மானாமதுரை மல்லி

Posted: மே 1, 2010 in பத்தி
குறிச்சொற்கள்:

 இப்போதெல்லாம் என் மகன் காரில் ஏறியவுடன் அத்தா, அம்மா இரண்டு பேருமே பின்னால் உட்கார்ந்து விட்டீர்கள் பேலன்ஸ் கிடைக்காது அத்தா முன்னால் வந்து உட்காருங்கள் என்று சொற்கிறான். மானாமதுரை பை-பாஸ் ரோட்டில் சீனியப்பா தியேட்டரில் படம் பார்க்கப் போகும்போது அம்மா பின்னால் இருக்கட்டும் நீ அசையாமல் முன்னால் உட்கார்ந்திரு என்று சொன்னால், அம்மா மடியில்தான் உட்காருவேன் என்று அடம் பிடிப்பான். காலம் இனிமையான நினைவுகளுடன் தேவையான மாற்றங்களையும் வாழ்வில் உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.

ஆனந்தவள்ளியம்மன் கோவில், அக்ரஹாரம் செட்டிதெரு, கன்னார் தெரு தோழர்களுடன் கால்நடையாக பேசிக் கொண்டே சுற்றிவருவோம்.

மானாமதுரை மல்லி என்பது எதுகை மோனைக்குத்தான் என்பதை மல்லிகைத் தோட்டங்கள் காய்ந்து போய்க் கிடப்பதை அங்கு சென்ற ஆரம்ப நாட்களிலேயே தெரிந்து கொண்டேன், ஆனாலும் இன்று நினைத்தாலும் மானாமதுரை நினைவுகள் மணக்கின்றன. ..

நான் முதலில் நண்பர்களுடன் குடியிருந்த பகுதி பிருந்தாவனம், அங்கு முதல் மாடியில் இரவு எங்கள் விவாதங்கள் நீண்டு கொண்டேயிருக்கும். ஆற்றோர நீண்ட தெருவில் வளைவு திரும்பியவுடன் கன்னார் தெரு.

13 ஆம் நூற்றாண்டில் மதுரை சிக்கந்தர் ஷாவிடம் இழந்த ஆட்சியை பிடிக்க திருப்பாண்டியன் ஆட்கள் படை எடுத்து வந்தபோது ஏர்வாடி பாதுஷாவிடம் உதவி கேட்க வந்த 12 அரேபியர்களில் 5 பேரை திருப்பாண்டியன் ஆட்கள் கன்னார் தெருவில்தான் கொலை செய்தார்கள். மறைந்த திரு.ஷரிப்பிடம் இந்தக் கதையைக் கேட்டு எங்கள் தூக்கத்தில் குதிரைகள் சத்தம் கேட்கும்…

மானாமதுரை என்ற பெயர் வீர வாரண மதுரை என்ற பெயரிலிருந்து மருவி வந்து நிலைப்பெற்றது. அங்குள்ள அனுமார் வித்தியாசமான தலைக் கவசத்துடன் காட்சி தருவார். விதவிதமான பொம்மைகள் களி மண்ணால் உருவாக்கி வெளியூர்களுக்கு அனுப்பி கொண்டிருக்கும் குலாளர் தெரு…

மாலையில் இலக்கிய வாதமும் விவாதமும் நடக்கும் ஆற்றுபடுகை…

சித்திரைத் திருவிழாவில் உயிர்ப்பித்து எழும் ஆட்டமும் பாட்டமும்…

சில நேரங்களில் இடங்கள்தான் நினைவுகள் என்று நகுலன் சொல்வார்…

2006-ல் வெளிவந்த ‘கிளிக்’ என்ற ஆங்கிலப்படத்தை அநேகமாக எல்லோரும் பார்த்திருப்போம். அதில் ஆடம் சிண்டலுருக்கு (Adam sandler) ஒரு ரிமோட் கண்ட்ரோல் கிடைக்கும். அதன் சக்தி டிவி சேனல் மாற்றுவதற்கல்ல வாழ்வில் வேண்டாத நிகழ்வுகளை அதில் முன்கூட்டியே பார்ப்பதற்கு வசதி இருக்கும். ரிமோட்டை பயன்படுத்தி அவற்றை FF செய்துவிடலாம், விருப்பமான நிகழ்வுகளை Play செய்யவும் இனிக்கும் நினைவுகளை Rewind செய்யவும் முடியும்.

முதலில் ஆடம் ரிமோட்டை பயன்படுத்தி மனைவியுடன் நடக்கும் வாக்குவாதங்களையும் அடிதடிகளையும் FF செய்து விடுவார். இப்படியே போய் Play செய்து கொண்டிருக்கும் இன்பமான வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடுகிறது. வயதான ஆடம் மரணப்படுக்கையில் மனைவி விவாகரத்து ஆகியிருக்கிறார். பிரியமான நாயும் தந்தையும் இறந்து போயிருக்கிறார்கள். ஆடம் அவைகளை FF செய்திருப்பதால் அவருக்கு இவ்வளவும் லேட்டாகத்தான் தெரிகிறது.  சே! வாழ்க்கை சப்பென்று முடிந்து விட்டதே என்று வேதனைப்பட்டு ரிமோட்டை எடுத்து மனைவியுடன் சண்டை போட்ட நிகழ்வை மறுபடியும் Rewind செய்துவிட்டு ரிமோட்டை தூக்கித் தூர எறிவதாக படம் முடிந்திருக்கும்.

நான் Play செய்ய நினைப்பது மானாமதுரை வாழ்க்கை நினைவுகளை…

Advertisements
பின்னூட்டங்கள்
 1. raman சொல்கிறார்:

  Madurai Malli Manakkudu. ungalin pathivukal supre Mr.

 2. கல்பனாகுமார் சொல்கிறார்:

  உங்களின் பரோட்டா அனுபவங்களை உயிரோசையில் வாசித்தேன்.

  ஒவ்வொரு பதிவும் வித்தியாசமாக உள்ளது.

  கல்பனாகுமார்
  சென்னை

 3. BEER MOHAMED A சொல்கிறார்:

  manamadurai malli nichayam mananthukonde irukkum

 4. BEER MOHAMED A சொல்கிறார்:

  Manamadurai malli nitchayam mananthu konde irukkattum

 5. அ.ப.சாகுல் ஹமீது சொல்கிறார்:

  நத்தத்தில் பிறந்து சிந்தனைச் சித்திரமாய்,
  சிங்கப்பூர்ச் சீமையில் ரீங்காரமிடும் தேனியாய்,
  மணக்கும் மாமலராய்,இனிக்கும் பலாவாய்
  திகழும் அன்பு அண்ணனுக்கு இந்த நத்தத்து தம்பி
  சாகுல் ஹமீதின் இனிய சலாம்!!
  உங்கள் வலைப்பூக்களை முகர்ந்து பார்த்தேன்.
  அதில் கடந்த கால நினைவுகளின் சாரல் என்னை
  நனைத்தது.நம் பிறந்த மண்ணுக்கே உரிய சாதிக்க
  வேண்டும் என்ற உத்வேகத்தில் சிப்பிக்குள் இருந்த
  நீங்கள் இன்று முத்தாகப் பிரகாசிக்கிறீர்கள்!
  வாழ்க! பல்லாண்டு! வளர்க! உங்கள் எழுத்துப் பணி!

  என்றும் அன்புடன்
  அ.ப.சாகுல் ஹமீது
  த/பெ. உதுமான் கனி

 6. pandiammalsivamyam சொல்கிறார்:

  நாம் என்னவேண்டுமென்று நினைத்து play பண்ணினாலும் அவ்ன் play வேறுவிதமாய்
  இருக்கிறது.நமக்கு அவன் play யை ஏற்பதை தவிற வேறு வழியில்லை.அந்த play
  செய்பவர் வேறுயாருமல்ல நாம்தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s