அஞ்சலி – அபிராமம் கௌஸ் வாத்தியார்

Posted: ஜூலை 13, 2010 in பத்தி
குறிச்சொற்கள்:,

அனைத்து வீட்டு வாசல்களிலிருந்தும் கண்ணுக்கு புலப்படாத தடம் ஒன்று கஃப்ருஸதானை நோக்கி செல்கிறது என்றான் ஒரு உருது கவிஞன்.

மாமு  என்று அனைவராலும் அழைக்கப்படும் எங்கள் மதிப்புக்குரிபௌதிக ஆசிரியர் ஹாஜி அகமது கௌஸ் 11.07.2010 காலமாகிவிட்டார்.  நண்பன் குத்புதீன். அபா.சாகுல் கமீது இருவரும் எனக்கு செய்தி சொன்னவுடன் என் பள்ளிக் கூட நாட்களில் அதிக நாட்களை ஆட்கொண்ட அவருடைய நினைவுகள் வலம்வரத் தொடங்கின.

முதல் 20வயதுப் பருவத்தில் வாழ்வை நெறிப்படுத்தக் ஆடியவர்கள் நிழல் நமக்குக் கிடைக்கும் போது அது வாழ்நாள் முழவதும் நம்மைத் தொடர்கிறது.

ஆசிரியர்களில் பலவகைப் பட்டவர்கள் ஆரம்பக் கல்வி முதல் பள்ளி கல்லூரிக் காலம் என என் வாழ்வில் வந்து போயிருக்கிறார்கள்.

நாஞ்சில் நாடன் சொல்வார் …

வாத்தியார்கள் முன்பெல்லாம் பணம் இல்லாவிட்டால்
பீஸ் கட்ட உதவுவார்கள்.
புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பார்கள்
சட்டை வாங்கித் தருவார்கள்
மதிய உணவைப் பங்கு வைப்பார்கள்
நோய்க்கு மருந்து வாங்கித் தருபவர்கள்
சைக்களில் வைத்து மிதித்து பள்ளிக்கூடம்
கொண்டு சேர்ப்பவர்கள் இருந்தார்கள்

இப்போதோ

பால் வியாரிகள்
பலகாரா வியாரிகள்
பாட புத்தகம் விற்பவர்
வட்டிக்கு விடுபவர்
பாதிநாட்களில் பள்ளிக்கு வராதவர்
ஆளும் கட்சிகளின் கூலிகள்
நடத்தும் பாடம் அறியாவர்களாக இருக்கிறார்கள்

அந்த இருந்தார்கள் என்ற முதல் வரிசையில் வைக்கக்கூடியவர்தான் ஹாஜி அகமது கௌஸ் அவர்கள்.

நத்தம் கருப்பாயூரணி படித்துறையில் அவர் குளித்து முடித்து படியேறும் வரை நானும் தியாகராஜனும் குளிக்கக் காத்திருப்போம். அவர் சென்று விட்டால் அல்லித் தண்டை தாரளமாக பறித்து விளையாடிவிட்டு வரலாம். அது அவருக்குத் தெரியும் ஒரு எச்சரிக்கை செய்யும் பார்வையுடன் கடந்து செல்வார்.

அதிரப் பேசி ஒருநாள் கூட நாங்கள் பார்த்ததில்லை, ஒருநாள் வகுப்பில் துரைராஜ் பாதித் தூக்கத்தில் விழித்த மாதிரி ஒன்றுக்கு மணி அடிச்சாச்சா என்று கேட்டான், அதைத் தன் காதில் வாங்கிக் கொண்டு அடுத்து சாப்பாட்டு மணி, அதற்கடுத்து வீட்டு மணி,

என்ன வகுப்பில் கண்ணை திறந்து கொண்டு தூங்குறே… வீட்டுக்குப் போனால் கண்ணை கண்ணை மூடிக்கொண்டு தூங்குவே!..

என்று பிளாக் போர்டை பார்த்துக்கொண்டே பேசினார்.

என்னைப்போலவே ஆசிரியரின் நீங்காத நினைவுகளுடன் ஆயிரமாயிரம் மாணவத் தோழர்கள்…

அவர் என்றும் மறக்க இயலாதவர்.

Advertisements
பின்னூட்டங்கள்
 1. அ.ப.சாகுல் ஹமீது சொல்கிறார்:

  அபிராமம் முஸ்லீம் மேல் நிலைப்பள்ளியில் படித்த
  அனைத்து மாணவர்களின் சார்பாக அன்னார் மறுமையில்
  ஈடேற்றம் பெற்றிட துவா செய்கிறேன்.
  அ.ப.சாகுல் ஹமீது
  பழைய மாணவர்,
  முஸ்லீம் மேல் நிலைப்பள்ளி
  அபிராமம் – நத்தம்
  தமிழ்நாடு

 2. k.kuberanarayanan சொல்கிறார்:

  pasumai ninaivugalal siriththen. always sleeing nanban durairaj. pasumai ninaivugalal kalanginen gouse sirai ninaithu.

 3. adhithakarikalan சொல்கிறார்:

  எனக்கு பரிச்சயம் இல்லாத ஆசிரியர்க்கு எனது அஞ்சலி…

 4. sabitha சொல்கிறார்:

  gows vathiar maranam anjali samrpanam dear kadar ungal authi

 5. venkateswari சொல்கிறார்:

  while conveying deep condolences to your favourite teacher’s family, I feel very proud of you for having remembering your teacher now.

 6. shamsul சொல்கிறார்:

  சில மறக்க முடியாத ஆசிரியர்களில் ஹாஜி அகமது கௌஸ் அவர்களும் ஒருவர்.

 7. pandiammalsivamyam சொல்கிறார்:

  நன்றி சொல்ல வேண்டிவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சொல்லிவிடு
  என்பார் நண்பர் குப்பைகவிஞர் உயிர்ப்பயணம் மிக நுட்ப்பமானது. சித்தர்கள் வழிகாட்டியுள்ளனர் அந்த பயணப்பதையை. “இருந்தார்கள்” என்பவர்கள் எப்பொழுமே -குறைவானப்பேர்கள்தான் .ஆனால் அவர்கள் விதைத்துச்சென்ற நிலங்கள், விதைகள் வீரியம்மிக்கவை. பல பிரளயங்களையும் தாண்டியும் முளைக்கக்கூடியவை, பயன்தரத்தக்கவை. சின்னாளப்பட்டியில் சிறிய மலர் பள்ளியில் என்னை கைகால்களைக் கட்டி தூக்கிவரச்செய்து என் தொடக்க ல்விக்கு
  புள்ளி வைத்தவர்திரு.ஜோதிமணி அவர்கள். எனக்கு வயது 64 .அவர் இன்றும்
  உயிருடன் இருக்கிறார்.நான் பார்க்கும் பார்வையின் புரிதலுடனும்,புன்சிரிப்புடனும்!
  நன்றி நவாஷ்! எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தமைக்கு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s