படித்தவர்களும் பாதாளச் சாக்கடையும்

Posted: மே 4, 2010 in பத்தி

வாடிக்கையாளர் ஒருவர் ‘துளோர் பாவாங்’ (முட்டைவெங்காயம்) ஒரு கோஸம் சாப்பிடுவார். அவரை கடையில் பார்த்தவுடன் உறுதியாக அவருடைய ஆர்டர் இதுவாகத்தான் இருக்கும், தட்டை கழுவி சூடாக இருக்கும் ஆனாலும் அதற்கு மேல் ஒரு ‘பொங்குஸ்’ பேப்பரைப் போட்டு பரோட்டாவை அதன்மேல் வைத்துக் கொடுக்க வேண்டும், அவ்வளவு சுத்தம். பரோட்டாபோடும் நபர் கழிவறைக்கும் சென்று வந்தால் கொஞ்ச நேரம் ஆர்டர் கொடுக்கத் தாமதிப்பார். ஒரு மாத காலமாக ஆள் கடைக்கு வரவேயில்லை அன்று மீண்டும் வந்திருந்தார் 30 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவுக்குச் சென்று வந்ததாகவும் அங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மாற்றங்கள் பற்றி அடுக்கிக் கொண்டே போனார். திடீரென்று ரயிலில் அபாயச் சங்கிலியை இழுத்தது போல் பேச்சை நிறுத்தினார். என்ன கொடுமைங்க லெவல் கிராஸிங்கில் பஸ்ஸை நிறுத்தியவுடன் ரயில் கடக்கும் வரை பஸ்ஸிலிருந்து இறங்கி ஆண்கள் எல்லோரும் சிறுநீர் கழிக்கிறார்கள். அதுவும் வெட்டவெளியில் இவ்வளவு முன்னேற்றத்துக்குப் பிறகும் கழிவறை வசதிகள் இல்லை என்று குறைபட்டார் பெண்கள் நிலைமையை கொஞ்சமாவது நினைத்துப் பார்க்கிறார்களா! என்று உணர்ச்சிவசப்பட்டார்.

இந்தியாவின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று சுகாதரமான பொதுக் கழிப்பறைகள் பெரிய நகரங்கள், கிராமங்கள் என்று பேதம் இல்லாமல் கழிப்பறைகள் கால் வைக்க முடியாத அசிங்கமான நிலையில் உள்ளன. அதுவும் சாலைப் பயணங்களில் சுகாதரமான கழிப்பறை வசதிகள் எங்குமே கிடையாது என்ற நிலைதான் உள்ளது. சமீபத்தில் ஐ.நா கணிப்பில் இந்தியாவில் கழிப்பறைகளை விட செல்போன்கள் அதிகமாகிக் கொண்டே போகின்றன என்ற தகவல் வெளியானது.

உலகெங்கும் சுகாதாரமான கழிப்பறைகள் உருவாக்குவதற்காக முழு நேரமாக இயங்கி வருகிறது. World Toilet Organisation இந்த நிறுவனம் உலகிலேயே முதன் முறையாக World Toilet College ஒன்றினை சிங்கப்பூரில் ஆரம்பித்திருக்கிறது. இங்கு கல்வி நிறுவனங்களுக்கான கழிப்பறைகள் மற்றும் சுகாதாரப் பயிற்சி பொதுக் கழிப்பறை நிர்வாகம் போன்ற பல்வேறு படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன.

நமது ‘துளோர் பாவாங்’  நண்பர் தொடர்ந்து இரண்டு பகல் ஒரு இரவு ரயிலில் பயணம் செய்திருக்கிறார். ஹைதராபத் சென்று இறங்கும் வரை கழிவறைப் பக்கமே போகாமல் பயணத்தை தொடர்ந்திருக்கிறார். தற்போது இரயில்வேயில் ஓரளவு சுத்தம் இருக்குமே என்று கேட்டேன் ரயில் கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் மலக் கழிவுகள் தண்டவாளம் எங்கு விழுவதால் அதனை தான் பயன் படுத்த மனம் ஒப்பவில்லை என்று சொன்னார் சிங்கப்பூரின் சுத்தம் அவருடைய உடலோடும் மனத்தோடும் எங்கு சென்றாலும் தொடரக்கூடியதாக இருக்கிறது.

விண்வெளி விஞ்ஞானத்திலும் செயற்கை அறிவுத் துறையிலும் புதிக கண்டுபிடிப்புகளை நோக்கி இளைய தலைமுறை நகர்ந்து கொண்டிருப்பதன் அடையாளமாக இந்தியாவில் ‘பாஷா நஸிம்’ என்ற மாணவி ரயில் பயண்படுத்த ஒரு புதிய கழிவறை ஒன்றினை வடிவமைத்திருக்கிறார். அது இரயிலில் சேரும் கழிவுகளை ஒரு தொட்டியில் சேகரித்து ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் நிற்கும் போது பொத்தானை அழுத்தினால் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு சுத்தம் செய்யப்படும்.  நஸிம் பாஷாவின் இந்த கண்டுபிடிப்க்கு சிங்கப்பூர் World Toilet College  விருது கொடுத்திருக்கிறது

(நன்றி: S.ராமகிருஷ்ணன்)

Advertisements
பின்னூட்டங்கள்
  1. பாண்டித்துரை சொல்கிறார்:

    ஷான் அசாருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவியுங்கள். இடம் பெயரும் போது நாம் சுற்றியுள்ளவைகளை கடந்து புதிய உலகம் புதிய பரிணாமம் என கொஞ்சம் மாறுபட்ட வாழ்தலில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அதுவும் அசாரின் ஓவியம் சார்ந்த பயணத்தில் கூடுதலான இடத்தினை கொரியா பெறக்கூடும்

  2. pandiammalsivamyam சொல்கிறார்:

    பாஷா நஸீம் கண்டு பிடித்ததை (நீங்கள் சொன்னது 05-04-2010) நான் தெரிந்துகொண்டது 01-03-2015ல் .இந்திய அரசாங்கத்தில் 120கோடிப்பேர் படிக்கவேண்டாமா? குடிக்கவே தண்ணீர் இல்லை. இதில் பொதுகழிவறை?
    கட்டாயம் தேசிய நதி இணைப்புக்கொள்கை உருவாகும். அ.ந்த பொன்னான நாளை என் வாழ்நாளிலேயே காண்பேன்.பிரதமர் மோடியின் காதுகளுக்கு எப்படியும் இது போய்ச்-சேரும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s