நோன்பு பெருநாள் oli96.8 வானொலிக் கவிதை

Posted: செப்ரெம்பர் 9, 2010 in கவிதை
குறிச்சொற்கள்:,

முரட்டுமனக் குதிரையை எளிதில் கொன்றுவிடலாம்
ஆனால் அதைக் கட்டுக்குள் கொண்டுவந்து
காரியம் நிகழ்த்துவதற்கு
இந்த விழித்திருப்பவரின் இரவுதான்
பயிற்சி கொடுக்கிறது…
நடு நிலையை அசைத்துப் பார்க்கும்
மயக்கும் தேவைகள்
மண்டியிட வைக்கும் இச்சைகள்
உள்ளத்தை குலைக்கும் உணர்வுகள்
இவைகள் பசியால் பாடம் படித்து
பச்சிளம் குழந்தையாய் பண்பாடு காக்கின்றன
பலவீனமான சுயத்திற்கு
இங்குதான் பரிட்சை வைக்கப்படுகின்றது
அதி ருசிகளை பழகிய நாவு அடக்கி ஆளப்படுகின்றது
தாகத்தின் சுவையும் பசியின் புரிதலும்
நாவுகளுக்கு இங்குதான் அறிமுகமாகின்றன
பசியின் ஆழ்கடல்  அரன்சூடி நிற்கிறது
பட்டினி ஆயுதத்தால் பாவங்கள் அழிக்கப்படுகின்றன
இந்த உணவு மேஜையில் அச்சம் கோபம் பொறாமை என்று
வெந்து முடிந்த பதார்த்தங்களும்
கருகிப்போன ஆசைகளுக்கும்
நீராவியாகவிட்ட நம்பிக்கைகளுக்கும்
இடமில்லாமல் போகிறது
அறிவுக்கும் ஆன்மாவுக்கும்
வேகைவைத்த கூட்டு வறுத்த
சகிப்புத் தன்மைகள் சரிபாதியாய் பரிமாறப்படுகின்றன
நன்மைகள் அதிநன்மைகள் அடைகின்றன
தீமைகள் சம்மமட்டி அடி அடிக்கப்பட்டு
தட்டி நிமிர்த்த்து நன்மை பக்கமாய் நகர்த்தி வைக்கப்படுகின்றது
ஓங்கிக் சாத்தப்பட்ட நகரத்தின் கதவுகள்
ஆள் அரவமற்று அநாதையாய் நிற்கின்றன
உடைந்த பானையிலிருந்து ஒழுகிக் கொண்டிருக்கும்
இந்த ஆயுளை அர்த்தமாக்கிக்கொள்ள
இந்த பூக்காத மலர் சுரக்கும் தேனுக்காக
நெரிசலில் காத்திருக்கும் மனிதக்கூட்டம்
இன்னும் நீண்டு கொண்டேயிருக்கிறது

ஈத் முபாரக்….

நன்றி: ஒலி 96.8

பின்னூட்டங்கள்
 1. sermuga pandian சொல்கிறார்:

  Dear kadar
  It is superb.Keep it up.
  P>sermuga pandian

 2. pandiammalsivamyam சொல்கிறார்:

  கவிதையை வரும் எல்லா நோன்பு-பெருநாளுக்கும் வாசிக்கலாம்.நோன்பு மனிதனை
  சமைக்கிறது என்பதை சமையல்வழி-சமையல்மொழியில் சொல்லியிருப்பதற்கு-
  ஒரு சபாஷ் !
  வேக வைத்த கூட்டு வறுத்த
  சகிப்புத்தன்மைகள் சரிபாதியாய் பரிமாறப்படுகின்றன
  நன்மைகள் அதிநன்மை அடைகின்றன
  தீமைகள் சம்மட்டிஅடி அடிக்கப்பட்டு
  தட்டி நிமிர்த்தி நன்மை பக்கமாய் நகர்த்தி வைக்கப்படுகிறது
  *********************************************************
  இந்த ஆயுளை அர்த்த மாக்கிக்கொள்ள
  இந்த பூக்காத மலர் சுரக்கும் தேனுக்காக
  நெரிசலில் காத்திருக்கும் மனிதக்கூட்டம்
  இன்னும் நீண்டுகொண்டே இருக்கிறது
  ஆறு கடலை அடைந்து தன்னை தூய்மைப்படுத்திக்கொள்கிறது. நான் த்ங்களது எழுத்துக்களைப் படித்து ,மூழ்கி,திளைத்து மகிழ்ந்து தூய்மைப்பட்டுக்கொள்கிறேன்.
  கடைசி வரியில் புள்ளி வைக்கவிலை தொடர்ச்சியினைக்காட்ட மீண்டும் ஒருசபாஷ்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s