உதுமான் கனி நினைவுகள்

Posted: ஏப்ரல் 14, 2010 in கவிதை, பத்தி
குறிச்சொற்கள்:

வாழ்க்கையில் எந்தத் தனித்துவ பிரச்னை எழுந்தாலும், அதற்கு அதே தளத்தில் தீர்வு கிடைக்காது. அதை விட உயர்ந்த அல்லது ஆழமான தளத்தில்தான் அதற்கான தீர்வு காத்திருக்கும் என்பார்கள்.

புத்தகங்கள் அந்தத் தளத்தை எனக்கு அமைத்துக் கொடுத்தன. குமுதம், ஆனந்த விகடன் என்று ஆரம்பித்து, இன்று நவீனம், பின் நவீனம் என்று என் சிந்தனைகளை அப்படியே மாற்றிப் போட்டிருக்கிறது.
 
எழுத்தாளர்கள் வெறும் கதைக்காரர்கள் அல்ல. எந்தத் தொழிலாய் இருந்தாலும் புத்தகங்களை நேசித்து, வாசித்து தன் எண்ணங்களுக்கெல்லாம் நியாயத்தையும் ஆளுமைகளையும் தேடிக் கொண்ட எத்தனையோ மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களின் நட்பை பெறுவதில் முயற்சி செய்து கொண்டே இருப்பேன்.

மறைந்த திரு. உதுமான் கனி அவர்களின் எனக்கு தூரத்து உறவினர். அவர் எனக்கு 3 வருடங்கள் சீனியர் ஊரில் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்கு வந்திருந்தார். அப்போது நான் சிங்கப்பூர் வரவில்லை. ஊரில்தான் இருந்தேன். எங்கள் இரண்டு பேருக்குமே புத்தகங்கள் ஒரு பாலமாக இருந்தது.
 
நான் அவர் ஊரில் இருந்த காலத்தில் சிற்றிதழ்களைக் கொண்டு போய்க் கொடுப்பேன். அவர் ஒரே மூச்சில் பார்த்துவிட்டு திருப்பிக் கொடுத்துவிடுவார், அவருக்கு திருமண ஏற்பாடுகளை அவரது பெற்றோர்கள் செய்து கொண்டிருந்தார்கள். அவர் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். நான் அவரிடம் பழகுவறைப் பார்த்து, அவரிடம் “ஊரில் திருமணம் செய்ய சம்மதமா?” என்று கேட்கச் சொன்னார்கள். நான் அவரை விட வயதில் சிறியவன். எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டே அவர் சிங்கப்பூர் கிளம்பி வரும் வரை “இதோ பேசுகிறேன், பேசுகிறேன்” என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து, கடைசியில் ஒரு வழியாக “எப்போது திருமணம் செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் தெளிவாக ஒரு வாக்கியம் சொன்னார், “சிங்கப்பூரில் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன்” என்று. அதற்குப் பிறகு அவர் சிங்கப்பூர் திரும்பி வந்துவிட்டார்.

நான் இளங்களை பட்டப் படிப்பு முடிந்து முதுநிலைப் படிப்பு தொடர இருந்த நேரத்தில், எங்கள் கிராமத்தில் தேசிய வங்கியை அமைக்க ஊர்ப் பெரியவர்களுடன் இணைந்து முயற்சிகள் எடுத்து, வங்கியைத் திறக்க வைத்தேன். இதைக் கேள்விப்பட்ட உதுமான்கனி, என் நண்பர்கள் மூலம் “நல்ல காரியம் செய்திருக்கிறார். காதரிடம் கேட்டதாகச் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

நான் மத்திய அரசு வேலையை விட்டுவிட்டு சிங்கப்பூருக்கு வந்து குடும்பத்துடன் செட்டிலானவுடன் அவரை சந்திப்பதை தவிர்த்தேன். நல்ல வேலையை விட்டுவிட்டு இங்கு வர வேண்டிய காரணங்களை பேட்பார் என்ற எண்ணத்தினால், பயத்தினால் நான் அவரை சந்திக்கவில்லை. “விசு அரட்டை அரங்கம்” நிகழ்ச்சியில் என்னைப் பார்த்துவிட்டு, “விரிவாகப் பேசுவோம். போன் செய்” என்றார். நான் ரொட்டி கடைகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு முறை குடும்பத்துடன் அங்கு வந்துவிட்டார். நான் அவர் கண்ணில் படாமல் மெதுவாக பின் வழியாக வெளியேறி விட்டேன்.

நான் அவரைத் தொடர்ந்து சந்தித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது எனக்குள் உழன்று கொண்டிருக்கிறது.

நேற்று சரியாக இருந்தது
இன்று தப்பாக இருக்கிறது
நேற்று தப்பாக இருந்தது
இன்று சரியாக இருக்கிறது
நேற்றிலிருந்து நாளையை
பைனாகுலர் எங்காவது இருக்கிறதா

என்ற தேவதச்சனின் கவிதை என்னைது துரத்துகிறது.

வாழ்க்கையும் வாசிப்பும் இணைக்கிறபோது எழுதுவது இயல்பாக வருகிறது. ஒரு வாசகன் நீண்ட காலத்துக்கு வாசகனாகவே இருக்க முடியாது. அவன் தன்னை வெளிப்படுத்தக் கூடிய ஒரு கட்டத்திற்கு வரவில்லையெனில் வாசிப்பு சோம்பேறி ஆகிவிடுவான் என்ற வார்த்தையில் உந்தப்பட்டு நானும் கவிதை எழுதினேன்.

19-12-1997

“சில்க் ஏர் விபத்து”

பட்டுக் காற்றின் சோக கிதங்கள்
 
பட்டுக் காற்றில் பறந்த குளங்களே பறந்து போன இதயங்களே!
ஆற்றுப் படுகையில் ஆழப் புதைந்தால் என்ன! தங்கள் இதயச் சுவடுகள் இங்கு பத்திரமாக உள்ளன.

இதோ இந்த மண்ணில் ஆயிரம் ஆறுகள் ‘மூசி’ ஆறு மட்டும் ஏன்அவப் பெயரைத் தேடிக் கொண்டது.
ஆகாயத்தில் அற்புதங்கள் நிகழும் ஆனால் அவலம் நிகழ்ந்தது ஏன்?
‘உயரப் பறந்த குயில்களே! உங்கள் உறவு குயில்கள் தங்கள் நிழல்களை தேடின உப்பங் கழியில்.

ஆனால் தாங்கள் மறைந்ததென்னவோ மின்னல் தோன்றும் மேகக் கூட்டத்தில் அல்லவா!
 
அம்மா, அப்பா, அன்பு மனைவி,  கணவன், தம்பி, தங்கை, காதலன் காதலி இந்த வரிசையில் நீங்கள் இழந்த உறவுகள்.ஆயிரம். இதுவே இங்கு கடைசியாக இருக்கட்டும்.

Advertisements
பின்னூட்டங்கள்
 1. pandiammalsivamyam சொல்கிறார்:

  “நீ நடக்க்கும் பாதையில் எந்தவிதமான பிரச்சினையும் வரவில்லை என்றால்
  -நீ தவறான பதையில் சென்றுகொண்டிருக்கிறார்” என்றார் விவேகானந்தர்
  “புதிது புதிதாய் நாள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன
  நேற்றைய செய்திகளுடன் “–குப்பைகவிஞர்
  “எது அவனது பலமோ
  அதுவே அவனது பலவீனமாகிப்போகும்-ஒருநாளில்” -படித்தது
  உதுமான்கனி நினைவு ப்ல கதைகள் சொன்னது தெரிகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s