கடிதம்-5 (சிங்கப்பூர் இலக்கிய சர்ச்சை)

Posted: ஜூன் 9, 2010 in கடிதம், கவிதை
குறிச்சொற்கள்:, , , ,

அன்பு நண்பர் பாலுமணிமாறன் அவர்களுக்கு …

” நாலுவார்த்தை” மீண்டும் புத்துயிர் பெற்றிருப்பதில் தங்கள் முதல் வாசகன் என்ற முறையில் மகிழ்ச்சி. மீண்டும் ”அப்பாவிச் சோழனாக” மாற வேண்டிய சூழல் தற்போது சிங்கப்பூர் இலக்கிய உலகில் உருப்பெற்று வருகிறது.

நல்ல விமர்சனம், மாற்றுக் கருத்துக்களுக்கான தளம் இங்கு உருவாக வேண்டும் என்று நாம் பலமுறை பேசியுள்ளோம்.

 தொல்காப்பியர் 10-வகையான எழுத்துக்கள் குறையுள்ள தன்மையுடையவை என்று சொல்கிறார்.

1. கூறியது கூறல்
2. குறை கூறல்
3. மாறு கொள்ளக் கூறல்
4. மிகை படக் கூறல்
5. பொருள் சில மொழிதல்
6. மயக்கக் கூறல்
7. கேட்போருக்கு இன்னா யாப்பிற்று ஆதல்
8. என்னவகையிலும் மனக் கோள் இன்மை
9. தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்
10. பழித்த மொழியான் இழுக்கக் கூறல்

இதில் திருமதி லெட்சுமி அவர்களின் விமர்சன எழுத்துக்கள் 10 வகையிலும் குறையுடையதாக இருக்கிறது.

நம் கவிதை வரலாறு 2000 ஆண்டுக்கால நீட்சி கொண்டது. இந்த நீண்ட கால பரப்பில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் உள்ளார்ந்த மனம் மாற்றம் அடையவில்லை. அன்பு, பாசம், காதல் குடும்ப உறவுகள், நட்பு, பிரிவு, மரணம் சார்ந்த, அடிப்படை நிலம் சார்ந்த வாழ்க்கை இவற்றில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.

கவிதைகள் காலப் பிண்ணனி கொண்டதாக இருக்க முடியுமே தவிர, அது நாம் வாழும் இடத்தின் தன்மைக்கு ஏற்றவாறு மாறுவதில்லை. திருமதி.லெட்சுமி அவர்கள் உண்மையிலேயே கவிதைகளை விமர்சிக்க விரும்பவில்லை என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது. அத்துடன் 21ஆம் நூற்றாண்டின் அடிப்படை ஆவணம் பிறப்புச் சான்றிதலிருந்து தற்போது பாஸ்போர்ட்க்கு மாறிவிட்டது. இந்தச் சூழலில் “குடியேறிகள்”  போன்ற சொற்கள் பயன்படுத்துவது நாம் இப்போது என்ன உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பிரமிக்க வைக்கிறது.

மாதம்தோறும் கவிமாலை கவிச்சோலையில் பரிசுகள் வழங்குவது பற்றிய விமர்சனம் மிகவும் பழைமையானது. நான் 30 வெள்ளி பரிசை வாங்குவதற்கு சனி ஞாயிற்றுக்கிழமைகளில் 60 வெள்ளி சம்பளத்தில் ஒரு ஊழியரை என் கடையில் அமர்த்திவிட்டு செல்கிறேன். எனக்கு கிடைத்த 30வெள்ளி பரிசுகள் என்னைப் பொறுத்தவரை விலை மதிக்க முடியாதவை (உங்களிடமிருந்து கூட ஒரு பேக் (bag)  பரிசு வாங்கியிருக்கிறேன்) கவிமாலை, கவிச்சோலைக்கு வரும் நண்பர்களுக்கு ஒவ்வொரு வகையிலும் அவைகள் விலைமதிப்பில்லாதவைதான். அத்துடன் பரிசைப் பற்றி விமர்சிப்பது அதை மனமுவந்து மாதம்தோறும் கொடுக்கும் பரிசளிப்பவர்களின் நோக்கத்தை கீழறுக்கும் செயல்.

வளர்ந்து வரும் பாண்டித்துரையின் கவிதைகள், கவிதையைப் படித்து முடித்தவுடன் கனமான நினைவுகளை எழுப்பிக் கொண்டிருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

நாதஸ்வரத் சப்தத்தோடு
கலைஞரின் வாழ்த்துச்செய்தியை
ஏந்தி வந்த கூட்டத்தை
திரும்பிப் பார்த்தவர்கள்
கவனிக்கத் தவறியிருக்கக்கூடும்
வாய்பொத்தி சிரித்து வந்த
சிறுமி ஒருத்தியையும்
அவளை ஒத்த சிறுவனாக மாற
வாய்பொத்தி சிரித்த என்னையும்

(பாண்டித்துரை – உயிரோசை –e.magazine)

ஒரு பழம் பாடலும் என் நினைவுக்கு வருகிறது.

குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் இங்கில்லை குறும்பி அளவாய் காதைக் குடைந்து தோண்டி எட்டினமட்டும் அறுப்பதற்கோ வில்லி இல்லை இரண்டொன்றாய் முடிந்து தலை இறங்க போட்டு வெட்டுதற்கோ கவி ஒட்டக் கூத்தன் இல்லை விளையாட்டாய் கவிதைகளை விரைந்து பாடித் தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைகள் உண்டு தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே!

எனவே முக்கியமாக படைப்புகள் குறித்து குறைந்த பட்ச விமர்சனம்ப் பார்வைகள் சிங்கப்பூரில் உருவாக வேண்டும் அவைகள் நல்ல படைப்புகளின் உருவாக்கத்திற்கு மிகவும் பயனளிக்கும்.

நம் சிந்தனைக் கடலோரத்தை தினம் அரித்துக்கொண்டிருக்கும் மொக்கையான விமர்சனங்களின் பின்விளைவுகள், நல்ல விமர்சனக் காற்றை வீசட்டும்.

 உங்கள் கவிதைகள் மீண்டும் பிறக்கட்டும்.

பாலுவின் பதிவை படிக்க விமர்சனமா…விகாரமா….- சிங்கப்பூர் இலக்கிய விமர்…

அப்துல்காதர் ஷாநவாஸ்

Advertisements
பின்னூட்டங்கள்
 1. தங்கள் எண்ண ஓட்டம் நன்று!

 2. pandiidurai சொல்கிறார்:

  ஷான் என்ன இது சத்தமே இல்லாம
  நல்ல பதிவு – பதில் கடிதம் (யாருக்குனு நான் சொல்லனுமா)

  ஷான் உங்களிடம் பிடித்த விசயமே இந்த ஞாபகசக்திதான். உங்களின் கட்டுரைகளில் பல ஆதாரக்குறிப்புகள் இருக்கும்.

 3. pandiidurai சொல்கிறார்:

  என் கவிதை குறித்த உணர்தலை குறிப்பிட்டதுடன் எனது கவிதையையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

 4. pandiidurai சொல்கிறார்:

  ஆமா கேட்கணும்னு நினைச்சேன் இரண்டுபேரும் அம்சமா இருக்கும் இந்த புகைப்படத்தை எங்க புடிச்சிங்க

 5. கலா சொல்கிறார்:

  கடுகு சிறிதென்றாலும்
  காரம் பெரிது

  நல்ல விளக்கத்துடன்……
  நன்றி ஜயா
  நலமா?அண்மைய நிகழ்வுகளில்
  உங்கள் முகம் தென்படவில்லை????

 6. கே.பாலமுருகன் சொல்கிறார்:

  ஷான், அருமையான பதிலடி. சமயோசிதமான கேள்விகள்.

  http://bala-balamurugan.blogspot.com/2010/06/blog-post_03.html

  முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி கருத்துபடி ஒரு எழுத்தாளன் என்பவன் எந்தவகையிலும் தன் எழுத்தின் மூலம் முரண்படவே கூடாது. அவனுக்குக் கொடுக்கப்படும் ஒழுக்கத்திலிருந்து அவன் மீளாமல் பரிசுத்த ஆத்மாவாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை விநியோகம் செய்திருக்கிறார்.

 7. Na.Vee.Sathiyamurthy சொல்கிறார்:

  Dear Brother Navas
  Your article is very nice and fantastic. The photos…Ka.. ka.. ka.. ko..
  Do you have any rewind button in your brain? So much memory..
  First 15 questions were given by Mr.Paalu Manimaran. I think that Lady may read it. she is now
  thinking how to answer. I am sure she dont have any correct & direct answer to even one question. Now you write this very decent review ( Thank you very much on behalf of our
  Kavimaalai & Kavichcholai Poets) I think next will be from brother Paandiththurai.I am eagerly
  waiting to read all the review for that Lady’s innocent article. Finally I want to write what you all missed. Because I want to ask that Lady some questions.Thank you very much again.

  Kindly yours
  Na.Vee.Sathiyamurthy

 8. chinnabharathi சொல்கிறார்:

  kalaikalukkum kalaimakal dunai poeierukkiral miga varundukiren

 9. […] இலக்கிய சர்ச்சை, வல்லினம் /// 6 […]

 10. […] இலக்கிய சர்ச்சை, வல்லினம் /// 1 அத்திவெட்டி […]

 11. ஜெயந்தி சங்கர் சொல்கிறார்:

  ஒரு படைப்பைக் குறித்துச் சொல்லும் போது படைப்பாளியை மறந்து விட்டு அந்தப் படைப்பை மட்டும் வாசித்து ருசித்து விமரிசிக்கும் அழகிய அரிய நுண்கலையைக் கற்க இன்னும் நீண்ட காலமெடுக்கும். புரிந்து கொள்ளக் கூடியதே. போகட்டும். அட, ஒரு படைப்பைக் குறித்துப் பேசும் போது காசு/வெள்ளிக் கணக்கை எடுக்கிற ஒருவர் எப்படி இலக்கிய விமரிசகராவார்? அதுவும் மிகச் சொற்பத் தொகையை? தமிழ் மொழியின் மீதான பற்றினாலும் நட்பு வட்டத்தை விரிவு படுத்திக் கொள்ளும் ஆரோக்கியமான இயல்பான விழைவினாலும் தான் கவிச்சோலையிலும் கவிமாலையிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள் வெளிநாட்டு ஊழியர்களான பல இளைஞர்கள். பல்வேறு வாழ்க்கை நெருக்கடிகளுக்கிடையில் தான் அதற்கான நேரத்தை அவர்கள் ஒதுக்குகிறார்கள். இன்னும் சொல்லப் போனால், அவர்களில் பலர் அங்கே போவதற்காக வேலையில் கிடைக்கும் ஊதியத்தைக்கூட இழக்கத் தயாராகிறார்கள் என்றறிகிறேன். அதுமட்டுமில்லாமல், தம் பங்குக்கு சில செலவுகளைச் செய்கிறார்கள். விவரங்களைக் கேட்ட போது அவர்களுடைய பொருளாதார நிலைக்கு அதெல்லாம் மிக அதிகம் என்றே எனக்குப் பட்டது. இவ்வமைப்புகளின் செயல்பாடுகளிலோ அல்லது வழிமுறைகளிலோ அவர்களில் சிலருக்கேனும் சில விமரிசனங்கள் இருக்கக்கூடும். ஆனாலும், ஆர்வம் தான் அவர்களைத் தொடர்ந்து செலுத்தியபடி இருக்கிறது. கவிதை எழுதுதல் குறித்தும் அதிலுள்ள சிக்கல்கள் குறித்தும் நல்ல கவிதையை இனம் காணவும் மேம்படுத்த வேண்டிய கவிதையைப் பிரித்தரியவும் இவ்விளைஞர்களில் ஒரு சிலருக்கேனும் இதைவிட மிகச் சிறப்பாகத் தெரிந்திருக்கும் என்பதே என் அனுமானம். ஏனெனில், கவிமாலையிலும் கவிச்சோலையிலும் இவர்கள் தொடர்ந்து பல்வேறு வகையிலான கவிதைகளுடன் பழகுகிறார்கள். ஒருவரும் குரல் விடுவதில்லை என்பதால் அவர்கள் எல்லோரும் எந்தத் திறனுமற்றவர்கள் என்று முடிவெடுப்பது எத்தனை அபத்தம்! குரலை உயர்த்தி விட்டால் தனக்கு எல்லாமே தெரிந்ததாகக் கருதி விடுவார்கள் என்ற மாயையில் உழலும் யாருக்கும் இப்படித் தானே எழுத/பேச முடியும்? அத்துடன் கூடவே தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சிறியதும் பெரியதுமான வயிற்றெரிச்சல்கள் வேறு, கேட்கவும் வேண்டுமா? வேலைக்கென்று நாடு விட்டு நாடு போவதெல்லாம் இந்த யுகத்தில் மிகச் சர்வ சாதாரணம். ஒருவர் ஊரைவிட்டுப் போனால், உடனே அவர் பொருளாதாரத்தின் உச்சியை எட்டிவிட்டதால் போய்விட்டார் என்பதெல்லாம் சிறுபிள்ளைத் தனமான கணக்குகள். வெறும் செவிவழிச் செய்திகளையெல்லாம் (அல்லது, கனவில் கண்டவையோ?) போட்டு கட்டுரையைத் தாளிப்பது பொறுப்பற்ற போக்கு. ஒரு விமரிசகரில் அதை எப்படித் தான் ஏற்பது? பாலர் பள்ளியில் பயிலும் குழந்தை கூட ஆப்பிளைக் குறித்துப் பேசும் போது தொடர்பில்லாமல் ஆரஞ்சுப் பழத்தின் நிறம் orange என்று கண்டிப்பாக எழுதாது. ஏனெனில், It’s redundant என்று உணரவும் சொல்லவும் தெரியும் அக் குழந்தைகளுக்கு. சரி, இப்டி ஒரு கட்டுரை வந்ததும் கூட மிக நல்லாதாப் போயிற்று. கட்டுரையாளர் குறித்து மேலும் தெளிவாக அறியவும் எமது சிந்தனைகள் விரியவும் நாம் எல்லாரும் இவ்வாறு கருத்துகளைப் பகிரவும் ஏதுவாயிற்று. இல்லையா? ஆகவே, கட்டுரையாளருக்கு நன்றிகள் சொல்வோம். எனக்கு எப்போதுமே தோன்றுவது தான் இப்போதும் மனதில் ஓடுகிறது. நல்ல விமரிசகர்கள் உருவாக வேண்டிய தேவை இருக்கிறது. அதைக் குறித்து நாம் எல்லோருமே சிந்திப்போமா?

 12. pandiammalsivamyam சொல்கிறார்:

  இது இலக்கிய சர்ச்சை .இதில் எனது மூக்கை நுழைப்பது சரியல்ல. ஆனால்உங்களின்
  கடிதத்தில் சொன்ன கருத்துக்களின்மேல்தான் என்து விமர்ஷனம்.தொல்காப்பியரின் 10வகை எழுத்துகுறைபாடுகள்,நண்பர் பாண்டித்துரை யின் கவிதைக்கு ரசிப்பு,பரிசின் உயர்வு–மதிப்பல்ல என்பது எண்ணி சிந்திக்க வைப்பது. நான்தேவாங்கர் பள்ளியில்
  9- ஆம் வகுப்பு படித்தபொழுது கைவளைப்பந்து விளையாட்டில் வெற்றிபெற்றதர்க்கு
  ஒரு அணா பென்ஸிலை பள்ளி பிரார்த்தனையில் என் பெயரை தலமை ஆசிரியர்
  ராதாகிருஷ்ணன்அழைத்து விருந்தினர் கொடுத் தார்.இமயமலையில் உச்சியேறி
  இந்தியக்கொடியை ஏற்றிய எட்மண்ட் ஹில்லரி,டென்ஸிங் நார்கே போல நிமிர்ந்தது
  என் தலை!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s