பாடித் திரிந்த பறவைகள்

Posted: ஓகஸ்ட் 22, 2010 in பத்தி
குறிச்சொற்கள்:, ,
சிறுவயதில் நமக்குப் பிடித்த இடங்களைப்பற்றி நினைக்கத் துவங்கினால் நம் ஊர், நாம் வாழ்ந்த வீடு, படித்த பள்ளி என்று தொடரும் நினைவில் ஒரு இடத்தை மட்டும் நம்மால் மறக்க முடியாது அது தொழுகை பள்ளி அதிலும் நோன்பு காலத்தில் சங்கத்து பிள்ளைகளின் “பைத்”.

நோன்பு வந்துவிட்டால் மூன்று மணிக்கு “தப்ஸா” பக்கிரிஷா தூங்கிக் கொண்டிருக்கும் அனைவரையும் எழுப்ப ஆரம்பித்து விடுவார். பள்ளிவாசலில் தரவிஹ் தொழுகைக்குப் பின்பு மதரஸாவில் நண்பர்களுடன் படுத்துத் தூங்க விருப்பமாக இருந்தாலும் வீட்டில் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். சில தடவைகள் நண்பன் செய்தாமுது கூட இருந்தால் அனுமதிப்பார்கள். முதலில் செய்தாமுது பற்றி சொல்ல வேண்டும். நான் உயரம், அவன் ரொம்ப கம்மி. இருவரும் 8ஆம் வகுப்பு படிக்கும்போது சென்னை சென்றோம், புகை வண்டியை வாழ்வில் முதலில் அப்போதுதான் பார்க்கிறேன். இருவரையும் TTR விழுப்புரத்தில் இறக்கி சோதனை செய்ய வேண்டுமென்றார். காரணம் பள்ளி கட்டன சலுகையில் பயணம் செய்ததால் சோதனை, ஒரே வயது இவ்வளவு உயர வித்தியாசம், அவருக்கு வித்தியாசமாக தெரிந்து விட்டது. பிறகு எப்படி எங்களை பயணம் செய்ய அனுமதித்தார் என்பது புகை மாதிரி தெரிகிறது. சரியாக சொல்ல ஞாபகமில்லை.
இறை நம்பிக்கையில் அவன் கெட்டி நோன்பு 30/30 பிடித்துவிடுவான். நான் 3/30தான். ஆனால் நான்தான் அவனுடைய ஒரே நண்பன். என்னுடைய பள்ளி Indoor & outdoor  விளையாட்டுகள் அனைத்திலும் நான்தான் சாம்பியன், பரிசுப் பொருட்களை வாங்க மேடையேறும்போது செய்தாமுது கைகள்தான் ஓங்கி ஓங்கித் தட்டிக்கொண்டிருக்கும்.
“பைத்” ஓதும்போது கமால், குத்புதீன், நஸீர், முஸ்தபா என்னையும் 3-வது அணியில் போட்டுவிடுவார்கள். SSLC படித்துக்கொண்டிருக்கும் எனது சீனியர்கள்தான் முதல் வரிசை. அவர்கள் பைத் ஓதும்போது பல்லவியை மட்டும் நாங்கள் ஓத வேண்டும். பைத் பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டு தெற்குத் தெருவில் நுழைந்து துபாஷ் தெரு வரும்போது இரண்டாவது அணி ஓத ஆரம்பிக்கும். சந்துகளுக்குள் சீனியர்கள் வர மாட்டார்கள் அவர்கள் திருப்பத்தில் நின்று கொண்டு எங்களை சந்துக்குள் அனுப்புவார்கள், பல்லவியை சரியாக பாடிக் கொண்டு வட்டமடித்து வரவேண்டும். அப்போதுதான் எங்கள் சேட்டைகளை ஆரம்பிப்போம், கமால் எப்போதுமே அண்ணா வாத்தியார் மகன் சாதிக் தொப்பியை தட்டிவிடுவான், நான் ஊனாநாகூர் கனி தொப்பியை கீழே தள்ளிவிடுவேன். அவரகள் தேடிக் கொண்டிருக்கும்போது மெயின் பைத்-ல் நாங்கள் சேர்ந்துகொள்வோம்.  சாதிக், ஊனாநாகூர் கனி லேட்டாக வந்ததால் சீனியர்களிடம் அடி கிடைக்கும்.
எங்கள் மூன்றாவது அணி ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டாக பிரிந்து கமால் ஒரு அணியின் தலைவன், நான் எதிர் அணியில்! பைத் காக்காத் தோப்பு தெரு வந்தவுடன் நானும் செய்தாமுதும் மெதுவாக வீட்டுக்குள் நழுவிவிடுவோம். கமால் அப்துல்காதரைக் காணோம் என்று காட்டிக் கொடுத்துவிடுவான்.
அந்த அனுபவங்களின் சுவைகள் எல்லையற்றவை. வாழ்க்கை மாறுந்தோறும் வண்ணங்கள் மாறுகின்றன. பால்ய பருவத்து நினைவுகள் நம் கண்முன் வந்து நிற்கும்போது அந்த அனுபவத்தின் விசித்திரம்தான் எண்ண மாயம் செய்கிறது.
தம்பி சாகுல்கமீது கமால் இறந்து செய்தி சொன்னபோது என்னுள் பதிந்திருக்கும் தடையங்கள் மெல்ல மெல்ல ஒரு சித்திரத்தை உருவாக்கி திரும்ப திரும்ப பைத்தின் நினைவுகளை கொண்டு வந்து சேர்க்கிறது.
 
பின்னூட்டங்கள்
 1. P.Sermuga Pandian சொல்கிறார்:

  அன்புத் தோழர் காதர்
  உங்களது பதிவு பள்ளிப் பருவ காலத்திற்கு என்னை கை பிடித்து அழைத்து சென்றது .நம் நினைவுகளில் அழிய தடம் பதித்த பருவம் அது . ஒன்றாம் வகுப்பு துவங்கி ஐந்தாம் வகுப்பு வரை நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் அசை போடுகிறேன் . நண்பர்களையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன் .அக்காலத்திற்கு மீண்டும் சென்று வர ஒரு கால சக்கரம் வராதா? என்ற ஏக்கம் என்னை இறுக்குகிறது .. கடந்த பெப்ருவரி மாதத்தில் சென்னையில் இருந்தபோது கதிரேசன்,முகமது காசிம் ,சந்திரன் என பள்ளிப் பருவ தோழர்களை தேடித் தேடி அலைந்து ஏன் பார்த்தேன் ? என என்னையையே நான் வியக்கிறேன் .கடந்த 25 அல்லது 30 ஆண்டு களாக இவர்களை எல்லாம் பார்க்க ஏன் தோன்றவில்லை? . எவ்வளவோ தடவை சென்னை வந்திருக்கிறோமே ! என நினைத்துப் பார்க்கிறேன் . ஆம் தோழரே. .அது உள்ளுக்குள் உறைந்து கிடக்கும் பாசப் பிணைப்பு .வாழ்வின் பயணத்தில் ஓடிக் கொண்டே இருக்கும் மனிதன் ஐம்பது வயதை நெருங்கும் போதுதான் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு தான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்ப்பான் போலும் . அப்படித் திரும்பிப் பார்க்கும்போதுதான் மனசுக்குள்ளே தேங்கி முட்டித் தவித்து வெளிவர துடிக்கும் நினைவுகள் துள்ளிக் குதித்து வெளி வந்து துள்ளாட்டம் போடுகின்றன இப்போது தான் அதற்க்கான நேரம் வந்துவிட்டதென்று !துள்ளித் திரிந்த பள்ளிப் பருவ நண்பன் மறைவு வேதனை மட்டுமா தரும்.நம் வயது ஒத்தவர்களின் மறைவு பயத்தையும் தரும்! உங்கள் பதிவு தொடரட்டும் .
  என்றும் நிறைந்த அன்புடன்
  ப .சேர்முக பாண்டியன்

 2. syed சொல்கிறார்:

  Where is this place..? Nice story yea…?

  Syed Ibrahim.A

 3. syed Ibrahim.A Dubai சொல்கிறார்:

  Dear Sir,

  Nice Article. I woule like to search for my school days friends, though i have collegiate friends.
  Why it is so nostalgic to search for school days friends than any other.

  It is truly a wonderful gift by God than anything like weddding, job etc..

  And you too look good and smart even in this age.

  Wasaalam,

  Syed Ibrahim.A
  Dubai.

 4. pandiammalsivamyam சொல்கிறார்:

  நடந்தவைகள் முள்பாதைகளா?என பின்நோக்கினால் –அதில் நந்தவனமும்.
  பூந்தோட்டங்களும்,பூஞ்சோலைகளும் இருந்திருக்கின்றன. அதில் இளைப்பாறித்தான் வந்திருக்கிறோம்-இளைப்பாறியது தெரியாமல். அப்போது அது
  தேவைப்படவில்லை. தேவைப்பட்ட நேரத்தில் நிழல் கிடைத்துவிடுகிறதா? சேர்ந்து
  பறந்து வந்த பறவைகளில் ஒன்று காணாமல் போனது கண்டு கலங்கும் மனம்.
  மகிழும்போதே துக்கமும் ஏக்கமும் இதுவும் கடந்துபோகும்.பயணம் மட்டும் அவனை
  நோக்கியே இருக்கட்டும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s