”அம்மா வந்தாள்” அலங்காரம் மறுமணம் செய்துகொண்டால் என்ன தப்பா?

Posted: ஓகஸ்ட் 25, 2010 in நாவல்
குறிச்சொற்கள்:, , , , ,

கடற்கரை இப்போது அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. தூரத்தில் ஒன்றிரண்டு கப்பல்கள் எங்கோ போய்க் கொண்டிருக்கின்றன. அலை அடித்து ஒதுங்கும் கடல்பாசிகள் அங்குமிங்கும் சிதறிக் கிடக்கின்றன. 30 வருடங்களுக்கு முன்னால் ஒப்பிலான் கிராமத்து மக்கள் சந்தோசப்படும்போது கடல் கூடவே ஆர்ப்பரித்தது, ஆத்திரம் வரும்போது கூடவே கரைந்தது, வருந்தும் மனம் சாந்தியடையும்போது தன் எழுச்சி மிக்க அலைகளால் ஆசிர்வாதம் செய்தது.

நான் சிறுவனாய் இருக்கும்போது ஊரே கூடி கரைவலை இழுத்த காட்சி நெய்மீன், வஞ்சிரம், பாறை, கட்டா, வெளமீன், கூறல், ஊழி பெருமீன்களைக் கழித்துவிட்டு சிறுவர்களை பண்ணா, கத்தாள, குதிப்பு, கணவா, நெத்திலி மீன்களை அள்ள அனுமதிப்பார்கள். அப்போதெல்லாம் கரையோரங்களில் மீன்கள் நிரம்பி வழிந்தன. இப்போது நடுக்கடலில் அல்லது அடுத்த நாட்டு எல்லைக்கு அப்பால் மீன்களைத் தேடி நம்மவர்கள் அலைகிறார்கள்.  என் கிராமத்து மக்கள் வளைகுடா நாடுகளுக்கும், சிங்கப்பூர், மலேசியாவிற்கும் புலம்பெயர்ந்து விட்டார்கள்.
 

 

என் ஞாபகப் படுக்கையைப் புரட்டிப்போட்டது சிங்கப்பூரில் 15.08.2010 – ல் நடைபெற்ற வாசகர்வட்டம்  வண்ணநிலவனின் கடல்புரத்தில்நாவலும் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்நாவலும் வாசிப்போம் நேசிப்போம் நிகழ்விற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தது. இரண்டு நாவல்களையுமே அனைவரும் படித்து வந்தது கலந்துரையாடலைக் கலகலப்பாக்கியது.

திரு.கே.ஜே.ரமேஷ் தன் உரையில் வண்ணநிலவனின் ரெய்னிஷ் ஐயர் தெருபடித்தவுடன் அந்தத் தெருவைப் போய் பார்க்க வேண்டும் என்ற உந்துதலில் சென்று ஐயர் தெருவைப் பார்த்தேன், அதுபோல மணப்பாடு ஊரையும் பார்க்கத் தோன்றுகிறது! அவ்வளவு எதார்த்தமாக அந்த ஊரை நம் கண்முன்னே நிறுத்திவிடுகிறார். உறவுகளிடையே கோபம், மனவருத்தம், பகைமை, பொறுமை, நம்பகமின்மை, இன்ன பிற உணர்ச்சிகள் இருந்தாலும் கதை முழுவதும் அடிநாதமாக அன்பு இழையோடிக் கொண்டிருப்பதை உணரமுடிகிறது என்று சொன்னார்.

முகவை ராம் மற்றும் திருச்செல்வன் உரைகளும் கடல்புரத்து நாவலைப் படிப்பவர்களின் மனதில் பலகாலத்துக்கு அழுத்தமாக நிற்கக் கூடிய நாவலாகச் சுட்டிக் காட்டினர். “நாளை பிறந்து இன்று வந்தவள் மாதங்கி கதாபாத்திரங்கள் தன்னுடைய சுயத்தை இழந்து வெவ்வேறு நிலைப்பாடுகள் எடுத்திருந்தால் நாவலின் போக்கே திசைமாறியிருக்கும் என்று முத்தாய்ப்பு வைத்தார்கள். சித்ரா ரமேஸ் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

 

தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவலை முழுமையாக மறுவாசிப்பு செய்து ஒரு நீண்ட கட்டுரையுடன் வந்தவர் ஜெயந்தி சங்கர். தன்னுடைய மூக்குக் கண்ணாடியை மறந்துவிட்டு வந்ததால் பாண்டித்துரை அந்தக் கட்டுரையை வாசிக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார். அவருடைய குரல் அந்தக் கட்டுரையின் உணர்வுகளை முனை மழுங்காமல் கூட்டத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தது.

 தி.ஜானகிராமனின் பெண்பாத்திரங்கள் எல்லோருக்குமே காதருகே கேசம் சற்றே அதிகமாக இறங்கியிருக்கும், சருமம் இழுத்துக் கட்டிய மாதிரியும் திகுதிகுவென்று இருக்கும் முக்கிய பெண்பாத்திரங்கள் யாருமே சராசரி தோற்றத்துடன் வருவதில்லை” என்றார். பிறகு ஒரு பாத்திரத்தை உயர்த்தி இன்னொன்றை இறக்குவதால் மாத்திரம் வேறுபாட்டை ஏற்படுத்தி அவர் நினைக்கும் பாத்திர வேறுபாட்டை ஏற்படுத்தி அவர் நினைக்கும் பாத்திர மேன்மையை மேலும் தூக்கிப் பிடிக்கும் உத்தியை செம்பருத்தி’யிலும், மோகமுள்’ளிலும் தி.ஜா. கடைபிடித்திருப்பதாக விளக்கினார்.

 ‘‘அவர் காலத்தில் புரட்சியாகவும் அதிர்ச்சியாகவும் இருந்திருக்கும் அலங்காரத்தம்மாள் பாத்திரம் இக்காலத்தில் அதேபோன்ற தாக்கத்தைக் கொணருமா என்றால் சந்தேகம்தான்” என்று சொல்லி, மிகமுக்கியமாக ஜெயந்தி சங்கர் இந்நாவலில் தற்காலத்துக்கு பொருந்தாத மதிப்பீடுகளாகத் தோன்றும் திருமணம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு, மறுமணம் போன்றவற்றைக் குறித்து இன்றைக்கு இருக்கும் கருத்தோட்டங்களைச் சுட்டிக்காட்டி அம்மா வந்தா’ளை புரட்டிப்போட்டார்.

இந்துவுக்கு அப்புவைப் பிடிக்கிறதா?

திருமணம் செய்துகொள்ளட்டுமே,  திருமணம் வேண்டும் என்றால் வேண்டும். சரி, வேண்டாம் எனில் வேண்டாம். அதற்கேன் பவானி அம்மாளுக்கு இத்தனை குழப்பங்கள், அதேபோல் அலங்காரம் பேசாமல் தண்டபாணியை விவாகரத்து செய்துவிடலாமே? எதற்கு அவளுக்கு இந்த இரட்டை வாழ்க்கை. இதென்ன பெரியவிசயமா எனக்கேட்டு நகர்ந்துவிடும் புதிய சமுதாயத்தில் நாம் இருக்கிறோம்” என்பதைச் சொல்லி அவையை சிறப்பான விவாதத்திற்கு இட்டுச்சென்றார்.

நிகழ்வை வழிநடத்திய சித்ரா ரமேஷ், வண்ணநிலவன், ‘கடல்புரத்தில் பிரியமானவர்களுக்கு எழுதப்பட்ட பிரிவுக்கதை என்றார்.

மனதில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். பாஷை தேவபாஷையாகத்தான் தோன்றும், கொலை செய்தார்கள். ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள், மனைவி புருசனுக்குத் துரோகம் நினைத்தாள். ஆனால் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருக்கிறது. கதைக்களம். கதை சொல்லப்பட்ட மொழி, கதையின் எளிமை, “மரபுகளை மீறிய கதையின் முடிவு இவற்றைச் சுட்டிக் காட்டினார்.

 பூங்குன்றன் பாண்டியன், சொக்கலிங்கம், மூத்த எழுத்தாளர் இராம.கண்ணபிரானும் கலந்துகொண்டார்கள்.  கடைசிவரை சித்ரா ரமேஷ் அம்மா வந்தாள் அலங்காரம் இப்படிச் செய்யலாமா என்று ஆண் வாசகர்களை நோக்கி எழுப்பிய கேள்விக்குப் பதில் இல்லாமலேயே கூட்டம் முடிந்தது.
ஆஹா! நான் சொன்னதை எழுதாமல் பத்தியை முடிக்க முடியுமா?

என் பால்ய நினைவுகளில் ஒன்றிப்போன கடற்கரையும் வண்ணநிலவனின் அந்த பாஷையையும் குறிப்பிட்டுப் பேசினேன். கரைவலையில் பாடுவைப்பது தண்டோரா போடுவதை சத்தம்போடுவதுஎன்று சொல்வது, பறவர் வழக்கில் இஸ்லாமியர்கள் தண்டல்காரரை சம்மாட்டிகள்என்றழைப்பது எல்லோருக்கும் பொதுவான பண்டியல்கள்.

  கடல்புரத்தில் வண்ணநிலவன் முத்தாய்ப்பாக, ‘வாழ்க்கை எவ்வளவு கொடூரமானதாக் இருந்தாலும் கூட யாருக்கும் சாகப்பிடிக்கவில்லை. காரணம் ஸநேகங்களும் பிரியங்களும்தான் என்பார். வாசகர் வட்டம் இதுபோல் ஸ்நேகங்களால் வலுப்பெறவேண்டும்.
நன்றி:
உயிரோசை.com
வாசகர் வட்டம் (சிங்கப்பூர்)

 

 

 

பின்னூட்டங்கள்
 1. haniff சொல்கிறார்:

  very nice pls kindly infm sound of the panai maram and panamblam,and every house have net stiching factory also velladu

 2. haniff சொல்கிறார்:

  very nice pls kindly infm sound of the panai maram and panambalam,and every house have net stiching factory also velladu

 3. sermuga pandian சொல்கிறார்:

  Dear Kadar
  I am in Bangalore ,the silicon City of india.But my office lags behind in all respects. while in Vadipatti /Madurai , I used to maintain Sivaganga NFPE union’s blog and read several tamil blogs besides reading your blog and sending my views over it. But here I could do it becuase of the prevailing circumstances.I will try to be incurrent.
  Your writing has made me recollect the novels that I read in my young age in the library in Perunali.Of all the novelists muu.vaa has impressed me well at that time.Thi.jaa,Akilan,jeyakanthan were my favourites.
  Now i read only short stories . I am now re-reading jeyakanthan and Anton Chekov .I enjoy reading your writing on your people whose life is totally linked with the sea.It played inseparable part in each and every inch of the life of those who live with it
  yours lovingly
  P.Sermuga pandian

 4. pandiammalsivamyam சொல்கிறார்:

  அம்மா வந்தாள்,கடல்புரத்தில் படிக்கவில்லை.ஆனால்,புலம் பெயர்ந்துபோன
  அந்த உறவுக்காக தங்களின் மனஆழத்தில்இருந்த கண்ணீர் வெளிவந்து கடலில்
  கடலோடு கரைந்துபோனதை கண்டவர்கள் எத்தனை பேர்!-தெரியாது.ஞாபக படுக்கை-களை தூசிதட்டுபவர்கள் மிகக்குறைவு.”மரபு” என்பது நமக்காக நாம் ஏற்படுத்திக்கொண்ட வட்டம்-கண்ணில் தெரியாத கால்சங்கிலி-பாதுகாப்புக்காக. அதனை உடைத்தெரியும்போது அவன்படும் கோபம்ஆக்ரோசம். தன்முனைப்புகள் அவனுக்குத்தரும் ஊக்கமருந்துகள். விளைவுகள் எதுவாக இருந்தாலும் விமர்சிக்கப்படும் ஆனால்,சமுதாயத்திற்காகஅவன் விட்ட கண்ணீரை மட்டும் யாரும் பார்ப்பதேயில்லை.அன்பு உள்ளங்கள் உள்ளுக்குள் அழும் .கைகொடுப்பது மட்டும் மிக அரிதினும் அரிது. சரித்திரம் முடிந்துவிடும். ஆனால், பின்புலமாக பேசப்படும்
  வரலாறாக!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s