கீழ்படியும் மனைவிகள் சங்கம்

Posted: ஜூலை 5, 2011 in உயிர்மை, பத்தி

மலேசியாவில் ‘‘Obedient wives club” தொடங்கப்பட்டிருக்கும் செய்தி பலரைப் போலவே எனக்கும் வியப்பளித்தது. சென்றவாரம் சிங்கப்பூரிலும் அதன் கிளை தொடங்கப்படும் என்று டாக்டர் Dalan zaini  என்பவர் ஹமிதா, அஜிமின் இருவருடன் பேட்டி அளித்திருந்தார். கீழ்படியும் மனைவிகள் சங்கத்தின் முக்கிய கொள்கைப் பிரகடனம், சமுதாயத்தின் ஒட்டுமொத்த சீரழிவுக்கு முழுமுதற்காரணம். பெண்கள் தங்களது கணவன்மார்களிடம் பணிவாக நடந்து கொள்ளாதது, குடும்பத்தில் கணவனிடம் முதல் தர விபச்சாரியாக மனைவிகள் நடந்துகொண்டால் சமூகத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரலாம் என்பதைப் பேட்டி காணும் அனைத்துப் பத்திரிகைகளிலும், ரேடியோ, தொலைக்காட்சி நேர்காணல்களிலும் தொடர்ந்து சொன்னார்கள்.

1968ல் அஸாரி முஹம்மது என்பவர் தினமும் தான் இறைத்தூதர் நபிகளைச் சந்திப்பதாகவும் இமாம் மஹதி விரைவில் தன் மறைவிடத்திலிருந்து தோன்றி உலகில் மறுமலர்ச்சியைக் கொண்டு வரப்போவதாகவும் பெண்கள் தங்களுடைய பணிவிடையை மேன்மைப்படுத்தி இஸ்லாமிய சமுதாயத்தை உயர்த்தவேண்டும் என்றும் ஆண்களிடம் மஹர் பெறுவதின் மூலம் பெண்களின் உரிமை முழுவதும் ஆண்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். அதை மீறினால் mushuz (Rebellion)  மலக்குகளின் கோபப்பார்வை குடும்பத்தைத் தாக்கும் என்றும் பிரகடனப்படுத்தி 1980&90களில் மலேசியாவில் சுமார் 10 ஆயிரம் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். 2009ல் இவரது மனைவிகளில் ஒருவர் பலதாரம் புரிவோர் (Poly gamy club)சங்கத்தை ஏற்படுத்தினார். சென்றவருடம் தனது 73வது வயதில் இவர் இறக்கும்போது பல மனைவிகள், 40 குழந்தைகள் 200 பேரக் குழந்தைகள் இருந்தனர், அத்தோடு அவருக்கு 300 மில்லியன் சொத்தும் இருந்ததாம். இவர் சிங்கப்பூருக்குள் நுழைய தடை இருந்தது. 28 மில்லியன் மலாய் மக்களின் இந்த Gobel Ikhwan அமைப்பின் உதவி தலைவி ரொஹையா கீழ்படியும் மனைவிகள் உலக நன்மையைக் கையிலெடுக்கிறார்கள். விவாகரத்து, குடும்ப வன்முறை, விபச்சாரம் என்ற பேச்சுக்கே இனிமேல் இடமிருக்காது என்றும் கணவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற வகுப்புக்களை மலேசியாவெங்கும் ஆரம்பிக்கவிருப்பதாகவும் சொல்கிறார். சிங்கப்பூரில் கிளை ஆரம்பிக்கவிருக்கும் டாக்டர் Darlan கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடப்பது இலதா Ibadah (Blessed derd in Islam) என்கிறார். கணவன் விரும்பினால் மனைவி உடலுறவை மறுக்கக்கூடாது. அது அவர்களுடைய உரிமை அல்ல என்றும் கூறுகிறார். கோலாலம்பூரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த சங்கம் ஜோர்டான், இந்தோனேஷியாவிலும் கிளை பரப்பியுள்ளது.

சிங்கப்பூரில் அதிகாரபூர்வமான முயிஸ் அமைப்பு ஒட்டுமொத்தமாக இவர்களின் வியாக்கியானங்களை மறுத்து இது இஸ்லாத்திற்கு எதிரான செயல் என்று அறிவித்துள்ளது

உடனே Dr. Darlan  “நாங்கள் வேண்டுமானால் கீழ்படியும் மனைவிகள் என்றிருப்பதை ‘‘மகிழ்ச்சியான குடும்பத்திற்கான வழி’’ என்று பெயர் மாற்றிக் கொள்கிறோம்” என்கிறார்.

நல்ல சமையல்காரி, நல்ல தாய், கீழ்படியும் மனைவி என்று கோஷத்தை முன் வைக்கும் இவர்களது பழமைவாதம் குறித்த விஷயங்களை அல்லாமா இக்பால் பல கவிதைகளில் விளக்கமாகவும் அழுத்தமாகவும் வடித்துள்ளார். சமூக நடவடிக்கையில் இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம வாய்ப்புக்களை வழங்குகிறது. பெண்மைக்கு அளிக்கும் பெருமையே சமுதாய வளர்ச்சிக்குத் தூண்டுதல் என்றார்.

‘அஸ்ரால் ஒராமுல்’ கவிதைப் படைப்பில்

ஆணின் நிர்வாணத்தை

ஆடையாய் மறைப்பவள் பெண்

அழகிய இதயத்துக்கான ஆடையை

அன்பினால் தருபவன் ஆண் என்கிறார்.

அவர் சமயம் சாராத கோட்பாடுகளை இஸ்லாமியத்துடன் ஒப்பீடு செய்வதிலும், இஸ்லாத்திற்கு இசைவாக அவற்றை எடுத்துச் செல்வதிலும், இஸ்லாத்திற்கு இசைவாக அவற்றை எடுத்து செல்வதிலும் முன்னேற்றமான எண்ணங்களின் வளர்ச்சிக்குத் தூண்டுதலாக இருந்தவர்.

OWC அமைப்பு தெரிவித்திருக்கும், தவ்ஹீத் மஹர், முஸ்குஸ் போன்ற சொற்களுக்குச் சரியான விளக்கம் பெற எண்ணி இமாம் ரஹ்மான் என்ற ஓய்வுபெற்ற பேராசிரியர் தற்போது பகுதி நேரமாக மதரஸாக்களில் சமயப் பாடங்கள் நடத்தி வருகிறார். சனி, ஞாயிறு தவிர அவரைச் சந்திக்கமுடியாது. இந்த நாட்களில் எங்கும் கடையை விட்டு நகரமுடியாது.

சென்றவாரம் அவரிடம் இந்த அமைப்பு பற்றி விளக்கம் கேட்டு தொடர்ந்து தொலைபேசி தொடர்பு கொண்டேன். அவர் இஸ்லாமியப் பெண் எழுத்தாளர் Kecia Aliயின் ‘‘Marriage and Slavery in early Islam” அல்லது தாலித் அபு எழுதிய God’s name, Islamic law Authority and woman என்று இரண்டு புத்தகங்களைப் பரிந்துரைத்து படித்துப் பார்க்கச் சொன்னார்.

நான் இந்த வாரம் உயிரோசையில் இந்த சூடான விஷயத்தை வலையேற்றிவிட வேண்டும் என்ற ஆவலில் கேள்விகளைத் தயார் பண்ணிக்கொண்டு போனிலேயே உரையாட நேரம் கேட்டு ஆளைப் பிடித்துவிட்டேன்.

மலாயில் Taat என்றால் கீழ்படிதல் என்று பொருள்taat isteri kepoda swami (a wife’s obedience to her husbend) என்பதைப் பெயராக வைத்து இந்த வார்த்தை மனைவிகள் கீழ்ப்படிவதற்கானது என்று விளக்கம் சொல்வதை அவர் மறுத்தார். இஸ்லாத்தில் கீழ்படிதல் என்பது இறைவனுக்கு மட்டுந்தான்.

பெண்களின் பணிவு கணவன் மூலம் இறைவனுக்குச் சேர்வதாக தவ்ஹீத் (tawherd) என்பதே தவறு என்றார் அமைப்புக்கள் வெவ்வேறு நோக்கங்களைப் பிரதிபலிக்கின்றன. சமயத்தின் பழமையையும் பொற்கால உணர்வுகளயும் மீட்சிக்குள்ளாக்கும் நோக்கில் இயக்க நடவடிக்கைகளை சமயத்தின் சில விதிமுறைகளை முதன்மை நிலைக்குக் கொண்டுவந்து உண்மையான பிரதிகளைப் புறந்தள்ளிவிட்டு அந்த இயக்கங்களின் இலட்சியங்களுக்கு ஏற்றதாக வடிவமைத்துக் கொள்கிறார்கள்.

இது வரலாறு முழுக்க நிகழ்ந்து வருகிறது. அவர்களின் இலட்சியங்கள் சாத்தியமாகாதபோது சமய உட்பிரிவுகளோ அல்லது புதிய சமயமோ உருவாகலாம். இப்படிப்பட்ட கருத்துருவாக்கங்களை எல்லா சமயங்களுமே சந்திக்கின்றன என்றார்.

ஆணும் பெண்ணும் சமத்துவ அந்தஸ்து பெற்றிருப்பது பற்றிய கருத்துக்கள், இருவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு கூடி வேலை செய்தல், தமது தேவைகள் பற்றிய பரஸ்பர பரிந்துணர்வு குர் ஆரில் பல இடங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வரலாற்றிலிருந்து சில இடங்களில் ஆண்களை விட மேலான நிலைக்கு உயர்ந்த கதைகள் நிறைய உள்ளன. சலீமாக்களின் காலத்தின்போதே கலிபா அல் முக்ததிர் அவரது தாயை உயர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தலைவியாக நியமித்தது படித்திருக்கிறீர்களா என்று கேட்டு விட்டு,

நபிகளின் வாழ்வு கூறும் உண்மை ஆன்மீகமா, உலகியலா என்பதைவிட அவர்கள் மனிதனாய் வாழ்ந்து உலகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கக்கூடிய ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் வழியைக் காட்டினார்கள். பெண்களின் சமத்துவத்துக்கு அவர்கள் வாழ்வே சாட்சி என்றவர்.

OWC அமைப்பிற்குப் பல மில்லியன் சொத்துக்களும், மெக்காவில் 20 அறைகள் கொண்ட வில்லாவும் இருக்கின்றன. அவைகளை வளர்த்தெடுக்க வேண்டாமா? என்று சொல்லி முடித்தார்

 thanks: http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=4497

Advertisements
பின்னூட்டங்கள்
  1. pandiammalsivamyam சொல்கிறார்:

    வருத்தப்படாத வாலிபர் சஙகம் பழநி யில் ஆரம்பிக்கப்பட்டதை அறிந்தவுடன் என்-
    பங்குக்கு கீழ்படியும் கணவன்மார்கள் சங்கம் ஒன்றை ஆரம்பித்தேன்திண்டுக்கல்லில். அதற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் போட்டேன். உங்கள் மனைவியின் அனுமதிக் கடிதத்துடன் வி ண்ணப்பம் செய்யவேண்டும் அவ்வளவுதான். இன்றுவரை என்னைத்தவிர வேறுயாரும் உறுப்பினாராகவில்லை. என க்கு ஒரே கவலை.எனக்குத்தெரிந்தமனைவிக்குபயந்த(பணிந்து) நடக்கும் நண்பர்களிடம் சங்கத்தில் ஏன் சேரவில்லைஎனக்கேட்டேன் “நீங்கள் அச்சங்கத்தில்மெம்பராகி விட்டால் நாங்கள் (மனைவிகள்)யாரென்று அனைவருக்கும் தெரிந்துவிடும்அதனால்,கண்டிப்பாகசேரக்கூடாது என்று சொல்லிவிட்டதாக” அவர்கள் சொன்னார்கள். என் பட்டிக்காட்டு மனைவி இதைத்தான் நான் சங்கம் ஆரம்பிக்கும்முன்னரே சொன்னார். எனக்கு மனதுக்குள்
    ஒரு சந்தோஷம்–ஆண்களை பெண்கள் காட்டிக்கொடுப்பதில்லை
    சரிதானே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s