கடிதம் – 2

Posted: ஏப்ரல் 29, 2010 in கடிதம்

///

க.மதிவாணன்
freewebs.com/kmathivanan
mathi1dsm@yahoo.co.in
117.206.113.184

அன்பிற்கினிய தோழர் அவர்களுக்கு, வணக்கம்!
இன்று தோழர் ஆதி அவர்கள் தங்களின் இணையத்தளத்தை எனக்கு அறிமுகம் செய்தார். தங்களின் பதிப்பு மிக அருமையாக இருந்தது. பல்வேறு தகவல்களை மிக எளிமையாக இயல்பான தமிழில் பதிவு செய்து செய்துள்ளீர்கள். இனி எனது அன்றாட வலை உலாவுதலில் தங்கள் வலை தளமும் இருக்கும்.

தோழமையுடன்
க.மதிவாணன்
Deputy system manager
O/o the Supdt of POs
sivaganga Division
sivaganga 630561

///

அன்புள்ள மதிவாணன்

தங்கள் வருகைக்கு நன்றி.

 நான் சிறுவயதில் மேஜிக் நிபுணர் லால் அவர்களின் மேஜிக் நிகழ்ச்சியை பார்த்திருக்கிறேன். முதல் காட்சியில் ஒரே மதத்தைச் சேர்ந்த பலர் கூடி ஒரு சிறு குவளையில் தண்ணீரை அள்ளி குடத்தை நிரப்புவார்கள். மேஜிக் லால் அந்த குடத்தை ‘ஓம் சக்தி’ என்று சொல்லி கவிழ்ப்பார் தண்ணீர் கொட்டிவிடும். திரும்ப திரும்ப ‘ஓம் சக்தி’ சொல்லுவார் காலியான குடத்திலிருந்து தண்ணீர் கொட்டாது.

 அடுத்த காட்சியில் பல மதத்தவர்கள் ஒன்று சேர்ந்து குவளையில் தண்ணீர் எடுத்து குடத்தில் ஊற்றுவார்கள் லால் ‘ஓம் சக்தி’ என்று சொல்லிக் கொண்டே குடத்தை கவிழ்ப்பார் தண்ணீர் கொட்டிவிடும். காலியான குடத்தை வைத்துக்கொண்டு மீண்டும் கவிழ்ப்பார் தண்ணீர் கொட்டோ கொட்டென்று கொட்டும்.  மத ஒற்றுமைக்காக இந்நிகழ்ச்சி அவரின் மேஜிக் ஷோவில் சேர்க்கப்பட்டியிருக்கும்.

 நிஜவாழ்வில் நான் நேரில் காலியான மனித மனங்களிலிருந்தும் ஒற்றுமை என்ற தண்ணீர் கொட்டுவதை மானாமதுரையில் வேலை செய்யும்போது உணர்ந்தேன்.

 ஆதிமூலம் மற்றும் நணப்ர்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்தேன். எங்கள் படிப்பு மேஜையில் மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ் படங்களை எங்களின் சிந்தனைக்கு வழிகாட்டியாக வைத்திருப்போம்.

பல தோழர்கள் மானாமதுரையிலிருந்து ASP-க்களாக  SP-களாக APMG -களாக பதவி உயர்வு பெற்று சென்றதற்கு காரணம் எங்கள் வாழ்வின் வழிகாட்டியாக K.R என்ற அற்புத மனிதர் கலந்திருக்கிறார். அந்த மானமதுரைக் கோட்டம் தங்களை போன்ற இளைஞர்களை இன்னும் சிறப்பானவர்களாக ஆக்கும் என்று நம்புகிறேன்.

 அடிக்கடி தொடர்பு கொள்வோம்…

Advertisements
பின்னூட்டங்கள்
  1. pandiammalsivamyam சொல்கிறார்:

    அந்த K R யாராக இருந்தாலும் நிச்சயம் மனித நேயம் மிக்கவராகத்தான் இருப்பார்.. அவ்ர் வைத்த மரங்கள் நிச்சயம் சுவைமிக்க கனிகளையே கொடுக்கும் உங்களைப் –
    போல. ஊருக்குள் இருக்கும் நல்கனிகள் கொடுக்கும் மரங்கள் பசித்தவர்களின் -நோயை தீர்க்கும்தானே!_

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s