கால்பந்து: சில அற்ப சந்தேகங்கள்

Posted: ஜூலை 28, 2010 in பத்தி
குறிச்சொற்கள்:

நன்றி: உயிரோசை.காம் 100 -வது இதழ்

உயிரோசை ஆசிரியர் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

கால்பந்து திருவிழா முடிந்துவிட்டது, ஆனாலும் எனக்கு சில சந்தேகங்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கின்றன. யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று நண்பர் இந்திரஜித்திடம் கேட்டால் எதற்கும் நீங்கள் ஆர்.அபிலாஷிற்கு ஒரு மெயில் தட்டி விடுங்கள் என்றார்.

என் சந்தேகங்களை அடக்கி வைக்க முடியாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

1. சிறுவர்சிறுமியர்களை விளையாட்டு வீரர்கள் திடலுக்குள் நுழையும்போது கைபிடித்து அழைத்து வருகிறார்கள், ஒரு போர்க் களத்திற்கு சிறுவர் சிறுமிகளை கூட்டி வருவது சரியா?

2. வீரர்கள் அம்பயருடன் அடிக்கடி வாக்குவாதம் செய்கிறார்கள், என்றாவது அம்பயரின் முடிவை மாற்றியிருக்கிறார்களா?

3. பெண்கள் கால்பந்தில் ஜெர்சியை மாற்றிக்கொள்ள தடை உள்ளதா?

4. அணிகளுக்கிடையே ஜெர்சி கலர் வித்தியாசமாக இல்லாவிட்டால், மாற்று அணியினருக்கு அடையாளம் தெரியாமல் பந்தைக் கடத்தி வீடவிவார்கள் தானே?

5. வீரர்கள் அடிக்கடி புல் தடுக்கிக் கீழே விழுகிறார்கள், அல்லது எதிரணி வீரர்கள் காலை வாரி விடுகிறார்கள், இத்தனை முறை கீழே விழுந்தவர்கள் என்ற புள்ளிவிபரம் எடுப்பதில்லை. ஏன்?

6. கால்பந்துக்கு உதைபந்து என்று இன்னொரு பெயர் உள்ளது, சமயம் கிடைக்கும்போதெல்லாம் வீரர்கள் உதைத்துக் கொள்கிறார்கள்! அவர்களுக்கு இன்னொரு பெயர் என்ன?

7. கை தவறிப் பந்தை தவறவிட்ட கோல்கீப்பரின் மேல் அவர் நாட்டு மக்களுக்கு இவ்வளவு வெறுப்பு ஏன்?

8. ஆட்டம் முடியுமுன்பே ஜெர்சியைக் கழற்றுவது அடிக்கடி நடக்கிறது, இதில் சில அம்பயர்களுக்கு ஆட்டம் முடிந்துவிட்டதோ என்று குழப்பம் ஏற்படுவதாகச் சொல்கிறார்கள் உண்மையா?

9. கோல் போட்டவுடன் கொஞ்சநேரம் வீரர்கள் சுதாரித்து நின்று கொள்கிறார்கள் மேலே வந்து விழும் சக ஆட்டக்காரர்களின் உடல் எடை அவர்களுக்குத் தெரிந்திருப்பதால் தான் அவ்வாறு சொல்கிறார்களா?

10. இந்த உலகக் கோப்பையில் ஜப்பானிய வர்ணனையாளர் ‘ரூனி’யை ‘லூணி’ என்று குறிப்பிட்டார். ஆனால் ‘ரொனோல்டா’க்களை எப்படி உச்சரிப்பார்கள்?

11. விளையாட்டை ரசித்துக் கொண்டிருக்கும்போது ரசிகர்கள் உணர்ச்சி வசப்பட்டு பின்னால் ஓங்கித் தட்டிக் கொள்கிறார்கள் பின்னால் தட்டுவதற்கு விசாரணையோ அல்லது தண்டனையோ எதுவுமில்லை ஏன்?

12. இரண்டு கைகளையும் அம்பயரிடம் தூக்கிக் காண்பித்தால் ‘நான் எதுவும் செய்யவில்லை’ என்று அர்த்தமா? இது உலக சைகை மொழி எதிலும் இடம்பெறவில்லை ஏன்?

13. உலகக் கோப்பை நடக்கும்போது உலகம் இரண்டாகப் பிரிகிறது. ஒன்று கால்பந்து உலகம், இன்னொன்று, கால்பந்தில் தகுதி பெறாத உலகம். கால்பந்து உலகத்தில் நாடுகளின் தலைவிதியை ”பால் ஆக்டோபஸ்” கணித்துச் சொல்லி அதன் உயிருக்கு மிரட்டலைக் கேட்டு வாங்கிக் கொள்கிறது, கால்பந்தில் தகுதி பெறாத நாடுகள் வேடிக்கை பார்கின்றன ஏன்?

14. ஜெர்சியை வேண்டா வெறுப்புடன் பெற்றுக்கொண்ட தோற்ற அணி வீரர் ‘இவ்வளவு கெட்டவாசனை’ பிடித்தவன் என்று மற்றவர்களிடம் காண்பிக்க, ஜெர்சியை லாண்டரிக்குப் போடாமல் வைத்திருக்க தகுந்த ஆதாரங்கள் உண்டு என்று சொல்கிறார்களே உண்மையோ?

15. சிங்கப்பூர் மணிக்கிளியின் இறுதியாட்ட முடிவு தோல்வியடைந்ததற்காக மணிக்கிளியின் முதலாளி வருந்தியிருப்பாரா? ஆக்டோபஸ்உடன் போட்டியிட்டு மணிக்கிளி உலகப்புகழ் அடைந்ததற்கு மகிழ்ந்திருப்பாரா?

16. கடைசியாக நான் ஆதரிக்கும் அணி எப்போதும் தோற்கிறது அல்லது டிரா செய்கிறது. என்ன காரணம்?

Advertisements
பின்னூட்டங்கள்
 1. அ.ப.சாகுல் ஹமீது சொல்கிறார்:

  100 வது வாரம் கண்ட எங்கள் அண்ணன் சிங்கை ஷாநவாஸ்
  அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! நானும்
  இந்த படைப்பாளியின் ஊரைச்சார்ந்தவன் என்பதில் பேருவகைப்
  பெருமிதம் கொள்கிறேன்.
  பிரியங்களுடன்
  தம்பி அ.ப.சாகுல் ஹமீது

  நான் pallikalvi results என்ற பெயரிலும் tnteu results என்ற பெயரிலும் டொமைன் வாங்கி அதன் மூலம் trb seniority list,secondary grade teachers seniority list,tnpsc results,tnpsc model question paper,university results போன்றவற்றை கொடுத்து வருகிறேன். தாங்கள் தங்கள்
  நட்பு வட்டாரங்கள் அனைவரிடம் சொல்லி என்னுடைய
  வலைத்தலத்தை பார்வையிட அழைக்குமாறு அன்புடன்
  வேண்டுகிறேன்.
  நன்றி!!!

  • ஷாநவாஸ் சொல்கிறார்:

   From Mr.kubera palani

   My dear friend Kadir, Well. Read your” a new experience” it’s very nice and gave new messages to me. Your thoughts on”Tamil Organaisations in Singapore” impressed me well. Yes man “The yield of the Crop is important, we no need to bather about the extent of the field whether it is big or small. Further regarding Foot ball game, I am also having very same experience that Whenever I support and watch a foot ball game that particular team should be defeated.

   • ஷாநவாஸ் சொல்கிறார்:

    Dear Brother Navaas

    I read your KAALPANDHU-SILA ARPA SANDHEKANGAL.

    They are not ARPA SANDHEKANGAL . They are all ARPUDHA SANDHEKANGAL.
    Not only I and You every spectators have all these questions. These are all F A Q.
    But nobody want to reply. What to do? Any way we can get some answers from the
    readers through their comments. I also eagerly waiting for those answers.

    Nalame Soozhattum

    Naalum Anbudan
    Na.Vee.Sathiyamurthy

 2. syed abdul kader சொல்கிறார்:

  DEAR KADER
  I READ YOUR ARTICLE TITLED NEW EXPERIENCE IN UYIROSAI
  AND IT IS VERY INTERESTING TO READ YOUR ARTICLE
  PL. WRTIE ABOUT OUR VILLAGE NATHAM IN UYIROSAI
  AND ALSO ABOUT YOUR WORK EXPERIENCE IN POSTAL DEPT.,
  WASSALAM
  SYED ABDUL KADER

 3. abubkr சொல்கிறார்:

  Brother i did”t get reply or ur note

 4. pandiammalsivamyam சொல்கிறார்:

  1.கோலே போடக்கூடாது என்றால் கோல்போஸ்ஃட்டையே எடுத்துவிடலாம்.
  2.அதிகமான கோல் வாங்கிய குழுவிற்கு பரிசு வழங்கலாம்.
  3ஒருவரை ஒருவர் உதைத்துக் கொள்வதால் -ஆட்டத்தை உடனே உடனே உதையாட்டமாக மாற்றி ர சிகர்களை மகிழ்விக்கலாம்.–அதில் இரத்தக்காயம் பட்டவருக்கு பரிசளிக்கலாம்.
  இன்னும் யோசிக்கிறேன்……..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s