கடிதம்-6 ( அத்திவெட்டி ஜோதிபாரதிக்கு)

Posted: ஜூன் 11, 2010 in இலக்கிய சர்ச்சை, கடிதம், கவிதை
குறிச்சொற்கள்:, ,

///

3:32 பிற்பகல் இல் ஜூன் 9, 2010

தங்கள் எண்ண ஓட்டம் நன்று!

///

அத்திவெட்டி ஜோதிபாரதிக்கு

நன்றி. தங்களுடைய வலைதளத்தை ஆரம்பத்திலிருந்து படிக்க ஆரம்பித்துள்ளேன். கவிதை விமர்சனம் மூலமாக சிறந்த  நண்பர்களைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கு முனைவர் எம் எஸ் ஸ்ரீ லஷ்மி அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.

சிங்கப்பூரில் தமிழ் வளர்க்க பல அமைப்புகள் இருக்கின்றன. இவ்வளவு அமைப்புகள் தேவைதானா என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க அவைகள் சிறு சிறு குழுக்களாக தமிழ் மொழி கலாச்சாரத்தை வளர்ப்பதை பாராட்டலாம். ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற அளவு பாத்திகட்டி பயிர்வளர்க்கிறார்கள். இந்த சூழலில் படைப்புகள் மீது சரியான விமர்சனப் பார்வை இங்கு அரிதாக உள்ளது. அப்படி வைக்கப்படும் விமர்சனப்பார்வைகளும் சொத்தையாக உள்ளன.

சனி ஞாயிற்றுக்கிழமைகளில் இளைஞர்கள் வறட்டுத் தனமான சினிமா மற்றும் மற்ற பொழுது போக்குகளை தவிர்த்து தங்களுக்கு கிடைக்கும் அரிதான நேரத்தை கவிமாலை கவிச்சோலை போன்ற நிகழ்வுகளில் ஆர்வத்துடன் கலந்து கவிதைகள் படைப்பதை கீழறுக்கும் விதமாக விமர்சனங்கள் செய்வது மிகவும் வேதனைக்குரியது.

வயதானவர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டிகளாகவும் உற்சாகம் கொடுத்து நல் வழிப்படுத்துவர்களாகவும் இருக்க வேண்டும். அது என்றைக்குமுள்ள தேவை அல்லவா!

கண்மணி குணசேரனின் கவிதை  இளமை முதுமை இரண்டுக்கும் பாலம் அமைக்கிறது

மூச்சுக் கட்டி ஊத வேண்டிய
முக்கியமான கட்டத்திலெல்லாம்
சீவாளியைக் கழற்றி
சரிபார்க்கிறது
வயதான நாயனம்
இட்டு நிரப்பிச் செல்கிறது
இளம் தவில்…

நன்றி

ஷாநவாஸ்

Advertisements
பின்னூட்டங்கள்
 1. சி.கருணாகரசு சொல்கிறார்:

  கருத்துக்கு நன்றிங்க நவாஷ்.

  கவிதை மிக அருமை…. உணரவேண்டியவர்கள். உணரணும்.

 2. அன்பின் ஷாநவாஸ்,

  தங்களுடைய கவிதை பொருள் பொதிந்த நல்ல கவிதையாக வெளிப்பட்டு மிளிர்கிறது!
  விமர்சனங்கள் நம்மை செம்மைப்படுத்திக்கொள்ள உதவும்.
  விமர்சனங்கள் தரமானவைகளாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
  விமர்சனங்களில் எள்ளல் முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டிய ஒன்று. அது யாருக்கும் பயன்படாது என்பது மட்டுமல்ல எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
  தொடர்ந்து பதிவிட்டு கலக்குங்கள்!

 3. பாரத் சொல்கிறார்:

  ஷாநவாஸ்

  புகைப்படத்தை கொஞ்சம் பரிசீலிக்கலாமே?

  நாளை சிங்கப்பூர் வலைதளம் பற்றி லெட்சுமி அவர்கள் ஆய்வு செய்யும் போது அத்திவெட்டி ஜோதி பாரதி பிரபலமானவர்களுடன் புகைப்படம் எடுத்து அதை தனது வலைளத்திலும் பிறரது வலைதளத்திலும் போடச்செய்து உலக அளவில் சிங்கப்பூர்ரின் பிரபலமான வலைபதிவராக அவதாரம் எடுக்க முயல்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கலாம்

  மேலும் இதை வைத்து இவர் தமிழக அரசியலிலும் களம் புக திட்டமிட்டுளார் என்று போட்டுடைக்ககூடும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s