என் பள்ளிப் பருவம்

Posted: ஜூன் 4, 2010 in பத்தி

மணலில் கை புதைத்து “அ” எழுதக் கற்றுத் தந்த முதலாம் வகுப்பு சகுந்தலா என் டீச்சர்

நன்றாக நினைவிருக்கிறது…

உயிரெழுத்துக்கள் அனைத்தும் அறிமுகம், திடீரென ஒரு நாள் மெய்யெழுத்துக்களை கரும் பலகையில் என் டீச்சர் எழுத புள்ளிகள் பெற்ற எழுத்துக்களை ஏற்க என் மனம் பயத்துடன் திக் திக் கென்றது.

எத்தனை எழுத்துக்கள்? எத்தனை வடிவங்கள்…..

பள்ளிக் கூடத்தின் பக்கத்தில் ஒரு பன்னீர் மரம்…

பன்னீர் புஷ்பங்கள் என்றுதான் எனக்கு அறிமுகம்…

மாலையில் உதிர்ந்த மலர்களை கோர்த்து என் பள்ளிப் பையில் பக்குவப் படுத்துவேன்.

என் அத்தம்மா சிலேட்டையும் பையையும் உதறும்போது விழும் அந்தப் பூக்கள் கோர்வையாக சிரிக்கும். என் அத்தம்மா கோபத்தால் சிவப்பார்கள், படிக்கும் பையன் பையில் “பூ” எதற்கு என்று பூவும் மரமும் புள்ளிகளாய் நமக்குள் அறிமுகம் ஆன நாட்கள் என் முதல் வகுப்பில் நடந்தது. படிப்பு வாசனையை எங்கள் குடும்பத்தில் ஆரம்பித்து வைத்த என் அத்தம்மாவின் அன்பும் தொடர்ந்தது

இரண்டாம் வகுப்பு

ஆம்பிளை டீச்சர் அதட்டலாய் வருவார் – அவர் சௌந்திரராஜன்

கூட்டல், கழித்தல் இரண்டைத் தவிர அவர் பெருக்கலுக்கு போகும் போது கைகள் நடுங்கும். தோட்டத்துப் பயிர்க் குழிக்கு விதை போட்டு வளர்ப்பார்.  விதை முளை விடும்போது இரட்டை இலையய் விரியும்… சில விதைகள் முளைக்காது முளைக்காத பயிர்க் குழிக்குள் வேறு விதை போடாமல் வெறுமெனே இருக்கும், அசெம்பிளி நடக்கும்போது பூசணிச் செடி படர்ந்து படர்ந்து நெருக்கமாய் வரும் பூசணிப்பூ
 கருவாகும் போது கை நீட்டி காண்பித்தால் கருகிவிடுமாம் நண்பர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வார்கள்.

3ஆம் வகுப்பு

என் வகுப்பு ஆசிரியர் நடராஜன் கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் “தாயின் மணிக்கொடி பாரீர்” என்னை கொடி கட்டிப் பழகச் சொன்னார். என் பாட்டி வீட்டில் தோட்டத்து காட்டு ரோஜாவுக்கு காலையில் எழுந்ததும் தண்ணீர் விடுவார், பீர்க்கங்காய் பூசணிக்காய் சுரக்காய் விதைகளை என்பள்ளி நண்பர்கள் தர அவர்களுக்கு நான் என் தந்தை கொடுத்துவிட்ட சிங்கப்பூர் ரப்பரும் பென்சிலில்
 பாதியும் கொடுப்பேன்.

என் அத்தம்மா பயிர்க்குழிகள் போட்ட பின்பு தக்காளிச் செடியை மட்டும் தனியே ஊன்றச் சொன்னார். தக்காளி பெருத்தவுடன் தளர்ந்துவிட்டது. ஓமச் செடி ஒன்று என் தோட்டத்தில் வந்தது. அதை நான் தினமும் இரண்டு இலை பறித்து தின்ன வேண்டுமாம். ஓமச் செடி இலை தின்பேன் பீர்க்கங்காய் சிறிதும் பெரிதுமாக காய்க்கும்

வீட்டுக் கொல்லையில் பூத்த அந்தச் செடிகளை காண இன்று என் பிள்ளைகளை நான் எப்படிக் கூட்டிச் செல்வேன்…

ஆடி மாதத்து அற்புதங்கள் குடை சாய்ந்து அறுவடைக்கு போகும் முன் எனக்குள் அரசல் புரசலாய் தெரிந்த எலி வலைகள்

அறுவடை நடந்தபின் கதிரின் தண்டை “பீப்பீ” ஊதுவோம்

அதற்கு பிறகு எங்களுக்கு மீராளி வீட்டு வயல்கள்தான் கால்பந்து விளையாட்டுத் திடல்கள் …

நான்காம் வகுப்பு

என் வகுப்பு ஆசிரியர் பால குருசாமி

பழகும் தன்மையில் இனியவர் கையை திருப்பி வைத்துக் கொண்டு அடி கொடுக்கும் வள்ளல்

பெருக்கல் கணக்கு வாய்ப்பாடு 10க்கு மேல் பதறி பதறிச் சொல்வேன் கெழுத்தி மீன் வாய்க்காலில் கூட்டம் கூட்டமாய் போகும்

அயிரை மீன் அசத்தலாய் ஆர்ப்பரிக்கும் என் தெருவு மூலைக்குள் சுல்தான் வலை விரிப்பார் கச்சான் வலை போட்டு கெழுத்தி மீன் அயிரை மீன் அள்ளுவார் கெண்டை மீனை மட்டும் வெளியில் வீசுவார். கூட வரும் கெழுத்தி மீனை மட்டும் என் பாட்டிலுக்குள் பிடித்துக் கொள்வேன்.

அண்ணா வாத்தியார் புராணம் அடுத்து

தொடரும் ….

Advertisements
பின்னூட்டங்கள்
 1. pandiidurai சொல்கிறார்:

  shan

  பள்ளிப் பருவம் எல்லாம் அழகாக ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்கள்.

  ஸத்து கோஸம் பரோட்டா பலவிதம் படித்ததும் உங்கள் கடைக்கு வந்து எல்லா விதத்தையும் அருகில் இருந்து செய்வதை பார்க்கவும் பிறகு செய்ததை சாப்பிடவும் வேண்டும் என்ற ஆவா

  இந்த வாரம் ஞாயிறு வருகிறேன். என்ன பரோட்டோ ஸ்பெஷலாக கிடைக்கும்?

  இதற்கு முன்பு ஒரு பத்தியில் அத்தம்மா பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் இந்த பதிவிலும் அவர்களை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். இன்னும் அத்தம்மா பற்றி சுவையான உங்களின் நினைவுக் கோர்வைகளை எழுதுங்கள்.

  அத்தம்மா அதீத மகிழ்ச்சியை பெறக்கூடும்

  பாண்டித்துரை

 2. பதிவு அருமை!

  பழைய நினைவுகள் பசுமையுடன்!

  ஒரே பதிவுல நான்காம் வகுப்பு வரை முடிச்சுட்டியளே!

  ஒவ்வொரு வகுப்புக்கும் இடையில போதுமான இடைவழி விடுங்க…!

  • ஷாநவாஸ் சொல்கிறார்:

   நன்றி ஜோதி பாரதி.

   இவ்வளவு போதுமா?

   சும்மா தமாசு

   ஒரு வகுப்பு பற்றி நிறைய தகவல்களை பகிர்ந்துகொள்ளும் போது ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு பதிவு எழுதலாம்.

   முயற்சிக்கிறேன்

 3. ஜோ அமலன் ராயன் பெர்ணாண்டோ சொல்கிறார்:

  Design, graphics, photos are good.

 4. அ.ப.சாகுல் ஹமீது சொல்கிறார்:

  நானும் சகுந்தலா டீச்சர் , குருசாமி சார் , அண்ணா வாத்தியார்
  ஆகியோரிடம் படித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.அந்த
  நாட்களில் நம் ஊரில் பேன்ட் சர்ட் போடுவது மிக அரிது.அப்படி யாராவது
  அணிந்து வந்தால் அவரை “டே பந்தா” என்று கேலி செய்வார்கள்.அதிலும்
  நம்ம ஊர் பட்டப்பெயர்கள் செம காமெடியாக இருக்கும்.சாம்பிளுக்கு சில..
  1, மொட்டக்கோரம் முனியசாமி
  2, ஓட்டக் கதவு செய்யது
  3, கஞ்சித்தாழி அப்துல் ரஹ்மான்
  4, அரக்காசு சரிபு
  5, பாம்பாட்டி நெய்னா முகம்மது
  6, முள்ளுக்குத்தி அபுபக்கர்
  7, காடு வெட்டி ரசீது
  8, காட்டு மூல ஆரிப்
  9, தொண்டகட்டி யாக்கூப்
  10, சக்கப்போடு நெய்னா முகம்மது
  என்று தொடர்ந்து கொண்டே இருக்கும்..

 5. pandiidurai சொல்கிறார்:

  /////7, காடு வெட்டி ரசீது///

  அப்ப குரு coffee ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

 6. pandiidurai சொல்கிறார்:

  shan

  உங்களுக்கு என்ன பட்டபெயர் வைத்தார்கள். ?

 7. AHMED BAHRUDEEN சொல்கிறார்:

  நான் என் இனிய சகோதரர் அ.ப.ஷாகுல் ஹமீது அவர்களின் இனைய தளம் முலம் உங்கள் வலையில் சிக்கிய மீனாக உங்களுடை பலதரப்பட்ட தமிழ் வாசனை, ஊர் அனுபவம், மற்றும் பல சுவாரசியமான தகவல்கள் அறிந்தேன்.

  நன்றி.
  A.M.U.பஹ்ருதீன் அஹ்மத்
  த/ப. அ.ப.உதுமான் கனி.

  என்னுடைய இனைய தளம்.
  http://www.easyrecipes.in
  http://www.thewatertreatments.com

 8. pandiammalsivamyam சொல்கிறார்:

  மிக மிக அருமை! வலிகளைக்கூட இப்படியும் சொல்ல முடியுமா? “வீட்டுக்கொல்லையில் பூத்த அந்தச் செடிகளைக்காண இன்று என் பிள்ளைகளை
  நான் எப்படி கூட்டிச்செல்லவேன்? “. நனவு தேசம் என்னுரையில் இளமை பாசவலியைச் சுட்டி வலிதாங்கியநீங்கள், நீங்கள்பெற்ற செல்வங்கள் அனைத்தையும் கூட வைத்துக்கொள்ள காரணியாக இருந்திருக்கிறது.வலி முறைமை மாறலாம்–
  அது தொடரும் எங்கேயும் எப்போதும்,சிரித்துக்கொள்ளும்போதுகூட!
  குள்ளக்கத்திரி-குண்டு-தனிப்பிறவி–பந்தாபரமசிவம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s