிப்புகள் நமக்கு இன்பம் தருவனபோல் தோன்றினாலும்
    துன்பம் தருபவைகளே.மகிழ்ச்சியை தொலைத்துப்போடும் இவைகளிடமிருந்து மீள
    மனிதன் மிகவும் போராடவேண்டியிருக்கும்.2030ல் தனக்கு வேண்டிய உணவைப்பெற மனிதன் போராடுவானா? இல்லை செல்லுக்கா? பார்ப்போம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s