உயிரோசையில் சில கவிதைகள்

Posted: ஜூலை 6, 2010 in கவிதை

சுனை மடி

1)

சுழலும் நாற்காலியில் சுற்றினால்
உலகமே சுற்றும் என
அவள்தான் முதலில் சுற்றிக்காண்பித்தாள்
நெல்லிக்கனி தின்று தண்ணீர் குடித்தால்
இனிக்கும் என்று ரகசியம் சொல்லிவைத்தாள்
அவள் கைபிசைந்து ஊட்டிய
”நாஸிலெம்மா” கோழி இப்போது
எந்தக் கடையிலும் கிடைப்பதில்லை
கொரியா துப்பாக்கியால் சுட்டால் மட்டுமே
உதட்டுச் சாயம் வரைந்து
நாக்கு நீட்டி செத்துப்போவாள்
எங்கிருப்பாள் எப்படியிருப்பாள்
அல்லது இருக்கிறாளா
அவள்முகவரியை அம்மா எங்காவது
எழுதி வைத்திருப்பாள் என்று தேடினால்
அமுதா அக்கா முகவரி மட்டும் காணப்படவில்லை
அனைத்துமே பணிப்பெண் என்றே குறிக்கப்பட்டிருந்தது

2)

வெளிச்சம் சேமித்த இரவு
பொழுதுகளோடு நாம் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
இங்குதானே இளைப்பாறுகிறோம்
இந்த நிழலின் இடுக்குகளில்தான்
எங்கோ சிறையிருக்கிறது
நாளையின் விடியல்
இங்கு அடித்த மின்னலில்தான்
காலையில் காளான்கள் முளைக்கின்றன
கூவிக் கொண்டிருக்கும் குயிலையும்
உறுமிக் கொண்டிருக்கும் சிங்கத்தையும்
இங்குதானே கட்டிப் போடுகிறோம்
இங்கு நிலாப்பால் குடிப்பவர்க்கு
நித்தமும் விடிகிறது
மனப்பால் குடிப்பவர்க்கோ
இரவுகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன.

நன்றி: உயிரோசை (www.uyirmmai.com/Uyirosa)

பின்னூட்டங்கள்
 1. NA.VEE.SATHIYAMURTHY சொல்கிறார்:

  Dear Brother Navaas

  Today after a few days received your call for the sake of Peer Mohd. I am proud of you. You & I were have faith on god so good only happen to everybody.

  Today after lunch break I saw the Uyirosai. Drunk the FRESH TAMIL MILK FROM SUNAI MADI.
  Really fantastic. Really we lost so many after we lost our childhood. Yes the house maid is a mother w/out give birth. I am hundred percent sure that in all the singaporeans life there will be ONE AMUDHA AKKA.

  In IRAVU you show both side of our human life-KADAVUL PAADHI MANIDHAN PAADHI KALANDHU SEIDHA KALAVAI-Really I fully enjoyed two kavidhai.

  Pls. SERVE YOUR ROJAAK WITH TASTE & CRISPY like these Kavidhai.

  With thanks & regards
  Na.Vee.Sathiyamurthy

 2. k.kuberanarayanan சொல்கிறார்:

  nanba nee or elloralum virmbappadubavan.Athilum athigamai pengalal

 3. ArunaSunthararaasan சொல்கிறார்:

  Kaathar, vanakkam. Ungal kavithaigal padiththaen. magizhchi oru puram aachchariyam maru puram. Oru valari ithazh anjalil anuppa 70 rubaai aagirathu. december ithazhum saerththu anuppugiraen. Valarikkum minnanjal mugavarikku kavithai anuppungal. Kadantha gnayiru Thiruchchiyil Canada Buhariyin kavithai nool veliyidappattathu. Sari, Veettil anaivarukkum engalin visaaripphkalaith theriyappaduththungal. Mattravai piragu…
  Anbudan
  Aruna, Manamadurai

 4. R.Karthigesu சொல்கிறார்:

  ஷா நவாஸ், வணக்கம். கவி கா.மு.ஷெரிப் பற்றிய உங்கள் குறிப்பு பார்த்தேன்.
  கேட்பதற்கு மன்னியுங்கள். இருக்கிறாரா? இருந்தால் எப்படி இருக்கிறார்?
  ரெ.கார்த்திகேசு.
  karthigesur@gmail.com.

 5. pandiammalsivamyam சொல்கிறார்:

  கா.மு.ஷெரீப் அன்னையின் ஆணை திரைப்படத்தில் அன்னையைப்பற்றி ஒரு பாடல் செதுக்கி இருப்பார்.
  பத்துமாதம் சுமந்திருந்து பெற்றாள்
  பகல் இரவாய் விழித்திருந்தே வளர்த்தாள்
  வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்
  மேதியினில் நாம் வாழ செய்திட்டாள்
  அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை-அவள்
  அடிதொழ மறப்பவர் மனிதரில்லை
  மண்ணில் மனிதரில்லை
  விண்ணில் மின்னும் தாரகைகள்
  மண்ணில் வாழ்ந்த அன்பு அமுதா
  அன்னைமார்களின் கண்களோ!
  சுழலும் உலகமே உன்னை கண்டுகொள்ளட்டும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s