தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே

Posted: ஏப்ரல் 8, 2010 in பத்தி
குறிச்சொற்கள்:

Acnielsen அக்நியல் சென் 2005ல் நடத்திய ஆய்வில் இரவில் கண்விழிக்கும் மக்களைக் கொண்ட (இரவு ஆந்தைகள்) நாடுகள் அதிகம் ஆசியகாக் கண்டத்தில் உள்ளன என்கிறார். அதற்கு அவர் ஒரு பட்டியல் தருகிறார்.

தைவான்  – 69
கொரியா  – 68
ஹாங்காங் – 66
ஜப்பான்  – 60
சிங்கப்பூர்  – 54
மலேசியா  – 54
தாய்லாந்து  – 43

இத்தனை சதவிகித மக்கள் 12மணிக்கு மேல் தூங்கச் செல்கிறார்கள் என்கிறார்.

மற்ற நாடுகளையும் குறிப்பிடுகிறார். இதில் அமெரிக்கர்கள் இடம்பெறவில்லை.

Mr.Poh வேலை கேட்டு வந்தவுடன் அவருடைய வயதைப் பார்த்து தயக்கமாக இருந்தது. ஆனால் வேலையில் அவர் காட்டிய சுறு சுறுப்பு என்னைத் திகைக்க வைத்தது. வீட்டுக்கு கிள்புங்கள் என்று சொல்லும் வரை வேலை பார்ப்பார். வேலை முடிந்து உடனே செல்லாமல் டேபிளிலேயே உட்கார்ந்திருப்பார். வீட்டில் யாரும் உறவினர்கள் இல்லையோ என்று நினைத்துக் கொள்வேன். ஒரு வாரம் தொடர்ந்து வேலை பார்த்தார். அதற்கடுத்த நாள் திடீரென்று 3 பேர் வந்து அவர் தட்டை கழுவிக் கொண்டிருக்கும் போது அலேக்காக அவரைத் தூக்கினார்கள் No No என்று சத்தம் கேட்டவுடன் கடையில் உள்ள அனைவரும் ஓடிவந்து என்ன  என்று விசாரித்தோம்.

எந்தக்  கேள்விகளுக்கும் அவர்கள் பதில் சொல்லவில்லை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று ஆம்புலன்ஸில் ஸ்டெரிச்சரில் படுக்க வைத்து விட்டார்கள். Please tell there to leave me’ என்று கெஞ்சிக் கொண்டிருந்தார் Mr.Poh அவருடைய பார்வை என்னை நோக்கி நான் நன்றாகத்தானே வேலை செய்கிறேன் என்னை விட்டு விடச் சொல்லுங்கள் என்று கெஞ்சியது. முதன் முதலில் அப்படி ஒரு காட்சி என் மனதை மிகவும் உருக்கியது. என்ன ஏது என்று வந்தவர்களிடம் விசாரித்தேன்.

நீங்கள் தான் கடை உரிமையாளரா ?

ஆமாம் என்றேன் எவ்வளவு நாட்கள் இவர் கடையில் வேலை செய்கிறார் என்று கேட்டனர், ஒரு வாரமிருக்கும் என்றேன் இவர் தூங்கி 5 நாட்களாகவிட்டது 48 மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்காமல் இருந்து விட்டார். ஏற்கனவே Wood bridge Hospital-ல் இருந்தவர், கண்காணிப்பில் இருந்தார், இவரை இன்றுதான் தேடிப்பிடித்தோம் என்றார்கள். ஆனால் பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் தெரியவில்லையே என்றேன். அவர் வீட்டிற்கு தூங்க வரும் நேரம் குறைந்து விட்டது. சரியான மருந்துகளும் எடுத்துக் கொள்ளவில்லை என்றார்கள்.

வாழ்வுக்கும் உறக்கத்துக்குமிடையே எத்தனை சம்பவங்கள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. Mr.Poh வை ஆம்புலன்ஸில் கூட்டிச் செல்லும்போது கடையில் கூட்டம் கூடிவிட்டது அந்த நபரின் குடும்ப சூழலிலும் அந்தரங்கத்திலும் யாரும் தலையிட்டு எந்த சிறு கேள்வியும் கேட்டுவிட முடியாது. ஆனால் மன நோயாளி பற்றி எழுப்பப்படும் அவ்வகைக் கேள்விக்கும் ஏதாவது பதில் சுமத்தப்பட்டுவிடும். என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் பைத்தியமா? எப்படி கடையில் சேர்த்தீர்கள்? முதலில் உங்களுக்கு தெரியாதா? என்பதாக இருந்தது.

ஒவ்வொரு உணவு கடைத் தொகுதியிலும் ஏதாவது ஒரு மன நோயாளி அல்லது குணமடைந்தவர்கள் இருக்கிறார்கள். கண்காணிக்கப்பட்டு சரியான தூக்கத்திற்கு அவர்களுக்கு தொடர்ந்து மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.மருந்து கொடுக்கும் செவிலியர்கள் யாரையோ தேடி அலைவார்கள் சில நேரங்களில் அமைதியாக வந்து ரொட்டி வாங்கிச் செல்லும் நபராகக் கூட இருக்கும். மருந்து உட்கொள்வதை நிறுத்தியிருப்பார் கட்டுக்கு அடங்காமல் போகும் நபர்களை துரத்திப் பிடிப்பார்கள்.

மூளை திரவத்தினுள் மிதக்கிறது, அந்தத் திரவம் வற்றி விட்டாலோ திரவம் சுமக்கும் சுரப்பியில் கோளாறு என்றாலோ இவர்களுக்கு கோளாறும் தடுமாற்றமும் வருவதுண்டு. அதனால்தான் கோபமாகவும் எரிச்சலாகவும் அலைபவர்களைக் கண்டால் மூளைத் தண்ணி வத்திப்போச்சு என்று சொல்கிறார்களோ என்னவோ…

Mr.Poh என்னை விட்டு விடச் சொல்லுங்கள் என்று என்னிடம் கெஞ்சியது அவர் தொடர்ந்து தான் செய்யும் வேலையில் தன்னை மறந்திருந்திருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது. அவருடைய நன்மைக்குத்தான் சிகிச்சைக்கு கொண்டு செல்கிறார்கள் என்று அவருக்குத் தெரியவில்லை, அது தெரிய வந்தவுடன் என் கடைக்கு வேலைக்கு வர தோன்றுமா? தேரியவில்லை…

Advertisements
பின்னூட்டங்கள்
 1. N.V.Sathiyamurthy சொல்கிறார்:

  Dear brother Nawas, Today only I had time to read your articles “ROJAAK’ through Uyirosai.Really very nice. This is nothing but the history of your experiences. I also an old
  student of same K.M.C of Adirampattinam..you may know one of our Asst Prof of History Mr.Batcha
  He will always say THE HISTORY IS NOTHIG BUT A BUNDLE OF GAS WITH FALSE. But our HOD of History Pro.Mr.Jeyaraj always say HISTORY IS THE RECORD OF PAST RECORDS WITH FACTS & TRUES. I agree with this. Because articles reflects what you read everyday,what you experience in your day-to-day life-what you earn & learn from your circle…really superb.You touch all the topics..your way of expression very interesting.. well done..keep it up..In Tamil Naadu we are telling that MADURAI is the THOONGAA NAGAR. After I came to singapore I thought singapore but after read your article I wonder how it goes TAIWAN.. I SALUTE TAIWANESE ( may be if they spend their time in PUB I withrew my salute).Cell phone is sucking our time,money & health..there is no compromise…As a Restaurant CEO your tasty expression of fish curry is more better than Naanchil(li) Naadan..I really contribute your writings to (y)our Brother-in-Law Oppilaan A.Mohammed sithik( he is really a OPPILLAN THAAN).Your thinkings about Kavidhai is also very interesting to read (You can only write like this).Your comments,opinion on Mr.K.T.M.Iqbaal,Rahmaan,view on 4D.. I & singapore readers will be very thankful to you if you publish all these in one collection..with thanks & expectations…N.V.Sathiyamurthy

  • pandiammalsivamyam சொல்கிறார்:

   அக்நியல் சென் 2005ல் நடத்திய கணக்கெடுப்பில் இந்தியா ஏன் வரவில்லை?இரவு ஆந்தையார் ,கழுகு ரிப்போர்ட் செய்வது தெரியவில்லை போலும்! Mr.Pohவின் கதை
   பரிதபத்திற்குரியது_ என் கதை கேளுங்கள். நான் வணிகவரித்துறையில் நிலக்கோட்-டையில் பணியாற்றியபொழுது உதவி வணிகவரி அலுவலருடன்
   விடியவிடிய லாரி செக் பார்த்தேன். காலை 9மணிக்கு வீட்டுகுச் சென்றவன்
   காலைக்கடன் முடித்துகுளித்து சாப்பிட்டு காலை 10.45க்கு ஆபீஸ் வந்தேன்
   வாசலில் உ.வ. வ.அ.என்னை அவசரமாக உள்ளே அழைத்தார். ஆபீஸில் மையஹாலில் வைத்து ,”ஆபீஸ் வரும் நேரமா இது? மணி ன்ன?”.எனப்பலவாராக கேட்டு எல்லாப் பணியாளர்கள் முன்னிலையில் கூனிக்குறுக வைத்துவிட்டார். நான் என்மேல் குற்றமில்லை என்பதற்காக அவருடன் பணிபுரிந்ததை சொன்னேன். உடனே அவருக்கு கோபம் கூடிவிட்டது. நான் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.
   “விடுப்பு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்கிறேன்” என்றேன். ‘தேவையில்லை
   வருகைப்பதிவேட்டில் கையெழுத்துப்போடுங்கள்” என்றார். போட்டேன்’. பணியாளர்கள் திகைத்து நின்றார்கள். உடன் தன் அறைக்கு அழைத்து மெதுவாக அன்புடன் பேசினார்.” இன்று டி.சி.டி.ஓ.விடுப்பு. நான் தான் பொறுப்பு. நீங்கள் வீட்டுக்
   குப்போய் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு மாலை வந்தால் போதும்” என்றார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது . மனீதர் கலையில் நன்றாகத்தானே பேசினார் என
   நினைத்தேன். அவர் சொன்னார்”நீங்கள் என்னுடன் பணிபுரிந்தது அனைவருக்கும் தெரியும் .ஆனால், ஆபீஸுக்கு நேரத்திற்கு சரியாக வரவேண்டும். மற்றவர்கள் உங்களுக்கு த்னிச்சலுகை கொடுப்பதாக எண்ணுவார்கள்” என்றார்.”நான் நீங்களே வேலை பார்க்கும்போது நான் வீட்டுக்கு போகமாட்டேன்” என்று சொல்லி ,அன்றிரவு
   10 மணிக்கு வீடு சென்றேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s