கடிதம்-7 (கே.பாலமுருகனுக்கு)

Posted: ஜூன் 13, 2010 in இலக்கிய சர்ச்சை, கடிதம், கவிதை
குறிச்சொற்கள்:, ,

///

2:28 பிற்பகல் இல் ஜூன் 10, 2010

ஷான், அருமையான பதிலடி. சமயோசிதமான கேள்விகள்.

http://bala-balamurugan.blogspot.com/2010/06/blog-post_03.html

முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி கருத்துபடி ஒரு எழுத்தாளன் என்பவன் எந்தவகையிலும் தன் எழுத்தின் மூலம் முரண்படவே கூடாது. அவனுக்குக் கொடுக்கப்படும் ஒழுக்கத்திலிருந்து அவன் மீளாமல் பரிசுத்த ஆத்மாவாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை விநியோகம் செய்திருக்கிறார்.

///

கே.பாலமுருகன்

தங்களின் வருகைக்கு நன்றி

என்னைவிட அதிகம் வாசிப்பவர் நீங்கள். என்னிடம் இலக்கிய சர்ச்சை விவகாரத்தில் சில கேள்விகள் எஞ்சியுள்ளன.

முனைவர் லட்சுமி விமர்சனத்தில் சீரியஸாக சில விசயங்களை நாம் விவாதிக்க நினைத்தால் அவர்கள் சொல்லும் பாடு பொருட்கள் “தாய் நாட்டு மண்மனம் காட்டுபவை” என்று ‘பிரம்மா’ என்ற  கவிதைத் தொகுப்பை சுட்டியுள்ளார்கள் அந்தப் பொதுப்பண்பு தவறா?

ஒரு கவிஞன் அல்லது எழுத்தாளன் முதலில் தன் வாழ்க்கை மூலம் தானறிந்த அனுபவ விவேகத்தை, இரண்டாவது தான் இலக்கிய வாசிப்பின் மூலம் பெற்ற அறிவை, மூன்றாவதாக தான் வாழும் பொதுவான அறிவுச் சூழலிருந்து பெற்றுக் கொண்ட அறிவைச் சார்ந்து உருவாக்கிக் கொள்கிறான்.

அத்துடன் கிராமம் சார்ந்த வளர்ப்புடைய படைப்பாளிகளின் ஊற்றுக் கண்கள் அவர்களுடைய இளமை அனுபவங்களின் மீது அமைந்துள்ளன என்பது சரியா?

அத்துடன் புலன் பதிவுகள், மொழி பதிவுகள் ஆகியவை கருத்தியல் நிலைப்பாடுகள் உருவாவதற்கு முந்தைய கால கட்டத்திலும் அவனுள் ஆழமாக விதைக்கப்படுகிறது இது சரியா?

Advertisements
பின்னூட்டங்கள்
 1. கே.பாலமுருகன் சொல்கிறார்:

  ஷநவாஸ்: தங்களின் பதிவிற்கும் விவாத முன்னெடுப்புகளுக்கும் மிக்க நன்றியும் வாழ்த்துகளும்.
  தாங்கள் என்னிடம் முன்வைத்த கேள்விகளுக்கு மிக எளிமையான பதில்கள் உள்ளன.

  1. புனைவர் லஷ்மி அவர்கள் தனது அறிவின் தவறான உந்துதலால் தானும் ஒரு குடிப்பெயர் சமூகத்தின் நீட்சி என்பதையும் மறந்து, இதுவரை தான் இருக்கும் மண் சார்ந்து எந்த அழுத்தமான படைப்பையும் வழங்காமல், பொது நியாயம் மட்டும் பேசுவதற்குத் தனக்கான அதிகாரச் சொற்களை விமர்சனம் என்கிர தொனியில் பிறர் மீது ஏவிவிட்டுருக்கிறார். இதை மிகப் பெரிய பாதிப்பாக நாம் கருத வேண்டியதில்லை. சுமாரான எதிர்வினையைக்கூட புரிந்துகொள்ளும் ஆற்றல் அவரிடம் இல்லை என்பதுதான் உண்மை. ஆகையால் அதைப் புறக்கணிக்கலாம் அல்லது மீண்டும் மீண்டும் விவாதத்திற்குக் கொண்டு வரலாம். ஒரு சர்ச்சையிலிருந்து புதியதொரு புரிதல் உருவாக்கம் பெறுவது என்பது இயல்பான செயல்பாடு.

  2. நான் பிறந்ததே மலேசியாதான். ஆகையால் என்னைப் பொறுத்தவரை மலேசிய நிலப்பரப்பில்தான் எனக்கான அனுபவங்களும் பால்யகால நினைவுகளும் விரவிக் கிடக்கின்றன. சிறு வயது முதலே மலாய்க்காரர்கள் சீனர்கள் எனும் பல்வேறு இனத்திற்கு மத்தியில் வாழ்ந்தவன் என்கிர முறையில் எனது இலக்கிய வெளியில் எப்பொழுதும் அவர்களுக்கும் அவர்களது கலாச்சாரத்திற்கும் வாழ்விற்கும் இடமுண்டு. இது வலிந்து புகுத்தப்பட வேண்டியது கிடையாது. என் வாழ்வில் இவையாவும் இருக்கும்போது, அது படைப்பாகும் போது இயல்பாகவே உள்ளுக்குள் வந்துவிடும். ஆனால் இதை எழுதுவதற்கு அதாவது மலேசிய பின்னனியைக் கொண்டு படைப்பாக்குவதற்கு எனக்குக் குறைந்தது 22 வருடங்கள் தேவைப்பட்டன. முதலில் எனக்குள் இருக்கும் படைப்பாளனை அடையாளங்காணல், இலக்கிய மொழி கதை மொழி கைவசம் பெறுதல், பிறகு படைப்பைத் தருவது, இதற்கு மத்தியில் ஒரு படைப்பாளன் எப்பொழுது தனக்கான நிதர்சன வெளியை, தனக்கான மொழியை, தனக்கான இலக்கிய ஆற்றலை, பாணியைக் கண்டறிகிறான் என்பதைப் பிறர் தீர்மானிக்க இயலாது.

  3.எழுத்தாளன் எனத் தனியாக இல்லாமல் எல்லோருக்குள்ளும் ஒரு குழைந்த இருக்கிறான். அவனது தேடல் அகத்திற்குள் விரியும் ஒர் உன்னத தரிசனம். அதனால்தான் பெரும்பாலான எழுத்தாளர்கள் தனது பால்ய வெளியைப் படைப்பாக்கிவிட்டுத்தான் அடுத்த களத்திற்கு நகர்கிறார்கள். எனக்குள் இன்னமும் சொல்லப்படாத ஒரு பால்ய காலம் இருப்பதால், அதை மீண்டும் மீண்டும் தேடி ஓடுவதில் என்ன தவறு?

  4. சிங்கப்பூரில் வசிக்கும் நண்பர்கள், இன்னமும் தங்களின் பால்ய வாழ்வை மீட்டுணரும் வகையில் இலக்கியம் படைத்துக் கொண்டிருப்பதை ஒரு வகையாகவும், தற்பொழுதுள்ள சிங்கப்பூர் குடிப்பெயர் வாழ்வின் பின்னனியை இலக்கியமாக்குவதை ஒரு வகையாகவும் அணுக வேண்டியிருக்கிறது. இரண்டும் அந்தப் படைப்பாளனின் தேர்வு சார்ந்தது.

 2. thamilan சொல்கிறார்:

  http://allinall2010.blogspot.com/2010/07/blog-post.html

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.

  அன்புள்ள சகோதர சகோதரிகளே
  ஒரு முக்கியவேண்டுகோள்.

  நாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்
  என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திர்க்கு எதிராக
  ராஜன்+வால்பையன்
  இருவரும் நம் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸால்)
  அவர்களை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள்ளால்
  விமர்ச்சனம் செய்துள்ளார்கள்.

  இவர்கள் நாகரிகமான முறையில் பதிவிட்டிருந்தால்
  நிச்சயமாக நாம் பதில் சொல்லகடமைப்பட்டிருக்கிரோம்.

  ஆர் எஸ் எஸ், பாஜக, விஸ்வஹிந்த் இவர்களைப்போன்று மகா மட்டமான
  வார்த்தைகளை உபயோகித்து இருக்கிரார்கள்.

  நீங்கள் உண்மையாணவர்களாக இருந்தால் இன்றுடன்
  ராஜன்+வால்பையன்மற்றும் அங்கு கூடி இருந்து கும்மி அடிக்கும் அனைவர்களது வலைப்பூவையும் நிராகரியுங்கள்.

  நான் கூறுவது சரியா தவரா?
  பதில் கூறவும்.
  வஸ்ஸலாம்.

 3. pandiammalsivamyam சொல்கிறார்:

  விமர்சனங்கள் மாறுதலுக்கு உட்பட்டவை.அவரவர் கருத்து அவர்களுக்குத்தான்
  சொந்தம்.பூவாய்ப் போவதும்,கல்லாய்ப் போவதும் ஒருவரது மனநிலப்பாடுகள்.
  மௌனம் என்பது ஏற்றுக்கொண்டதற்காண அர்த்தமல்ல. இதோ எனது குப்பைகவிஞர்
  சொன்னது!
  “எல்லாப்பக்கமும் சிவப்பு விளக்குகள்
  என க்குப்பிடித்த பாதையில்
  நடந்து கொண்டிருக்கிறேன்
  நம்பிக்கையுடன்!”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s