கனவுப் பந்துகள்

Posted: ஜூலை 11, 2010 in பத்தி

Mr.Wong நான் புளோக்கிலிருந்து வெளியாகும் போது சரியாக காலை நடையை முடித்துவிட்டு பார்க்கில் உட்கார்ந்திருப்பார். அதிகாலை 2 மணி கால்பந்தாட்டத்தை என்னிடம் விசாரிப்பார். இங்கிலாந்து ஜெர்மனியிடம் தோற்றுப் போனதைப் பற்றி அன்று பேச்சை ஆரம்பித்தார். 1970 இங்கிலாந்து தேர்தலில் ஹெரால்டு வில்சன் இங்கிலாந்து அணியை நம்பினார், ஆனால் 2-3 என்ற கணக்கில் ஜெர்மனி ஜெயித்தது. இப்போதும் இந்த ஜெர்மனிக்காரன் ஜெபுலானி பந்துகளை நன்றாக ஆடி பயிற்சி பண்ணிக் கொண்டு வந்து நன்கு முன்னேறுகிறான் என்றார்.

அர்ஜென்டினாவும், இங்கிலாந்தும் 1986ல் பாக்லாண்டு யுத்தம் செய்ததே, இந்த மாரடோனா கையால் போட்ட கோலால்தான் என்றார் .  S.A.இராஜகோபல் ஏ.சுந்தரமூர்த்தி, டோலா காசிம், சமது அல்லா பிச்சை, பாண்டி அகமது, வில்ஸ் கின்னர் இவர்களின் தொடக்கத்தையும் முடிவையும் 4 ஆண்டுகள் உலகக் கோப்பை இடைவெளியில் நுழைந்து நினைவுகள் தப்பாமல் சொல்வார்.

 உள்ளபடியே 2010 சிங்கப்பூர் குழு உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றில் வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்கு. இந்த முறை சவுதிஅரேபியா மற்றும் உஸ்பெகிஸ்தான் குழக்களிடம் அடைந்த தோல்வி அந்த இலக்கை அடையமுடியவில்லை.

கடந்த 80 வருடங்களில் எல்லா ஜீரங்களையும் மிஞ்சி உலகில் பல நிகழ்வுகள் நடக்கக் காரணமாக இருப்பது கால்பந்து ஜீரம் ஒரு காரணிதான்.

1949க்குப் பிறகு சீனாவில் முக்கிய நிகழ்வாக 1978ல் உலகச் சந்தைக்குத் தன் கதவுகளை திறந்து விட்ட சீனா அதே ஆண்டில் உலகக் கால்பந்து போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்க அனுமதி அளித்தது.

1934 முஸோலினி கால்பந்து போட்டிகளை தன் பிரச்சார ஆயதமாக்கி தன் கொள்கைகளை தற்காக்க முயன்றது,  அதேபோல் ஹிட்லரும் பெர்லின் ஒலிம்பிக்கை பயன்படுத்திக்கொண்டதை உலகம் அறிந்த செய்திகள்.

1969ல் எல்சல்வாடரும் ஹொண்ராஸிம் (தற்போது தென் ஆப்பிரிக்கா) தேர்வுச் சுற்றுக்களில் மோதல் வெடித்தது,  போராகி மோதல் வெடித்ததில் 2000 பேர் வரைக் கொல்லப்பட்டனர்.

ஐவரி கோஸ்டில் நடந்த உள்நாட்டுப் போர் 2006ல் கால்பந்து போட்டி நாட்களில் துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்திருந்ததும், 1975 லிருந்து நடந்து வந்த லெபனான் உள்நாட்டுப் போர் 4 வருடங்களுக்கு ஒருமுறை அமைதி காத்ததும் கால்பந்து தீவிரத்தின் வெற்றிகள்.

இன்றைய இளைஞர்களுக்கு உள்மனதில் சரியான திட்டங்கள் இருக்கின்றது. போரை நோக்கியே தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் சித்து விளையாட்டுக்களை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

என் மகன் முக்கிய பங்காற்றிய குழு சிங்கப்பூர் பள்ளிக்கான அனிமேஸன் போட்டிகளில் Gan Eng Seng பள்ளிக்கு முதல் பரிசு பெற்றுத் தந்தது. அந்த அனிமேஷனை போட்டுக்காட்டு என்ன தீம் என்று பார்க்கலாம் என்றேன். வெடிகுண்டுகள் எங்கும் வெடித்த வண்ணம் உலகே போர்களமாகிக்கிடக்கிறது இன்னும் இன்னும் மூர்க்கமாகி வரும் வேளையில் குண்டுகளெல்லாம் ஒன்றாகி ஏதோ ஒரு உருண்டை வடிவம் உருண்டு உருண்டு அப்படியே கால்பந்தாகி மனிதத் தலைகளின் ஆரவாரத்துடன் நிலை நின்றது.

http://www.youtube.com/watch?v=9FfOdWdhkkk

எத்தனையோ முறைகள் வீசப்பட்டுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் பந்துகள் இந்தியா பாகிஸ்தானுக்கிடையே விரோதத்தை வளர்ப்பதே தவிர ஒற்றுமையைக் கொண்டு வரவில்லை. பாகிஸ்தான் சோயப் மாலிக்கை திருமணம் செய்த சானியாமிர்சாவிற்கு இந்தியாவில் வரவேற்பில்லை.

இந்நிலையில் இரண்டு இளம் ஆட்டக்காரர்கள் பாகிஸ்தான் அசன் அல்ஹக் குரெஷி மற்றும் ரோஹன் போபண்ணா இருவரும் இந்தியா பாகிஸ்தான் எல்லைகளில் திசைகள் மாற்றி நின்று கொண்டு டென்னிஸ் விளையாடி இருநாட்டு ஒற்றுமைக்கும் பாலம் அமைக்கப்போவதாக சீறுகிறார்கள். Stope war, Star tennis  இயக்கத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

பந்துகள் உலக ஒற்றுமைக்கு பாலம் அமைக்கும் என்று இளையர்கள் நம்ப ஆரம்பித்துள்ளனர் (அரைபந்து, கால்பந்து என்று பந்தயம் கட்டும் இளையர்களை நாம் கணக்கில் கொள்ளத் தேவையில்லை)

ராக் ஸ்டார் போனோ “ ஐயா கால்பந்து தினத்தன்று அனுபவிக்க பள்ளிகளுக்கு விடுமுறை கொடுங்கள், கடைகளை அடையுங்கள், நகரத்தை மூடிவையுங்கள், அப்படியே போரையும் நிறுத்திவிடுங்கள் என்று பாடும் ராக் பாடல் உலகெங்கும் ஒலிக்கட்டும்.

Advertisements
பின்னூட்டங்கள்
 1. pandiammalsivamyam சொல்கிறார்:

  இதுவரையிலும் இந்த கனவுப்பந்தை யாரும் பார்க்கவில்லை (5வருடங்கள்-1803-நாட்கள்) என்ற என் மகிழ்ச்சியை விட ,நல்ல விசயங்கள் எப்படி கேட்பாரற்று,
  பாரதீ சொன்னதுபோல்”நல்லதோர் வீணை செய்தே அதன் நலங்கெட புழுதியில்”
  கிடந்தது மனத்தை நெருடியது. காசை(பணத்தை) வட்டமாக வடிவமைத்தவன்
  இந்தியன்-அதிலும் தமிழன் என்றும் பெருமை கொள்ளலாம்.”அது எட்டி உதைக் கும்-
  வரை பந்தாகிறான் மனிதன்.அதை எட்டி உதைக்கும்போது அவன் அதன் எஜமானன்-ஆகிறான்”குப்பை கவிஞ்ர் எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது. அந்த பாடல்
  நிச்சயம் சிங்கை வழியாக இந்தியாசென்று உலகெங்கும் எதிரொலிக்கும் நாள்
  வெகுதூரத்தில் இல்லை.

  பார்க்கவில்லை(5வருடங்கள்-1803நாட்கள்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s