பிரபஞ்சன் மற்றும் ஷாஜியின் வருகை-in Singapore)

Posted: ஏப்ரல் 20, 2010 in அழைப்பிதழ், சிறுகதை, நாவல், eசை
குறிச்சொற்கள்:,

‘எனக்குள் இருப்பவள்’
‘வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்’
‘மனிதர்கள் மத்தியில்’
‘சந்தியா’
‘சுகபோக தீவுகள்’
‘பூக்களை மிதிப்பவர்கள்’
‘குமாரசாமியின் பகல்பொழுது’

கதை சொல்வது மாதிரி இருக்கிறதல்லவா…

சிறுகதை, நாவல், சமூக விமர்சனக் கட்டுரைகள் என்று பல துறைகளில் முத்திரை பதித்த பிரபஞ்சனின் படைப்புகள்தான் இவைகள்.

தமிழக அரசும், புதுச்சேரி அரசும் இவரை சிறந்த எழுத்தாளர் என்று கௌரவித்துள்ளது.

என்னற்ற இலக்கிய மரியாதை பெற்றவர்.

அழகிய தமிழ், அங்கத நடை, அளவான பாத்திர படைப்பு, மனித நேயத்தை உன்னதப்படுத்தும் லட்சியம் இவரது எழுத்தின் சிறப்பு…

மனித சுபாவம் எல்லா எல்லா காலங்களிலும். எல்லா தேசத்துக்கும் இலக்கியத்தின் கருப்பொருளாக இருந்து வருவதை பார்க்கிறோம். உருவம், யுக்திகள் மாறலாம். இது மட்டும் மாறுவதில்லை. மனித சுபாவத்தில் இத்தனை சுழிப்புகள் இருப்பதாலோ என்னவோ, இத்தனை காதல் இத்தனை காரியங்கள் இங்கு சாத்தியமாகின்றன.

பல ஆயிரம் மைல்களை கடந்து வந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலேயே பிறந்த தமிழனுக்குள்ளும் செயல்பட்ட மனித சுபாவத்தை உடைத்துப் பார்த்த இவரது நாவல் ”வானம் வசப்படும்” சாகித்திய அகடாமி பரிசு பெற்றது.

சிறுகதைகள், நாவல்களும் ஒரு அனுபவத்துளி மட்டுமல்ல அது ஒரு முழு வாழ்வின் சிறு துளி. அதில் கூறப்பட்ட தளங்களுக்குள்ளே ஒரு முழு வாழ்வை நம் நினைவில் விரித்துக்கொள்ள முடிந்த எழுத்துக்கள் பிரபஞ்சனுடையவை…

வாருங்கள் …

 

எதிர்வரும் வெள்ளி (23.04.2010) மாலை 6.30மணிக்கு தேசிய நூலகத்திலும்
திங்கள் (26.04.2010) மாலை 7.00மணிக்கு ஆங் மோ கியோ நூலகத்திலும்
பிரபஞ்சன் மற்றும் ஷாஜியின் நினைவுகளை நிரப்பிக்கொள்ள…

அப்துல்காதர் ஷாநவாஸ்

பின்னூட்டங்கள்
 1. க.மதிவாணன் சொல்கிறார்:

  அன்பிற்கினிய தோழர் அவர்களுக்கு, வணக்கம்!
  இன்று தோழர் ஆதி அவர்கள் தங்களின் இணையத்தளத்தை எனக்கு அறிமுகம் செய்தார். தங்களின் பதிப்பு மிக அருமையாக இருந்தது. பல்வேறு தகவல்களை மிக எளிமையாக இயல்பான தமிழில் பதிவு செய்து செய்துள்ளீர்கள். இனி எனது அன்றாட வலை உலாவுதலில் தங்கள் வலை தளமும் இருக்கும்.

  தோழமையுடன்
  க.மதிவாணன்
  Deputy system manager
  O/o the Supdt of POs
  sivaganga Division
  sivaganga 630561

 2. கடிதம் – 2 « ரோஜாக் சொல்கிறார்:

  […] வ/மா/தி at 2:05 பிற்பகல் […]

 3. pandiammalsivamyam சொல்கிறார்:

  கூட்டத்திற்கு எத்தனை பேர் வந்தார்கள் என்பது எனக்குத்தெரியாது.ஆனால், –
  வானம் வசப்படும்-ஆனந்தரங்கம்பிள்ளை இந்த தமிழ் மக்களைக் காப்பாற்ற
  வெள்ளைக்காரதுரையிடம் பட்ட பாட்டை அறியமுடிந்தது. பிரபஞ்சனின்
  புத்திக்கூர்மையும்,சாதுர்யமும் அந்த கதாபாத்திரத்தில்–உள்ளது. இவரது பேச்சை
  இதுவரையிலும் கேட்டதில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s