யாரை மன்னிப்பது?

Posted: மே 10, 2010 in பத்தி

தேக்கா மார்க்கெட்டில் வாங்கிய இரண்டு பைகளை விட, இரண்டு நாட்கள் தாமதமாக கிடைத்த ‘உயிர்மை’ மே மாத இதழில் வெளிவந்த “எங்கள் காலத்தில்தான் ஊழி நடந்தது” (முள்ளிவாய்க்கால் படுகொலை ஓராண்டு நினைவிதழ்) கனத்தது. மேக்பர்ஸன் பூங்காவைக் கடக்கும்போது கட்டுமான ஊழியர் ஒருவர் அன்றைய தினசரியை இரண்டு கைகளாலும் அழுத்திப் பிடித்துக் கொண்டு நித்தியானந்தர்-ரஞ்சிதா செய்திகளை வரி தப்பாமல் வாசிக்க, தன் ஆள்காட்டி விரலால் கோடிட்டுக் கொண்டே படித்துக்கொண்டிருந்தார். விலை போவதற்கு அவ்வப்போது செய்திகள் கண்டெடுக்கப்படுவதும் அல்லது உருவாக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

எத்தனையோ ஊடக பிம்பங்கள் வெள்ளம் போல் பாய்ந்தாலும் மறக்கமுடியாத நேர்காணல். இது 2008 நவம்பரில் தன் வாழ்வைப் புரட்டிப் போட்ட சம்பவம் பற்றி திரு.மைக்கேல் புஹேந்திரன் ஒரு வருடத்திற்குப் பிறகு ஸ்டெய்ட் டைம்ஸில் நேர்காணல் கொடுத்திருந்தார். நிருபர் Carolyn Quck அவருடைய மேரின் பேரேட் வீட்டிற்குச் சென்றிருந்தபோது வரவேற்பறையில் அவருடைய இளம் மனைவி Hwei Yew Lo திருமண உடையில் மாறாப் புன்னகையுடன் காட்சி அளித்த புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. அதனருகில் அவர் அவசரமாகப் படித்து விட்டு புக்மார்க் செய்யப்பட்ட ” The Girls of Riyadh” என்ற புத்தகம் வைக்கப்பட்டிருந்தது அது Obroi ஹோட்டலில் தாக்குதல் நடந்து முடிந்து தேடியபோது அவருடைய உடைமைகளுடன் கண்டெடுக்கப்பட்டது.

கடைசி நிமிடங்களில் தன் மனைவி உயிருக்காக மன்றாடிய நினைவுகளைத் தன்னுடைய கையடக்கத் தொலைபேசியில் அடக்கி வைத்திருக்கிறார். என்ன நடந்தது, எப்படி நடந்தது? என்ற அந்தக் கடைசி நேர கொடூர கணத்தின் துடிப்புகள் அறிய தன் இரண்டு நண்பர்களுடன் “இஸ்தான்புல்” சென்று வந்திருக்கிறார்.

Ms.Lo Hwei Yen – உடன் பிணைக் கைதிகளாக இருந்தவர்கள் Mr.Seyfi Mueczinoglu மற்றும் அவருடைய மனைவி Meltem தீவிரவாதிகள் ஒவ்வொருவராக விசாரித்து வந்தபோது Ms.Lo, Meltem-ன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டிருந்தாராம். தம்பதிகள் முஸ்லிம்களாக இருந்ததால் இருவரும் அப்புறப்படுத்தப்பட்டு, மனப் பிறழ்வுகள் கொண்ட மதமுகமூடி அணிந்தவர்களால் Ms.Lo கொல்லப்பட்டிருக்கிறார். விவரிக்க முடியாத கணங்களை உள்வாங்கிக் கொண்டு வேதனையுடன் திரும்பியிருக்கிறார் திரு. புஹேந்திரன்.

அவர் வழக்கமாகச் செல்லும் புக்கிட்பாதோக் சர்ச்சுக்கு இனி செல்லப் போவதில்லை என்று கூறினார், அது அவருடைய கடவுள் நம்பிக்கை இழப்புக்காக அல்ல! தன் காதல் மனைவியின் நினைவுச்சுவடுகள் சர்ச்சுக்குள் சென்றவுடன் மீண்டும் வருவதாகச் சொல்கிறார்.

இந் நிகழ்வுக்குப் பிறகு சென்ற ஒருவருடமாகத் தன் சோகங்களைப் பகிர்ந்து கொண்ட சிங்கப்பூரர்களை எண்ணிப் பெருமிதம் கொள்கிறார். மனைவியைச் சுட்டவர்கள் மேல் தங்களுக்குக் கோபமில்லையா என்ற கேள்விக்கு…

“நிராயுதபாணியான பெண்ணைக் கொலை செய்யத் தூண்டியவர்களை நான் எப்படி மன்னிப்பது” என்று சொல்லிவிட்டு உலகில் கண்ணுக்குக் கண் என்ற ரீதியில் நாம் போய்க் கொண்டிருந்தால் முடிவுதான் ஏது?’ என்று முகமில்லாத அந்தப் பயங்கரவாதிகளை எது பொய்த்தாலும் மானுடம் பொய்க்காது என்று நெஞ்சில் அறைகிறார்.

யாரைத் தண்டிப்பது என நிராயுதபாணியாக நாமும் …..

அப்துல்காதர் ஷாநவாஸ்
நன்றி:உயிர்மை(உயிரோசை)

Advertisements
பின்னூட்டங்கள்
 1. Na.Vee.Sathiyamurthy சொல்கிறார்:

  Dear Brother Sha Navas
  Again a happy to me by read your articles. Because of the work load I have no time to read your articles in each alternative days. Sorry for that. You know our singapore life–If we want to tell in one word “we are all breathing machines”..to live we breath and to breath we live…sorry coming to our point ( our K.M.College Asst. Prof.Mr.Kadhar always says this word after a joke in class hours) I was unable to attend A TEA BREAK WITH PIRABANJAN’S two programmes because those 2 were conducted in week days 6.30 & 7 pm accordingly. Any way some good friends like you gave me a short not least briefing about it. The BAWLAA brought me to my olden & golden days of my collecge days…the syed building,new building,chief side (cheap side), noorul lodge @ market.. wov..Then you mentioned about kavimalai and Kadalaadi incidents… One TamilNadu Public Election Kalimuthu standed as a DMK candidate in Kadalladi and Kalaingar was acandidate at Beach (Thuraimugam).. Before election Kalaignar told
  ” THAMBI KALIMUTHU NEE KADALAADI VAA UNNAI NAAN THURAIMUGATHIL KARAI SERKKIRANE ” but fortunately or unfortunately in Tamil Nadu Assembly Kalaignar won in border other DMK candidates including Kalimuthu was postponed to next Assembly election..(this is my news about Kadalaadi). Thoughts about Maanaamadurai malli really nice puttumayam or idly (when we say about idly or puttumayam we tell It is like malli.. so why not we say this malli like this..hee..hee..).When I was study in collecge I was the train student for 4 years (P.U.C 1 year & Degree 3 years – day-scholar) So everyday we take train at Muthupet to Adirai. Between these 2 stations howmany passengers used the toilets how make dirty of the railway tracks..everyday we think about it during travel time and write KAANAA SONG about this railway toilets. But now One of the indian student BASHA NASIM designed this modern toilet is a very good news not only for the passengers but also to the huts near the railway tracks and the rivers.Best of good wishes to Asaruddin for his SOUTH KOREA ADVENTURES. Asarudin always should be ASARAADHA DEEN. In the EN SUVAI ANDHADHI you wrote about seasame. I think WHITE COLOUR GINGELLY IS CALLED AS SEASAME. IT IS USED FOR MAKIING DRESS FOR THE FOOD(IN YOUR WORDS).
  But the black colour Gingelly is more oily and very pleasant smell.. and good for health.. Indian speacially southern part of India (except Kerala) use this Gingelly oil for shower,cooking,and prayers. It is used as the mouth wash.. Your wrote about Ellu urundai. It is a nice sweet. In petty shop in my shcool days I bought it for 5 paise/small ball.. chew for long time.. very tasteful… You know onething: This Black seasame,VELLAM,ILUPPAIPPOO AND FRIED RICE MIXED AND GRIND IT AS PASTE MAKE IT LEMON SIZE BALL AND PUT IN A GLASS BOTTLE..give the ball the kids it is healthy and cheap kampong sweet…( in Singapore Cannot la..)Finally I read Mullivaaikkal massacres and Oberoi Hotel attacks.. I really cannot go further for few minutes..let her soul in peace…Time is the only medicine for all the wounds..because we people & everybody and every body have such wounds and pains..we try to forget those things..
  for all these things there is one soluble ways and that is the articles like yours..

  With ever loving thought and memories

  Na.Vee.Sathiyamurthy

 2. pandiammalsivamyam சொல்கிறார்:

  வணக்கம்!
  இதுவரையிலும் நான் த்ங்களது கதை ,பத்தி, கட்டுரைகளைப் படித்து விமர்சனங்களை எழுதி இருக்கிறேன். இன்று யாரை மன்னிப்பது படித்தவுடன் ஓர் வினாடி உலகம் நின்று சுழல்வதுபோல் இருந்தது. மனம் கனத்து என்னை புதைப்போல் உணர்ந்தேன். இந்த பத்தி உலகம் சுற்றிவர காலமாகலாம். ஆனால் கண்டிப்பாக ஆயிரமாயிரம் மனித இத்யங்களில் ஊடுருவி பெரியதொரு தாக்கத்தை
  எற்படுத்தும் என்பதுமட்டும் உறுதி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s