ஒரு விடுகதையும்… விடை சொன்ன கொசுக்களும்..

Posted: ஏப்ரல் 16, 2010 in பத்தி
குறிச்சொற்கள்:,

“வேறு வழியில்லை வலி நிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து கொடுங்கள்”

 “அநேகமாக ஒரு வருடம் வலி இருக்கும் மற்றபடி “டெங்கி” மாதிரி ஆபத்தில்லை…

 ஊருக்கு புறப்பட்டு போவதற்கு முன்பு Tan Tok Seng மருத்துவமைனியல் 3 ஊசிகள் தொடர்ந்து போட்டுக் கொண்டால் பயமேயில்லை… இது தங்களுக்குத் தெரியாதா?

“ஜெயமோகனின் வலைத் தளத்தில் தன் மனைவிக்கு செய்த சிகிச்சையை பற்றி பத்தி எழுதியிருந்தார்”

 “உணவில் இக்காம்பிலிஸ் (நெத்திலிக் கருவாடு) சேர்த்துக் கொள்ளுங்கள் சரியாகிவிடும்…

 “ஆயர்வேதமே சிறந்தது,  டாபர் கம்பெனி மருந்துக்கள் உடனே வலியைக் குறைக்கின்றன”

“தாங்கள் இறை நம்பிக்கை உடையவரா அவனிடமே விட்டு விடுங்கள்”

“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பாதிப்புகள் வருகின்றன, எனக்கு மூக்கு கறுத்துவிட்டது”

இவையெல்லாம் நான் என் மனைவிக்கு சிக்கன் குனியா காய்ச்சல் வந்து அவதிப்பட்டு மருந்து அலைந்தபோது நண்பர்களிடமிருந்து கிடைத்த தகவல்கள்.

பல விதமான சிகிச்சைகளுக்குப் பிறகு வலி நிவாரணி மாத்திரைகள்தான் பயனளித்தன. வலி நிவாரணிகளை எவ்வளவு நாட்கள் தொடர்வது, திருடனை பிடிக்க நாயை அனுப்பி திருடன் வெளியே ஓடிவிட்ட போதும் நாய் வீட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும்…

சிக்கன் குனியா பற்றி இன்னமும் என் கேள்விகளும், அதற்கான பதில்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன..

இந்த கொசுக்கள்தான் எவ்வளவு பேர் வாழ்வை நிலைகுலையச் செய்கின்றன. ஒவ்வொரு வருடமும் உலகில் 250 மில்லியன் மக்கள் மலேரியா நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் ஒரு மில்லியன் பேர் இறந்து விடுகிறார்கள்.

96.8 ரேடியோ செய்தியைக் கேட்டுக் கொண்டே தியோன் பாரு சிறுவர் பூங்காவினுள் நடந்து கொண்டிருந்தேன். சரியாக காலை எட்டு மணிக்கெல்லாம் மஞ்சள் பட்டாம்பூச்சிகள் கூட்டமாக பறந்து சென்று ஆங்காங்கே செடிகளை வட்டமிட்டன. தொடர்ந்து மூன்று நாட்களாக அவைகள் சரியான நேரத்திற்கு அந்த பகுதியை வட்டமிடுகின்றன. பட்சிகள் அனைத்திற்கும் தமிழில் பெயர் இருக்கிறது ஆனால் இந்த பட்டாம்பூச்சிகளுக்கு தமிழில் இதுவரை பெயர்கள் வைக்கப்படவில்லை வண்ணத்துப் பூச்சிகள் வண்ணங்களைக் கொண்டும், ஆங்கிலப் பெயர்களிலும் இயற்கை ஆர்வலர்கள் பெயரிட்டுக் கொள்கிறார்கள்.

அந்த மஞ்சள் பட்டாம்பூச்சிகளுடன் அதிசயமாக ஊசித் தட்டானும் கூடவே சென்றது, இந்த ஊசித் தட்டான் (Dragon flies) சிறுவயதிலிருந்தே நமக்கு பார்த்தவுடன் சிலிர்ப்பை ஏற்படுத்தக் கூடியவை இவைகளின் “லார்வா” பருவமே 6 மாதத்திலிருந்து 1 வருடம் வரை நீடிக்கும் ஆனால் முதிர்ந்து வெளியேறியவைகள் ஓரிரு வாரங்களே உயிரோடிருக்குமாம்.

சிங்கப்பூரில் கென்ட்ரிட்ஜ், பீஸான், தோபோயோ பூங்காக்களில் 40 வகையான தட்டாம்பூச்சிகள் இருப்பதாக அண்மையில் தேசிய சுற்றுப்புற வாரியம் ஆய்வு செய்திருக்கிறது. செயற்கை பூங்காக்களில் இவைகள் கொஞ்சம் தயங்கி தயங்கித்தான் இனப்பெருக்கம் செய்கின்றனவாம். இஸ்ரேலும் எகிப்தும் தட்டாம்பூச்சிகளை பூங்காக்களில் பெருமளவு இனப்பெருக்கம் செய்கின்றன.

இவைகளைப் பற்றி இவ்வளவு பில்டப் ஏன் எனில் இவைகள் டெங்கி மற்றம் மலேரியா கொசுக்களுக்காக தீராப் பசியை கொண்டுள்ளவைகள். தன்னுடைய 360º பார்வையில் கண்ணில்படும் ஒரு கொசுவையும் இவைகள் விட்டு வைக்காதாம்.. மனித இனத்திற்கு உதவும் இயற்கையின் இன்னொரு பரிமாணம் இந்த தட்டாம்பூச்சிகள்.

அப்படியே இன்னொரு நல்ல செய்தி British News Paper, the Daily Telegraph  பறக்கும் தடுப்பு மருந்து என்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. மலேரியா தடுப்பு மருந்தை உடம்பில் செலுத்தும் கொசுவை உற்பத்தி செய்ய ஜப்பான் பல்கலைகழகம் முனைந்துள்ளது.

ANOPHELES STEPHENSI கொசு Leishmania என்ற தடுப்பு மருந்தை எடுத்துச் செல்லும் வகையில் அதன் எச்சியில் (Saliva) DNA மாற்றம் செய்து வளர்க்கப்படுகின்றன இந்தவகைக் கொசுக்கள் 60 வகைகள் உள்ளனவாம்.

பேராசிரியர் Shigeto Yosida சொல்கிறார். இந்தவகைக் கொசுக்கள் நம்மை எத்தனை முறை கடித்தாலும் நம் உடம்பில் தடுப்பு மருந்து ஏற்றப்பட்டுக் கொண்டே வீரியம் கூடாமலும் குறையாமலும் இருக்குமாம். இவைகள் நம்மை கடித்தவுடன் மலேரியா கொசுக்களின் ஜம்பம் நம்மிடம் பலிக்காதாம்…

நம் பால்ய வயது விடுகதை “டாக்டர் வந்தாரு ஊசி போட்டாரு காசு வாங்காமல் பறந்து போனாரு என்பதற்கு இந்தக் கொசுக்கள்தான் சரியான விடையைச் சொல்லியிருக்கின்றன.

Advertisements
பின்னூட்டங்கள்
  1. pandiammalsivamyam சொல்கிறார்:

    கொசுக்களாவது மலேரியா,டெங்கு, சிக்கண்-குனியா,என்று தனக்கென்று ஒரு வியாதியை வைத்துக்கொண்டுள்ளன. அந்த கொசுக்களில் வாழும் கிருமிகள் அந்த கொசுக்களை ஒன்றும் செய்வதில்லை(Host) ஆனால், மன்தன் தனக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து தனக்கும் தன்னித்துக்கும்- ஏன் உலகத்துக்கே கேடு செய்கிறான். நல்ல மனிதர்களை மட்டும் உருவாக்கம் செய்து வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்தேன். எதுமே பரபரப்பு இல்லாமல் ,எதிர்ப்பு இல்லாமல், கெடுதி இல்லாமல் ஒரு வாழ்க்கை.சீ! கற்பனையே வெறுப்பாகிப்போனது.இருக்கும் இந்த உலகம்தான் “ரோஜாக்”போல பலவிதமான சுவை கொண்டது.இது இப்படியே இருக்கட்டும் அப்போதுதான் இருக்கும் வாழ்வில்ஒரு “திரில்”!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s