”சுஜாதாவின் கிளிஷே”

Posted: மே 24, 2010 in பத்தி
குறிச்சொற்கள்:
கவிமாலையில் என்னை சந்திக்கும்போதெல்லாம் பூங்குன்றன் பாண்டியன் இப்போது என்ன புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்பார். இம்மாதம் இரண்டாவது தடவையாக பிரபஞ்சன் சந்திப்பு நிகழ்வில் அவர் திரும்பவும் கேட்டார். அறிவு என்ற வார்த்தைக்கு இணையான சொல் புத்தகம் மட்டும்தான், தொடக்கநிலை அறிவு காலந்தோறும் கடத்தப்பட்டது. அது ஓலைச் சுவடிகளில் இருந்தபோது சிலரது கைக்கு மட்டும் நெருக்கமாக இருந்து தாளுக்கு மாறி புத்தகமாக்கப்பட்ட போதுதான் அறிவு பரவலாக்கப்பட்டது.

சிங்கப்பூரில் தேசிய நூலகத்தில் கடந்த 2008 ஆம் வருடம் 3 கோடி புத்தகங்கள் வாசிப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. சுமார் 8000 புத்தகங்கள் தினந்தோறும் 22 நூலகக் கிளைகளிலும் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

உலகில் ½ நிமிடத்திற்கு ஒரு புத்தகம் வெளியிடப்படுவதாகவும் சுமார் 250,000 வருடங்களில் தினந்தோறும் 8 மணிநேரம் புத்தகம் படித்தால் அனைத்து புத்தகங்களையும் படித்துவிடலாம் என்று மெக்ஸிக்கோ எழுத்தாளர் கேப்ரீயல் சயீத் சொல்கிறார். தினந்தோறும் உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்து விட வேண்டும் என்று திரு.சுஜாதா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாராம்.

அன்று  பாண்டியன் தன் பேச்சைத் தொடரும்போது அது என்ன இன்றைய இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது புதுக் கவிதையா? மரபுக் கவிதையா? என்ற தலைப்பு?  கவிதைதானே இருக்கிறது, அது என்ன புதுக்கவிதை மரபுக்கவிதை என்று என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கும்போது சராலென ஒருவர் புகுந்து எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது ஊரிலிருந்து நீங்கள் எல்லாம் வந்த பிறகுதான்  புதுக்கவிதை என்பதே வந்தது என்றார். பாண்டியனிடம் பதில் இருந்தது, என்னிடமும் பதில் இருந்தது. அது எல்லோரிடமும் இருக்கிறது. //

அவ்வப்போது சுஜாதாவின் கிளிஷேக்களை நினைத்துக் கொண்டால் நாம் அவ்வப்போது தப்பிக்கலாம். அவர் சொல்வார் ஆரோக்கியமான விவாதம் என்பது என் கருத்துடன் ஒத்துப் போதல் என்பதுதான் என்று…

தமிழை நான் காப்பாற்றுவதுதான் சரியான காப்பாற்றல், உன் காப்பாற்றல் வெத்து என்பவர்களை அவரவர் போக்குக்கு காப்பாற்றட்டடும் என்று விட்டு விட்டு, நேரம் என்பது நமக்கு சொத்து அதை பத்து பேருடன் பங்குகொள்ள வன்மையான காரணங்கள் இருக்கவேண்டும் என்பதை நினைத்துக் கொண்டே அடுத்தநாள் காலையில் நூலகத்தில் புத்தக பரிமாற்றத் திட்டத்திற்கு என்னிடமிருந்து 20 புத்தகங்களை கொடுத்து டோக்கன் பெற்றுக் கொண்டு சனிக்கிழமை 9 மணிக்கெல்லாம் நூலகம் சென்றுவிட்டேன்.

தமிழ், மலாய் மொழிப் புத்தகங்களுக்கு ஒரு சிறிய இடமே ஒதுக்கப்பட்டிருந்தது. பரிமாற்றம் செய்ய வேண்டிய புத்தகங்களை அட்டைப் பெட்டியில் கொண்டுவந்து கொட்டினார்கள் சிறுவர்களுக்கான காமிக் புத்தகங்களே நிரம்பி வழிந்தன. அத்துடன் சமீபத்தில் சிங்கப்பூரில் வெளியீடு கண்ட பல புத்தகங்கள் கேட்பாரற்றுக் கிடந்தன. சுஜாதா புத்தகங்கள் ஒன்று கூட கண்ணில் படவில்லை
 என்னிடமில்லாத அவருடைய புத்தகங்களை குறித்துவைத்துத் தேடினேன். ஊஹீம் கிடைக்கவேயில்லை…

மனிதர்களுக்கு நல்ல புத்தகங்களை கணையாழியின் கடைசிப் பக்கங்களின் மூலம் அறிமுகப்படுத்திய சூத்திரதாரி சுஜாதா… ரிச்சர்ட் டாக்கின்ஜ் எழுதிய செல்பீஷ்ஜீன் (சுய நல மரபணு) புத்தகத்தை சுஜாதா மூர் விதியின் மகன் (son of moores law)  என்ற கட்டுரையைக் குறிப்பிட்டு அதை படியுங்கள் என்று கற்றதும் பெற்றதும் பத்தியல் எழுதியிருக்கிறார் .

ஒவ்வொரு 18 மாதமும் சிலிக்கான் செல்லுகள் அடர்த்தி இரட்டிப்பாகும் விலை பாதியாகும் அதேபோல் ஒரு விதி மாலிக்யூலர் பயாலாஜியில் இருக்கிறது, நம் DNA சர அமைப்பை நுட்பமாக அறிந்து கொள்வது மாலிக்யூலர் பயாலாஜி, அதை அலசிப் பார்த்து எந்த ஜீனில் எந்த குணம் எந்த வியாதி இருக்கிறது என்று கண்டுபிடிப்பது.

மாலிக்யூலர் பயாலாஜியில் மரபனு படிக்கும் திறமைகள் நாலுக்கு நாள் தீட்டப்படுகிற நிலையில் ஆயிரம் டாலர் செலவழித்தால் எத்தனை அடிப்படை DNA சரங்களைப் படிக்கலாம் என்பது வரை உலகம் இரண்டு ஆண்டுகளில் முன்னேறிவிடும் என்று சுஜாதா சொல்லியிருக்கிறார்.

கடந்த வாரம் Steve Quake stamford university professor  தன்னுடைய DNA சரத்தை குறைந்த செலவில் அதாவது 4400/- வெள்ளியில் (இது எற்கனவே 3 மில்லியனான இருந்தது) தயாரித்திருக்கிறார் தனக்கு எதிர்காலத்தில் என்னென்ன வியாதிகள், அவை எப்போது தன்னைத் தாக்கும் என்பதை சோதனைகள் மூலம் தெரிந்திருக்கிறார். //

1)      மாரடைப்பு வரக்கூடும் அது சாவில் கூட முடியலாம்
2)       1.4ம% அல்ஜைமர் நோய்க்கான அறிகுறிகள்
3)      உடல் பருமன் ஏற்படலாம்

இந்த முடிவுகள் அவருக்குத் தெரிந்தவுடன் அவர் எடுத்துக் கொள்ளப் போகும் சிகிச்சைகளை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்தது. ஆனால் Mr.Quake  இதய நோயாளிகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் பேபி ஆஸ்ப்ரின் கூட தனக்கு வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டார். Lancest journal ல் அவருடைய முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது, இப்போது ஆரோக்கியமான இருக்கிறேன் முன்னெச்சரிக்கையாக மருந்துகள் எடுத்தால் மட்டும் DNA சரத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது என்கிறார்.

புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கே சுஜாதாவை இன்னும் படிக்க வேண்டியிருக்கிறது. பாண்டித்துரையும், பாண்டியனும் எனக்குக் காணக் கிடைக்காத புத்தகங்களுடன்தான் எப்போதும் என் முன்னால் தோன்றுகிறார்கள். கிடைக்காத புத்தகங்களையும் பாண்டித்துரையிடம் ஊரிலிருந்து வரவழைத்துப் பெறலாம்.

எனக்கு கலிலியோவின் டயலாக் கன்ஸர்னிங் தி சீஃப் வோர்ல்டு சிஸ்டமும், சார்லஸ் டார்வினின் ஆன் தி ஆரிஜின் ஆப் ஸ்பீக்ஸ் பை மீன்ஸ் ஆப் நேச்சுரல் என்ற புத்தகமும் கிடைக்குமா என்று கேட்டிருக்கிறேன்.

:- அப்துல்காதர் ஷாநவாஸ்  
 
Advertisements
பின்னூட்டங்கள்
 1. haniff சொல்கிறார்:

  well done your memeries

 2. haniff சொல்கிறார்:

  hallo brother what about my halal
  abu

 3. pandiammalsivamyam சொல்கிறார்:

  அறிவு என்பதற்கு நேர்சொல் புத்தகம் .தொடக்கநிலை அறிவு காலந்தோறும் கடத்தப்பட்டது. சிங்கப்பூர் மக்கள் வாசிப்பு பற்றிய புள்ளிவிவரங்கள்.மாலிக் யூலர் பயாலாஜியில் DNA சராமைப்பை வாசித்து எந்த ஜீனில் எந்த குணம் வியாதி என்க்கண்டுபிடித்து மருத்துவம் பார்ப்பது ,ஸ்டீவ் குவேக் ஸ்டாம்போர்டு புரபஸர் தனது DNA யை வாசித்து தடுப்புமருந்து உட்கொள்வதால் DNAயில் எந்தவித மாறுதலும் ஏற்படாது என்றது எவ்வளவு அருமையான குறிப்புகள்! கடைசியில் நீங்கள் தேடும் இருபுத்தகங்கள் சென்னை கன்னிமாரா நூல்நிலையத்தில் கண்டிப்பாக கிடைக்கும்.நானும் முயற்சிக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s