சிக்கு மங்கு சோகம்

Posted: ஏப்ரல் 24, 2011 in பத்தி

திரு துரைசிங்கம் ஷி.சாமுவேல் முன்னாள் உயர்நிலை பள்ளிக் கல்விக் கழக இயக்குநர், பல ஆண்டுகளாக சிங்கப்பூர் வரலாற்று சங்கத்தின் தலைவராக இருந்தவர். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு 1991ல் எழுதி வெளியிட்ட சிங்கப்பூர் ஹெரிடேஜ்என்ற சிங்கப்பூர் வரலாற்றுப் புத்தகம் சென்ற மாதம் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டது. சிங்கப்பூரின் வரலாற்றுப் புகழ் மிக்க 160 இடங்களை 1800களிலிருந்து ஆரம்பித்து விவரித்துள்ளார்.

சென்ற மாதம் வெளியீட்டு நிகழ்வின்போது நான் சென்னையிலிருந்தேன். பல மாதங்களாக என்னிடம் நினைவுபடுத்திக் கொண்டிருந்த நிகழ்வுக்கு நான் செல்லவில்லை என்பதில் அவருக்கு என் மேல் பிரியமான வருத்தம். இரண்டாம் பதிப்பு புதிய புத்தகத்தைக் கொண்டு வந்துவிட்டு செல்லமாகக் கடிந்து கொண்டார். அவருடைய மாணவர்கள் அரசில் உயர் அதிகாரிகளாகவும், அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். அவருடைய மாணவர் திரு ஆலன்டான் பழைய பதிப்பில் இருந்த கறுப்பு & வெள்ளைப் படங்களை மீண்டும் கலர் படங்களாக எடுத்துக் கொடுத்து புத்தகத்திற்குப் புதுப்பொலிவு சேர்த்திருக்கிறார்.

இரண்டாம் பதிப்பில்Euro Asian Association Community hall, சிங்களர்களின் சிரி லங்கராமயா புத்தர் கோவில், பிரணக்கான் சீனர்கள் மங்கள புத்தர் கோவில் மற்றும் செங் தெக்வே சீனக் கோவில் சிங்கப்பூர் இந்தியர் சங்கம் இவற்றைப் புதிதாக இணைத்துள்ளார். திரு wong kan seng துணைப்பிரதமர் அவருடைய மாணவர். புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கியுள்ளார்.

புக்கிட லாரங்கான்என்றழைக்கப்பட்ட தற்போதுள்ள போர்ட் கேனிங் பார்க்கில் ஆரம்பித்து பிலிப்ஸ் ரோட்டிலுள்ள Yue Ha Qing Mian கோவில் காவல் காக்கும் கடல் தெய்வக் கோவிலுடன் முடித்துள்ளார்.

முக்கியமான வரலாற்று இடமான ஹாவ்பார்வில்லாடைகர் பாம் கார்டன் அவருடைய இரண்டு தொகுப்புகளிலும் இடம்பெறவில்லை. அதைப்பற்றிக் கேட்டேன். இன்னும் சில இடங்களைச் சொல்லி அதைப்பற்றி விரிவாகச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார். 1970 களில் சிங்கப்பூர் வந்து திரும்பியவர்கள் தவறாமல் பார்க்கும் இடம் டைகர் பாம் கார்டன் உலகம் சுற்றும் வாலிபனில் சிரித்து வாழ வேண்டும்…. சிக்கு மங்கு செச்சப்பாப்பாஎன்ற பாடல் வந்த புதிதில் திரும்பத் திரும்ப டைகர் பாம் கார்டன் சென்று பார்த்தவர்கள் ஏராளம்.

பாஸிர் பான்ஞ்சாங் ரோட்டிலுள்ள Haw par villa வை நிர்மாணித்தவர்கள் ஆபூன் ஹாவ் மற்றும் அவருடைய சகோதரர் ஆ பூன் பார். 1900களில் ரங்கூனில் (மியான்மர்) பிறந்தவர்கள். அவர்களுடைய தந்தை ஒரு மூலிகை மருந்து வியாபாரி ஆ சூன் கின் என்று அவர் விற்ற பாம்புத் தைலம் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம், அவருடைய மகன்கள் இருவரும் தென்கிழக்காசியாவில் அந்தத் தைலத்தை மறு உருவாக்கம் செய்து தலைவலியைப் போக்கும் நிவாரணியாக விற்றுப் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள்.

1920களில் சிங்கப்பூரில் குடியேறியவர்கள் கடற்கரை ஓரம் அமைந்துள்ள இடத்தை விலைக்கு வாங்கி 1930களில் டைகர் பாம் கார்டனை உருவாக்க முனைந்தார்கள். ஐரோப்பாவிலிருந்து மரச் சாமான்கள் வரவழைக்கப்பட்டன. அதில் நிறுவப்பட்ட பல கோபுரங்களில் ஆரம்பத்தில் தங்கக் கோடுகளால் அலங்கரிக்கப்பட்டதாகக் கூறுவார்கள்.

கன்பூசியஸ் தத்துவக் கோட்பாட்டில் அமைந்து உருவச் சிலைகள் சுமார் 1000 நிறுவப்பட்டன. சிங்கப்பூரில் பழம் பெருமை மிக்க பூங்கா 1937களில் தென்கிழக்காசியாவில் போர் மேகம் சூழ ஆரம்பித்த சமயத்தில் வேலைகள் தலைப்பட்டு நின்றது.

ஆபூன் ஹாங் ஹாங்காக்கிற்கும், ஆபூன் பார் ரங்கூனுக்கும் தப்பி ஓடினார்கள். அதன் பிறகு திரும்பி வந்த ஆபூன் ஹாவ் அளன் விரும்பியபடி பூங்காவை அழகூட்டினார்கள். 1970 களில் மக்கள் திலகம் எம்.ஜிஆர். சிரித்து வாழ வேண்டும் என்ற பாடலை இங்குள்ள சிரிக்கும் புத்தர் சிலையைமையமாக வைத்து எடுத்தார். ஆனால் அப்போது அவர் உலகம் சுற்றும் வாலிபனில் செல்வி ஜெயலலிதா நடிக்க வேண்டும் என்ற நெருக்கத்தால் கொடுத்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உரசலும் அவரைச் சிரிக்க முடியாமல் நோகடித்தன என்று சொல்வார்கள்.

அத்துடன் டைகர் பாம் கார்டனில் சிரிக்கும் புத்தர் அவ்வளவு பிரசித்தம் அல்ல. அங்குள்ள 60 மீட்டர் நீளமுள்ள டிராகனும், Ten Courts of hall என்ற பகுதியும் அங்கு முக்கியமானவை.

நம்ம ஊர் எமனைப் போல்”Yama” என்ற கடவுள் Tew courts of hell ல் தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்கும் மாதிரி சிற்பங்கள் பார்க்க மிகவும் பயங்கரமாக இருக்கும்.

வருடத்திற்கு ஒரு மில்லியனாக இருந்த சுற்றுலா பயணிகள் வருகை குறைய ஆரம்பித்தவுடன் 1985ல் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் 80 மில்லியன் செலவில் இதைப் புதுப்பித்து நுழைவுக் கட்டணம் வசூலித்தது. ஆனால் அதில் சதவீதமாக வருகையாளர்கள் குறைந்ததால் இலவசமாக காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை தற்போது பழைய டைகர் பாம் கார்டன் என்ற பெயரிலேயே செயல்படுகிறது.

Mr Teo Veoh Seng (வயது 76) 1948ல் தனது 13 வது வயதில் இங்கு ஆரம்பித்த சிலைகளைப் பராமரிக்கும் வேலையை விடாமல் வார நாட்களில் தினமும் இன்னும் தொடர்ந்து பார்த்து வருகிறார். பூங்கா கட்ட ஆரம்பிக்கும்போது சிலைகளுக்கு அஸ்திவாரம் போட்ட விஷயங்களை இன்னும் நினைவு கூர்கிறார். இங்குள்ள 2 மீட்டர் உயரமுள்ள சில சிலைகளை 5 பேர் சேர்ந்து மாதக் கணக்கில் செய்து இடிப்பார்களாம். தன்னுடைய குடும்பத்திற்கு வேலையும் புகலிடமும் கொடுத்த ஆபூன் ஹாங் இறக்கும் வரை வருடந்தோறும் இங்கு வந்து இங்குள்ள குடும்பங்களுக்கு அங்பாங் கொடுத்துவிட்டுச் செல்வாராம்.

 

இன்றைய நவீன உலகம் வரலாற்றை அறிவதில் அவ்வளவு ஆர்வமாக இல்லை என்று தன்னைப் பேட்டி கண்ட டிவி நிருபரிடம் முறைபட்டுக் கொண்டார். டைகர் பாம் கார்டனைமூடிவிட்டால், அத்துடன் தன் வேலைக்கும் முடிவு வந்துவிடும் என்கிறார்.

 

 

 

Advertisements
பின்னூட்டங்கள்
 1. pandiammalsivamyam சொல்கிறார்:

  டைகர் பாம்கார்டனை இரண்டுமுறை பகலிலும்,லைட்மூன்டே அன்று இரவிலும்
  கண்டு இன்புற்றுள்ளேன்.சிங்கப்பூருக்கு பரிசாக தமது நன்றிகடனாக இரு தனி
  மனிதஉள்ளங்கள் ஆபூன் ஹாவ் மற்றும் அவர் சகோதர் ஆபூன்பார் பற்றி நினைவு
  கூர்ந்தது நெஞ்சை நெகிழ வைத்தது.ஒரு இடத்தின் கதை தெரியாமல் பார்த்ததைவிட
  அதன் கதை தெரிந்ததும் இன்னும்நன்றாக அதை ஆழ்ந்து கூர்ந்து பார்த்திருக்கலாமே
  எனத் தோன்ற வைத்துவிட்டீர்கள். நன்றி கூறும் உள்ளம் தொடரும் உங்களின் இந்த
  பத்தி உலகில் இருக்கும்வரை. நான் சிறுவனாக இருந்தபோது எனது உறவினர் எனக்கு இந்த பாம்பு போட்ட தைலபாட்டிலிருந்து விரலில் தொட்டு என்முன்தலையில் தடவி கடுமையான தலைவலியைப் போக்கினார்.நான் பாம்பின் விஷமாக இருக்குமோ என பயந்தபடி கேட்டது நினைவுக்கு வருகிறது. அதன்பின்-
  இன்றுவரை தலைவலி என்று நான் சொன்னதில்லை. கேள்வி பிறந்தது எனது
  எட்டுவயதில்பதில் கிடைத்தது எனது 64வது வயதில் .சித்துவிளையாட்டு என்பது
  இதுதானோ!
  இந்த கதைவிபரம் அங்கு படித்ததாக நினைவில்லை.மீண்டும் சென்று
  படிப்பேன்.ஒன்றுமட்டும் தெரியவந்தது.டைகர் பாமில் நுழைந்ததும் வலது பக்கம்
  உள்ள சிலை “தாமோ” என்ற போதித்ர்மர் என்றார்கள். இவர் தமிழ்நாட்டைச்சேர்ந்த-
  பல்லவ இளவரசர்.7-ஆம் அறிவு திரைப்படத்தில் இவரின் கதை வரும். தே வோ செங்
  பராமரிப்பு பாதுகாவலர்(வயது76)-க்கு கிடைப்பதுஎன்ன?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s