காதோரம் நரை

Posted: மே 28, 2010 in பத்தி
குறிச்சொற்கள்:

காதோரம் தோன்றும் நரை கடவுள் தரும் முதல் கடிதம்… (கண்ணதாசன்)

என் நண்பர்கள் சிலருக்கு கடிதம் வந்துவிட்டது, சிலருக்கு இடையில் தந்தி வந்தது சிலருக்கு SMS வந்து கொண்டிருக்கிறது. நரை வந்து விட்டதைப் பற்றியோ அல்லது வரப்போவதைப் பற்றியோ நாம் கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது, உலகத்தில் அந்த வாய்ப்பு பலருக்கு வராமலேயே போயிருக்கிறது.

விவேகானந்தர், பாரதியார், ஷெல்லி, கீட்ஸ், பைரன், பட்டுக்கோட்டை …

ஆண்களுக்கு பெண்களைவிட விரைவில் நரை வருவதும் நோய் வருவதும் அதிகரித்துக் கொண்டிருப்பதாக சென்ற வாரம் வெளியிடப்பட்ட சிங்கப்பூர் மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.

Mr. Peter lim The President of the society for Men’s health ஆண்களுக்கு வரும் நோய்க்கான காரணங்கள் அவர்களுடைய ஈகோவினால் குணமாக்க முடியாத நிலையை அடைந்திருப்பதாக சொல்கிறார்.

20 வயதிலிருந்து 30 வயது வரை – சிங்கப்பூர் ஆண்கள் இறப்பது அல்லது நோய்க்குள்ளாவது 1) அதி வேக கார் ஓட்டுதல், 2) துணிச்சலான விளையாட்டுக்கள், 3) ஆபத்தான உடலுறவு பழக்கங்கள், 4) அதிகக் குடிப் பழக்கம் இவற்றால் ஏற்படுகிறதாம். அத்துடன் அடிக்கடி ஏற்படும் வேலை மாற்றங்கள் முதல் குழந்தைக்கு தந்தையாகும் புது சூழ்நிலை கூட 30 வயதுக்காரர்களை பாதிக்குமாம்.

இவைகள் எதையுமே தனக்கு இருப்பதாக ஒப்புக் கொள்ளாமல் ஒன்று குடித்தோ அல்லது அடுத்தவர்களை அவமரியாதை செய்தோ நோயின் தாக்கத்தை அதிகமாக்கிக் கொள்கிறார்களாம். வலியச் சென்று தங்களுடைய வேலைகளில் மூழ்கிக் கொண்டு கை வலி, கால் வலி என்று சொல்லி தங்களுடைய மன வலிகளை வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்களாம். பெண்களை விட அதிக சதைப்பிடிப்பு உடல்கூறு இருப்பதால் ஒரு நாளைக்கு 2950 கலோரிகள் உணவு அவர்களை விட அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.

30-40 உடல் பருமன் ஏற்படுவதற்கு உகந்த பருவம் இடுப்பைச் சுற்றி சதை போட ஆரம்பிப்பது இந்த வயதில்தான் ஆண்பால் உணர்வு ஹார்மோன்கள் குறைய ஆரம்பித்து Eractile Dysfunction (ED) 40 வயதைக் குறிபார்த்து அடிக்குமாம். இந்தக் காரணங்களுடன் மிகக் குறைந்த நபர்களே மருத்துவர்களை நாடுவதாக ஆய்வு சொல்கிறது.

நரை முடியும் முடி கொட்டுவதும் (Androgenitic alopecia) ஆரம்பிக்கும் வயது Minoxidal and Finasteroid மருந்துக்கள் எடுத்துக் கொண்டாலும் சிகிச்சை தொடராமல் விடுபடும்போது முடி கொட்டுவது தொடர்கிறதாம்.

40 வயதிலிருந்து 50 வயதுவரை பாலுணர்வு ஹார்மோன்கள் 50% Male testosterone உற்பத்தியைக் குறைத்து விடுமாம் அத்தோடு விரைவீக்க நோய் (Prostate) தாக்கக் கூடியவயது. இந்த வயதில் சிங்கப்பூரர்களை தாக்கும் நோய்களில் கேன்ஸர் முதலிடமும் விரைவீக்க நோய் 5ஆம் இடமும் வகிக்கின்றன.

எங்கு நம் உடல் நலத்தை தவறவிட்டோம் என்பதை யோசிக்க வைக்கும் வயது 20, 30, 40 ல் ஆரம்பித்த புகைப்பழக்கம் 50 ல் இதயநோயாக வந்து நிற்கிறது. 50லிருந்து 65 வேலை ஓய்வு என்ற அரக்கன் நம்மை தாக்க ஆரம்பிக்கும் வயது சம்பாதிக்கும் நிலையிலிருந்து வாபஸ் பெற்றுக் கொள்வதே பெரும் மன உளைச்சல். அத்துடன் முக்கியமாக உறவினர்களையும் நண்பர்களையும் இழக்க ஆரம்பிக்கும் வயது, நோய்களுடன் போராட நம்முடைய இளமைக்கால சேமிப்புகள் நம் பக்கமும் கடன்கள் எதிரிலும் அணிவகுத்து நிற்கும் இந்த வயதைக் காண எல்லோருக்கும் கொடுத்து வைப்பதில்லை! இதில் தோற்ற ஆண்கள்தான் மிகவும் அதிகம் என்று ஆய்வு சொல்கிறது.

“இது நரையல்ல மூச்சுக் குதிரை தள்ளிய நுரை” என்ற அப்துல் ரஹ்மானின் கவிதையுடன் எனக்கு பெர்னாட்ஷாவும் நினைவுக்கு வருகிறார் “இந்த உலகில் எழுதப்பட்டுள்ள நல்ல இலக்கியங்களை படிப்பதற்கு மனிதனுக்கு சுமார் 300 வருடங்களாவது தேவைப்படும் என்றார்”.

மூச்சுக் குதிரை அதுவரை ஓடுமா!

Advertisements
பின்னூட்டங்கள்
  1. pandiammalsivamyam சொல்கிறார்:

    காதோரம் நரை வர இத்தனை காரணங்களா? அடேங்கப்பா! மூச்சுக் குதிரை தள்ளிய நுரை நரை எவ்வளவு யதார்த்தமான உண்மைகள்! அப்துல் ரஹ்மான் நல்ல இலக்கியங்களை படிக்கத்தான் 300 ஆண்டுகள் என்றார் .நல்ல இலக்கியங்களை கண்டுபிடிக்க ? என் அப்பா சொல்வார்”பல உமிதின்னால் ஒரு அவல் அகப்படுமென்று” அப்படியானால் 300×4 =1200 ஆண்டுகளாவது குறைந்தபட்சம் வேண்டும் படிக்க மட்டிம் ! மற்றவைகளுக்கு?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s