என் சுவை அந்தாதி

Posted: மே 8, 2010 in பத்தி
குறிச்சொற்கள்:, ,

உலகச் சமையல் கலையில் ‘மசாலா’ இல்லாமல் சுவை இல்லை. அரபு வணிகர்கள் மிளகு, கிராம்பு இவற்றை இந்திய தீபகற்பத்திலிருந்து மேலை நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினார்கள். ஆரம்ப காலத்தில் தங்களுடைய தனி வர்தகமாக (Monopoly) மோனோபோலி கோலாச்சி வந்த மசாலா மணப் பொருட்கள் வியாபாரம் 15ஆம் நூற்றாண்டில் வாஸ்கோடா காமா போன்ற மாலுமிகள் வருகையால் ஐரொப்பியர்களிடம் சென்றது.

தற்காலத்தில் அனைத்து வகை மசாலா மணப் பொருட்கள் (Spices) நாம் உபயோகிக்கிறோம், ஆனால் எப்படி அதை உணவுக் கலவையில் சேர்ப்பது என்பது சில ரகசியங்களையும் சந்தேககங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. சிலர் (Spices) (ஸ்பைசஸ்) சமைப்பதற்கு முன்பாகவும் சிலர் சமைத்த பின்பு பரிமாறும் சமயத்திலும் சிலர் ஏற்கனவே பதப்படுத்திய சமையலில் சேர்த்தும் சிலர் அப்படியே சாப்பிட்டும் பசியோடு ருசிக்கிறார்கள்.

தமிழில் ‘கறி’ என்ற வார்த்தை சங்கப்பாடல்களில் உலாவருவதும், பெரும்பான்மையான ஸ்பைசஸ் இந்தியாவின் இருப்பிடமாக இருப்பதும், கறிவேப்பில்லை தென்னிந்திய சமையலில் முக்கிய இடம் பெறுவதும் கறி (Curry) தமிழ் சமையல் பயன்பாட்டின் தொடக்கம் என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. ஆனால் கி.பி 1330ல் ரிச்சர்ட் II என்பவர் அது ஆங்கில வார்த்தை என்று சொல்லியிருப்பதாக ‘Thre forme of curry” என்ற புத்தகத்தில் குறிப்படப்பட்டிருக்கிறது.

 மசாலா அரைக்கும் அம்மியும் குழவியும் தென்னிந்தியர்களின் வீடுகளில் இடம் பெற்றிருக்கக்கூடிய ஒன்று. “Masala” என்றாலே மிக்ஸர் என்றுதானே பொருள், ஆனால் மசாலா ஒரு அரேபிய வார்த்தை.

 எள்ளு (Seasame seed) எள்ளை நினைத்தால் தொடக்கப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது தோளில் பைக்கட்டை (புத்தகப் பை) சுமந்து கொண்டு என் அத்தம்மா வர, அவர் கையை பிடித்துக்கொண்டு பள்ளிக்கூடம் செல்லும் நாட்கள் நினைவுக்கு வருகின்றன. வாணியச் செட்டி வைத்திருக்கும் செக்கை கடந்துதான் பள்ளிக்கூடம். வட்டவடிவில் சுற்றிக் கொண்டேயிருக்கும் காளை மாடுகள் எப்போது நிற்கும் என்று பார்க்க முடியாது. செக்கடியைக் கடந்து செல்லும் காலை வேளைகளில் எள் பதமாக வந்து கருமை நிறத்தில் இருக்கும், அப்படியே ஒரு விள்ளல் எப்போதாவது எனக்கு என் அத்தம்மா அப்போதைக்கு வாணியச் செட்டி அங்கு இருந்தால் அவரிடம் வாங்கித் தருவார்கள். அவர் எங்கள் வீட்டுக்கு எண்ணை ஊற்றுவார். கருப்பு நிற மசிந்த எள் புண்ணாக்கு மிகவும் சுவையாக இருக்கும். செக்குமாடுகளின் கண்களில் எப்போதும் நீர் வடிந்து கொண்டேயிருக்கும். பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வரும்போது எண்ணைய் வெளியேறி எள்ளுப் புண்ணாக்கு வெளிர் நிறமாகிவிடும் அப்படியே பட்டையாக எடுத்து பாலம் பாலமாக அடுக்கி வைத்திருப்பார்கள்

வாணியச் செட்டி முகத்தில் எப்போதும் எண்ணைய் வடிந்துதான் காணப்படுவார். எங்கள் ஊர் நத்தத்தில் 3 செக்குகள் இருந்தன.

என் அனுபவத்திற்கு வித்தியாசமாக திரு.முத்துலிங்கம் எள் அனுபவத்தை எழுதியிருந்தார்.

எள் ஹராப்பா நாகரீகம் இருந்த காலத்திலேயே 3500 வருடங்களுக்கு முன்பு இருந்ததாக அகழ்வாராய்ச்சிக்காரர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். சங்கப்பாடல்களில் எள் பற்றிய செய்திகள் பல இடங்களில் வருகிறது. எள்ளுரண்டை தாயாரிப்பதற்கு என்னுடைய அம்மாவும் இன்னும் மூன்று பெண்களும் காலையிலிருந்து மாலை வரை பாடுபடுவார்கள். எள்ளை உரலில் போட்டு இடிப்பதுதான் உலகத்திலேயே கஷ்டமான காரியம் என்று அம்மா சொல்லூர்.

 ஆரம்பத்தில் இடிப்பது சுலபமாகத்தான் இருக்கும், போக போக எள் திரண்டு பசைபோல் வந்து ஒட்டிக் கொள்ளும் இரண்டு பக்கமும் இரண்டு பெண்கள் நின்று குத்துவார்கள். உலக்கையை எடுக்கும்போது உரலும் மேலே கிளம்பிவடும் இதற்காக மூன்றாவது பெண் நியமிக்கப்படுவார். இவருடைய தொழில் சிவலிங்கத்தை மார்க்கண்டேயர் கட்டிபிடித்தது போல உலரைக் கட்டிபிடிப்பது. இந்தப் பெண்களின் வியர்வை எண்ணையில் சொட்டாக விழுந்து ததும்பும். பதம் சரியானதும் கொஞ்சம் உளுத்தம் மாவை கலந்து உருட்டிவைப்பார்கள்.

 எல்லோருக்குள்ளும் ஒரு ‘எள்’ அளவாவது எள்ளின் ஞாபகங்கள் இருக்கும்தானே.

 ரோஜாக் குவாவிற்கு ‘எள்ளை’ வறுத்து மேலே தூவிவிட்டு ‘டிரஸ்’ செய்து விடுவார்கள். எள்ளுக்கு ஆப்பிரிக்காதான் பூர்விகம். பர்மா, இந்தியா, சீனா, மெக்ஸிகோ, சூடான் நாடுகளிலும் மத்திய கிழக்கிலும் நல்லெண்ணைய் உபயோகிக்கிறார்கள்.

Advertisements
பின்னூட்டங்கள்
 1. pandiammalsivamyam சொல்கிறார்:

  எள்ளிலே பிறந்து எள்ளிலே வளர்ந்த எலிமண்டலத்து ராஜாவே
  எள்ளுக்கும் சிறிய இலை என்ன இலை?
  பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூ மண்டலத்து ராணியே
  பூவிலே இருவகைப் பூ என்னாப்பூ?
  நான் ஆறாம் வகுப்பு ப்டிக்கும்போது மண்டைவெல்லத்தை பக்குவமாக காய்ச்சி தகர பிளேட்டில் ஊற்றி மேலாக நிலக்கடலைப் பருப்பு (தோலை நீக்கி)
  தூவிவிட்டு ஆறவிட்டுவிடுவார்கள். காலையில் இரும்பு சுத்தியல் கொண்டு உடைத்து ஒரு துண்டு வாயில்போட்டு மென்றால் அதன்சுவை ஆஹா! காலணாவுக்கு 50கிராம் பொட்டலம்.(விடை-வெடைத்தைப்பூ–வெடைத்தை இலை)
  காலத்தைதிரும்ப பெற முடியது-ஆனால் அசைபோட்டு சுவைக்கலாம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s