தென்னிந்தியாவின் அலிகார்

Posted: ஜனவரி 6, 2011 in அழைப்பிதழ், கடிதம்
குறிச்சொற்கள்:

 1965-70 களில் “சிங்கப்பூர் பெக்ஷியா” பள்ளியில் ஒரே வகுப்பில் சுமார் 50 தமிழ் மாணவர்கள் படித்திருக்கிறார்கள். திருமதி குணவதி நல்லதம்பி (பள்ளி ஆசிரியை) எண்ணத்தில் இந்த 50 பேரையும் ஒரு சேரப் பார்த்துவிட வேண்டும் என்ற  எண்ணம் மேலிட ஒவ்வொரு பூவாக கோர்க்க ஆரம்பித்தார். அத்தனை பேர் விபரங்களையும் திரட்டி பெரிய மாலையாக்கிவிட்டார். அந்த பெக்கிஷியா தோட்டத்தின் பூக்களில் ஒருவர் என் நண்பர் ஹாஜாமைதீன் (தொழிலதிபர்), அவருக்கு என்ன பிரச்சினை என்றால் என்னை விட்டு விட்டு எந்த நிகழ்வுக்கும் போவது அவ்வளவாக பிடிக்காது. உப்புக்கு சப்பானியாக என்னையும் அவர்களுடைய கூட்டத்திற்கு கூட்டிச் சென்றார். அடடா! என்ன ஒரு நெகிழ்ச்சி Mr.குலாம் டிவி புகழ் Mr.லிங்கம் ஒருவருக்கொருவர் கட்டி பிடித்து, சிறுவயது முகங்களைத் தேடி தேடி முகங்களை வருடி புளங்காகிதம் அடைந்தார்கள். ஓரத்தில் தனியாக விடப்பட்ட நான் என் பள்ளி கல்லூரித் தோழர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கற்பனையில் தவித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கற்பனையை நனவாக்க Mr.காதர் அவர்களிடமிருந்து பளிச்சென ஒரு மின்ன(ஞ்ச)ல் வந்தது. ஜமால் முஹம்மது கல்லூரியின் பழைய மாணவர் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருக்கிறது என்ற செய்தியுடன்…

நண்பர் ஜலாலுடன் நிகழ்சிக்கு விரைந்தேன், எத்தனைபேர் என் செட்டில் வந்திருக்கிறார்கள் என்ற ஆவல் மேலோங்கி அங்குமிங்கும் கண்களை படரவிட்டுக் கொண்டிருந்தேன்.

 1970 71 என்று ஆரம்பித்து எனக்கு 10 வருட முந்தைய செட்டில் பழைய மாணவர்கள் வந்திருந்தார்கள். 80த் தொட்டவுடன் என் பேட்ச் தோழர்கள் இருவர் எழுந்தனர், இளமை முடிந்துவிட்டது ஆனால் இன்னும் மாறா புன்னகை முகத்துடன் எழுந்து நின்றார்கள். எத்தனை எத்தனை அதிகரிகள், வங்கி ஊழியர்கள், மருத்துவர்கள், வியாபாரிகள்  சிங்கப்பூரில் இத்தனை நாட்களும் தவறவிட்டோமே என்ற ஆதங்கம் என்னுள் எழுந்தது. தென்னிந்தியாவின் அலிகார் என்று புகழப்படும் ஜமால் முகம்மது கல்லூரிக்கு இந்தவருடம் “வைரவிழா” அதில் தரமான கல்வியை பெற்றவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்களாக மற்றவர்களுக்கு வழிகாட்டுகிற சிறப்பு பெற்றவர்களாக வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள் என்று அந்த கூட்டமே வெளிப்படுத்தியது.

இந்த பழைய மாணவர்கள் நாம் நடந்த டோல்கேட்டில் நடந்தவர்கள், முதன்மை அரண் கதவை (மெயின்கார்டு கேட்) சுற்றியவர்கள், உச்சிப்பிள்ளையார் கோவிலின் 437 படிக்கட்டுகளில் ஏறி இறங்கியவர்கள், சங்கிலியாண்டபுரம் டூரிங் தியேட்டரில் எம்ஜியார் சிவாஜி படம் பார்த்தவர்கள், திவான் ஸ்டூடியோவில் கோட் போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டவர்கள், ஹாஸ்டலில் குஸ்கா சாப்பிட்டு தூங்கி வகுப்புக்கு கட் அடித்தவர்கள், அத்துடன் திருச்சியின் நல உதவித் திட்டங்களில் என்றும் பங்கெடுத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோருடைய அனுபவமும் ஒரே புள்ளியில் சந்தித்து மீண்டன.

திருச்சியில் மொத்தம் 30 கல்லூரிகள் இருக்கின்றன. அதில் நம் கல்லூரியின் சிறப்பையும் பழைய மாணவர்களின் ஈடுபாட்டையும் முன்னெடுத்துச் செல்ல ஜமால் முஹம்மது அலுமினி (சிங்கப்பூர்) முறையாக தொடங்கப்பட்டு அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது.

(Vist @ http://www.jmcalumni.org.sg/  ) 

வருகிற 30.01.2011 அன்று நாம் அனைவரும் ஒன்று கூடி பயணப்படவேண்டிய இலக்கை முடிவு செய்யவிருக்கிறோம்.

இன்னும் நம் சிங்கப்பூர் நண்பர்கள் பலருக்கு தகவல் சென்று சேரவேண்டியிருக்கிறது.

வாருஙங்கள் கைகோர்ப்போம்

சிங்கப்பூர் ஜமாலியன்களை அடையாளம் கண்டு கூட்டிவாருங்கள்

தொடர்புக்கு :

என்னுடைய அலை பேசி எண்: 82858065

MR.Kader  – 96933786  or 63981020

பின்னூட்டங்கள்
  1. MOHIADEEN ABDUL KADER சொல்கிறார்:

    Dear Brother Shaanavas,

    Thank you for disseminating the information about our JAMAL MOHAMED COLLEGE ALUMNI ASSOCIATION (SINGAPORE CHAPTER). We look forward to work together as ‘One United Family of Jamalians’. Best Wishes & Happy New Year to all JAMALIANS.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s