சிங்கப்பூர் ஜமாலியன்

Posted: ஏப்ரல் 12, 2010 in பத்தி
குறிச்சொற்கள்:,

 “சேர்ந்து காத்து செலவு செய்கின்றதோர்

     ஆக்க வழியை அறிந்தவர் வள்ளல்…

ஜமால் முஹம்மது தமிழ் மக்களின்

  கல்விப் பசிக்கு கனிகள் கொடுத்தவர்

ஊரணிபோல் உலகம் முழவதும்

உண்ணக் கிடைப்பது உயர்ந்தோர் செல்வம்”

நன்றி: நாம் இதழ்

 

கல்லூரி காலத்து நண்பர்கள் திடீரென்று உங்கள் முன் வந்து நான் யார் தெரிகிறதா? என்று கேட்டு நாம் அடையாளம் தெரியாமல் அதிர்ச்சியில் நிற்கும்போது பழைய நினைவுகளை உசுப்பி விட்டு என்னை மறந்து விட்டாயே! என்று புளங்காகிதம் அடைந்த நிகழ்வுகள் ஜமால் முஹம்மது அசோஸியன் கூட்டத்தில் உணர்வுபூர்வமாக கரை புரண்டன.

“Batch Mate” ல் கிளிக் செய்து யாராவது 1980 கெமிஸ்ட்ரி பேட்ஜ் இருக்கிறீர்களா என்று கண்டுபிடித்த நண்பர் ஜலாலுதீன் காலையில் 9.30 மணிக்கெல்லாம் ஜலான் சுல்த்தான் சென்று விட்டோம். வந்திருந்த 40 பேரும் அவரவர் நணபர்களை தேடிப் பிடித்து பேசிக் கொண்டிருந்தனர். எனக்கு ஜலால் இரண்டு நண்பர்களை கொண்டு வந்து நிறுத்தினார். ஓரளவு கண்டு பிடித்துவிட்டேன். ஆனால் அவர்களுக்குத்தான் என்னை அடையாளம் தெரிந்து கொள்ள நேரம் பிடித்தது!

ஜமாலியன் உலகெங்கும் பூத்துக் குலுங்குகின்றன. சிங்கப்பூர் தோட்டத்தில் அவைகளைத் தேடீப் பிடித்து மாலையாக்கும் மந்திரக் கைகள் திரு.M.A.காதர் அவர்களுக்கு வாய்க்கப்பெற்றிருப்பதாகவே கூட்டத்தில் அனைவரும் உணர்ந்தோம்.

                  (போட்டாவில் என்னுடன் வாழ்வில் தொடர்ந்து வரும் என் கல்லூரி நண்பர் ராஜாமுஹம்மது)

 நாம் படித்தோம் பலன் பெற்றோம் அதனால்தான் கல்லூரி புகழ் பாடுகிறோம் என்பதை மறுதலித்து பெருமைபடக் கூடிய பல விசயங்களை கல்லூரி முதல்வர் கூட்டத்திற்கான தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்கள்.

தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 8975

18 UG 19PG 13Mpil மற்றும் 12 PHDனு பாடத்திட்டங்கள் தற்போது உள்ளன.

சுமார் 331 பேராசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அனைத்து மதத்தவர்களும் இதில் அடங்கும்.

 எல்லாவற்றிக்கும் மேலாக இந்தியாவில் கேப்பிடேஸன் பீஸ் மாணவர்கள் சேர்க்கையிலும் ,கல்லூரி பேராசிரியர் சேர்க்கையிலும் பெற்றுக் கொள்ளாத ஒரே கல்லூரி நிர்வாகம் ஜமால் முஹம்மது கல்லூரி.

இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்கள் எங்கெங்கு சிரமத்திற்குள்ளானாலும் தோள் கொடுக்க உறுதி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கல்லூரி முதல்வர்  Dr.M.SHEIK MOHAMED பேசியது கல்லூரியின் இன்றைய வளர்ச்சிப் போக்குக்கு கட்டியம் கூறுவது போல் இருந்தது.

ஜமாலியன்ஸை சிங்கப்பூரில் அடையாளம் கண்டு Data Base-ல் கொண்டுவர வேண்டியுள்ளது.

 நீங்கள் ஜமாலியனா….

என்னுடைய தொடர்பு எண் 82858065

அல்லது

Mr.M.A. KADAR தொடர்பு எண் 63981020

 

Advertisements
பின்னூட்டங்கள்
 1. Abdul Rasheed from Qatar சொல்கிறார்:

  Dear Kadar Bhai

  You have taken me back 30 years! I wonder how could you maintain such a relation with
  all our colleagues!!. I am very weak. No one could forget the golden time of
  his college period. I too. Very nice to see our old photographs. An unknown feelings
  of eager to go back prevails in my heart!!. Keep in touch. Add me also to your Jamaliyan
  group.

  So surprising is your present photograph. You were one of the slim personality in our group!!!

  Convey my regards to Jalal, Raja Mohamed and others in Singapore, India else where

  Abdul Rasheed

 2. கடிதம் – 1 « ரோஜாக் சொல்கிறார்:

  […] வ/மா/தி at 11:11 மு.பகல் […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s