ஓகஸ்ட், 2012 க்கான தொகுப்பு

Mr.R Narayanamohan is the Chairman of the Singapore Indian Chamber of Commerce and Industry (SICCI) and the Vice-Chairman of Singapore Business Federation (SBF), the apex business institution in Singapore.
Narayanamohan also represents the SICCI in the National Wage Council, Enterprise Development Centre of SPRING Singapore, Board-of-Trustees of the Institute of South east Asian Studies (ISEAS) as well as the People’s Association’s Talents Advisory Council.
A Bachelor of Commerce graduate and a Chartered Accountant, Narayanamohan is a practising accountant and a Senior Partner of Natarajan & Swaminathan, a certified and leading public accounting firm in Singapore. He is also a:
• Fellow Member of the Institute of Certified Public Accountants of Singapore;
• Fellow of the Chartered Certified Accountants of UK; and the
• Fellow Member of CPA Australia.
Having been instrumental in numerous Indian corporations setting up operations in Singapore, Narayanamohan’s firm provides business and audit services to more than a thousand companies worldwide, including industry leaders like Mustafa and the Modi Group of Companies.
Mr R Narayanamohan’s social engagement with the Singapore community spans many fronts. The following appointments and accomplishments underscore the depth and extent of his community service:
Appointments (past &current)
Singapore Indian Chambers of Commerce & Industry (SICCI) – Board of Directors
2002 – 2004: Honorary Treasurer and Member of Executive Committee
2006 – 2008: Director and Chairman of Finance & Membership Committees
2008 – 2010: Co-chairman of Membership Committee
2010 – 2012: Chairman
Rotary Club of Orchard, Singapore — a Rotarian since 1990
Tamil Language Council (administered by Ministry of Community, Youth & Sports, MCYS) — Treasurer
Sri Sivan Temple (administered by Hindu Endowment Board, HEB) — Member of Management Committee (2004 – 2010)
Singapore Indian Education Trust (SIET) — Honorary Treasurer (2004 – 2006)
Singapore Indian Association (IA) — Honorary Treasurer (2008 – 2012)
The Indus Entrepreneurs (TiE), Singapore Chapter — Honorary Treasurer
One of the Panel of Judges for the Best Tamil Teacher Awards 2009 & 2010
Major Social/Community Projects
“Singapore Indian Community’s Tribute to Senior Minister Mr. Goh Chok Tong” (2005): Treasurer & Member of Organizing Committee
“Singapore Indian Community Salutes our Prime Minister, Mr Lee Hsien Loong” (2005): Member of Sponsorship Sub-committee
Singapore Indian Development Association (SINDA) – 2nd Donation Draw (1996 – 1997): Chairman of Finance Committee
Current Social/Community Engagements:
Honorary Auditor for the following organizations:
• The Global Organization of People of Indian Origin (GOPIO)
• The Hindu Centre
• Sri Thandayuthapani Temple
• Professional Network of Young Indians (PNYI)
• Marwari Mitra Mandal

 

 

கல்வி மற்றும் தொழில் சார்ந்த கருத்தரங்குங்களை தொடர்ந்து எங்கள் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் கிளை 22.04.2012 அன்று தொழில் முனைவோர் இலவச கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.சிங்கப்பூர்-இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு.நாராயண மோகன் அவர்கள் தன்னுடைய அயராத பணிகளுக்கிடையில் சிறப்புரையாற்ற இசைந்தார்கள்.சுமார் 85 பேர் அமரக்கூடிய சிண்டா வளாகத்தில் அறை முழுவதும் நிரம்பி வழிந்து உபரியாக இருக்கைகள் போடுமளவிற்கு சிறப்புரையை ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களும் மற்ற பலருமாக கூட்டம் தொடங்கியது.
புதிதாக தொழில் தொடங்குவோரும் ஏற்கனவே தொழில்புரிந்து கொண்டிருக்கும் நபர்களுமாக கலந்து வருகை தந்திருந்த கூட்டத்தில் திரு.நாராயண மோகன் அவர்களின் பேச்சு ஆங்கிலத்தில் ஆரம்பித்து என்னுடைய வேண்டுகோளின்படி செந்தமிழில் மழையெனக் கொட்டியது.சம்பாத்தியம் உங்கள் சாமர்த்தியம்,சமகால வெற்றிக்கு சாணக்கிய சிந்தனைகள் ,உங்கள் விதிகளை உருவாக்குங்கள்,வெற்றியாளர்களின் அசத்தல் கருவூலம்,உங்கள் நிறுவனம் சிறிதா,பெரிதா?,புதுமை உங்கள் பிறப்புரிமை,வெற்றியை அடைந்தால் உயரம் புரியும்,எப்போதும் முயற்சிக்கலாம்,தொழில் புதிய கண்ணோட்டம்,வெற்றியின் அளவுகோல்கள் என்ன?என்று ஆரம்பித்து உங்கள் தொழிலில் நம்பகமானவரா நீங்கள்?என்று சட சட வென்று தன் அனுபவங்களை கோர்த்து சில குட்டிகதைகள் மூலம் கடினமான தொழில் நுணுக்கங்களை மனதில் பதியும்படி உணர்ச்சிபூர்வமான ஏற்ற இறங்கங்கள்,அசைவுகள்,முகத்தின் பாவனைகள் என்று ஜமால் முஹம்மது கல்லூரி எங்கள் பேராசிரியரின் முன்பு உட்கார்ந்து பாடம் கேட்கும் புது மாணவர்கள் போல் அனைவரும் உட்காந்திருந்தோம்,ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர்கள்.
ஒரு தொழிலை ஆரம்பிப்பதற்க்குத் தேவையான முதல் தகுதி அந்தத் தொழில் பற்றி முழுதும் தெரிந்து கொள்வதுதான்.ஏற்கனவே இந்தத் தொழிலை நான்கு பேர் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் செய்யும் முறையிலேயே நீங்களும் செய்யாதீர்கள்,வித்தியாசமான முறையில் செய்யுங்கள்.அதற்குத் தேவையான பிரத்யேகமான அறிவை கொண்டு வாருங்கள்.பல நாடுகளை சுற்றிப் வாருங்கள்.அங்குள்ள தொழில் நுட்பத்தைக் கொண்டு வாருங்கள்.தொழில் தொடங்குவதற்கும் தொடங்கியவர்கள் நிலைத்து நிற்பதற்கும் நெட்வொர்க் மிகவும் முக்கியம்.அறிமுகமில்லாத ஒரு நபரை பார்க்க வேண்டியிருந்தால் நீங்களே சென்று உங்களை அறிமுகப்படுத்திகொள்ளுங்கள்.உங்களை பற்றி எடுத்துச் சொல்ல இன்னொரு ஆள் தேவையில்லை.நம்மை பற்றி நாமே சொல்லிக் கொள்ள பெரிதாக ஒன்றுமில்லையே என்ற எண்ணம் வேண்டாம்.உங்கள் விசிட்டிங் கார்டை பெற்றுக்கொண்ட நபர் எதிர்பாராத தருணத்தில் உங்கள் வாடிக்கையாளராகிவிடலாம்.சிங்கப்பூர் அரசாங்கம் தொழில் தொடங்க என்னென்ன சுதந்திரத்தை அளித்துள்ளது என்று பாருங்கள்.இங்கு எந்த தொழிலை வேண்டுமானாலும் தொடங்கலாம்,எந்த தொழிற்சாலை வேண்டுமானாலும் கொண்டு வரலாம்,எந்த வியாபாரத்தை வேண்டுமானாலும் நடத்தலாம்.உலகத்தில் எந்த மூலையில் செய்யப்படும் அதை நம் வீட்டு பக்கத்திலேயே கொண்டுவந்து விற்கிறார்கள்.நம் தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப பல்வேறு ரகங்களில் உணவுப் பொருட்கள்,உடைகள்,அணிகலன்கள் மற்றும் வாகனங்கள் என்று சிங்கப்பூர் சந்தை மிகப்பெரியது.
முதலில் நீங்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன் பெற முயலும்போது உங்கள் தொழில் அதீதமான நம்பிக்கையை வைத்து பாஸிட்டிவாக மட்டுமே பேசினால் வங்கி அதிகாரி கடன் தரமாட்டார்.மாறாக லாப நஷ்டங்களை நிதர்சனமாக ஆராயக்கூடிய மனோநிலையில் சாதக பாதக விஷயங்களை விளக்குபவருக்கே எந்த வங்கி அதிகாரியும் கடன் கொடுப்பார்.வங்கிகளை பொறுத்தவரை நீங்கள் வாயினால் சொல்லும் உத்தரவாதங்களை விட காகிதத்தில் கணக்கு வழக்குகளாகச் கொடுக்கும் விளக்கங்களின் மூலம்தான் அதிகம் நம்பிக்கை வைப்பார்கள்.உங்கள் தொழிலுக்கு உதவ முனையும் வங்கியின் நலன்களை நீங்கள் எவ்வளவு தூரம் பாதுகாப்பீர்கள் என்பது மிக முக்கியம்.
உலகில் கடினமான விஷயங்களில் ஒன்று நல்லதோ,கெட்டதோ ஒருவர் மீது நமக்கு ஏற்படும் முதல் அபிப்ராயத்தை மாற்றிக் கொள்ள முடியாதது.அதனால் உங்களின் அறிமுகப்படலத்திலேயே உங்களுடைய படிப்பு விவரங்களை அது எவ்வாறு மற்றவர்களை எட்ட முடியுமோ அவ்வாறு தெரிவித்து விட வேண்டும்.தவறான முதற்பாதிப்பு தொழிலின் ஆரம்பகட்டதிலேயே உங்ககளுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளைத் தடுத்துவிடும்.நீங்கள் உங்களின் படிப்பு மற்றும் தகுதி விவரங்களால் கணிக்கப்படுவதை உணர்ந்து செயல்படுங்கள்.
சமயோசிதம் என்பது மிக நுண்மயமான தன்மை கொண்டது.ஒரு மனிதன் தன் வியாபாரத்திலோ,தொழிலிலோ வெற்றிகரமாக இருக்க வேண்டுமானால் சமயோசிதம் மிகவும் முக்கியமானது.உங்கள் சமயோசிதத்தின் மூலம் எவ்வளவுக்கெவ்வளவு தொடர்புகளை உருவாக்கிறார்களோ அந்தளவுக்கு தொழிலில் உங்களுக்குப் பலன் கிட்டும்.
நம்மை விடச் சிறந்தவர்களை சந்திக்கும் வாய்ப்பினைத் தவறவிடுவது என்றுமே ஒரு தவறுதான்.நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் ஒரு புதையலை வைத்திருப்பவராய் காணக் கற்றுக் கொண்டால் உங்களுக்கு அது பெரிய வெற்றியாக அமையும்.
ஷாம்பு என்பதே சமுதாயத்தின் மேல்தட்டு மக்களுக்கென்று ஒரு காலத்தில் இருந்தது.பெரிய பாட்டில்களில் வரும்.சாதாரண மக்கள் வாங்க முடியாத விலையில் இருக்கும்.சிறிது காலம் இவ்வாறு போய்க்கொண்டிருந்தது.கடலூரிலிருந்து வந்த ரங்கநாதனுக்கு ஒரு புதிய யோசனை பிறந்தது,இந்த ஷாம்புவை சிறு சிறு பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில்(SACHET) அடைத்து ஒரு ரூபாய்க்கு விற்றால் என்ன என்று ஏழை எளிய வாங்குவார்கள் என்று கணக்கு போட்டார்.அவருடைய யோசனை மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது.அதுதான் பிற்காலத்தில் “சிக் ஷாம்பு” என்று பெயர் பெற்றது.அவருடைய அந்த யோசனையைப் பின்பற்றியே பிற்காலத்தில் வேறு பல தொழில்களிலும் இந்த ஐடியா பின்பற்றப்பட்டது.பொதுவாக மக்களுக்கு எது என்பதைக் குறித்துதான் உற்பத்தியாளர்கள் பலரும் யோசிப்பது வழக்கம்.மாறாக நம்மிடமுள்ள புதிய யோசனையை ஒத்துச் செய்யப்படும் பொருளை மக்களிடம் எடுத்துச் சென்று அது ஏன் அவர்களுக்குத் தேவை என்பதை விளக்கி அவர்கள் மேல் திணிக்கும் முறையும் ஒத்துக் கொள்ளப்பட்ட வியாபார யுக்தியாகக் கருதப்படுகின்றது.உங்கள் யோசனையால் புதிய பொருளை உருவாக்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்”மக்களுக்கு அது ஏன் தேவை”என்பதை விளக்கவும் அதை அவர்கள் ஒத்துக்கொள்ளச் செய்யவும் அதற்கான உத்திகள் உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும்.
எதைச் செய்தாலும் வெற்றிக்காகச் செய்கிறோம். ஆனால் எப்படி செய்கிறோம் என்பதை பொறுத்துதான் வெற்றியும் தோல்வியும். ஒவ்வொருவரும் செய்யும் தொழில்கள் வேறுபடலாம்.பொதுவாக இருப்பது அணுகுமுறையும் நம்மை ஆயத்தம் செய்து கொள்கிற விதங்களுந்தான்.தொழில் வெற்றி பெற விரும்பவர்களுக்கு மிக முக்கியமான பண்பு புதிய மனிதர்களையும் புதிய சூழ்நிலைகளையும் தயக்கமில்லாமல் எதிர்கொள்வது.மின்தூக்கிகளில் புதிதாக பார்க்கும் மனிதர்களைக் கூட அவர்களாக வந்து அறிமுகம் செய்துகொள்ளும் வரை காத்திராமல் தானாக சென்று அறிமுகம் செய்து கொள்வதில் தொடங்கி முற்றிலும் அந்நியமான சூழ்நிலையில் ஏற்படும் வாய்ப்புகளை கூச்சமில்லாமல் எதிர்கொண்டு அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் முறை, அதன்மூலம் நாம் சற்றும் எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பாராத வாய்ப்புகள் ஏற்படுவதும் அதன் வழியாக நாம் புதிய ஏணீ ஏறுவதும் நிகழ்வதற்குச் எல்லா சாத்தியகூறுகளையும் அடைய முடியும்.சந்தை சூழலில் எந்தவிதமான மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதற்குரிய வாசல்கள் திறந்து கொள்ளும் வித்தையைக் கற்றுக்கொள்ளுங்கள்.தயாரிப்பிலும் தரத்திலும் உள்ளடகத்திலும் நீங்கள் அடிக்கடி கொண்டு வருகிற முன்னேற்றம் புத்தம் புதிதாய் அறிமுகம் செய்யும் தயாரிப்புகள் வாடிக்கையாளரின் வசதிக்கும் விருப்புக்கும் வாய்ப்பாக நீங்கள் செய்கிற விரிவாக்கம் அவ்வப்போது அளிக்கிற சலுகைகள் இவையெல்லாம் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் புதுமையை நிகழ்த்த தயாராயிருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
சரி என்று சொல்வது நல்லதுதான் இல்லை என்று சொல்வதும் நல்லதுதான்.ஏனெனில் அது உங்கள் தொழில்,உங்கள் பணம்.நீங்கள் குற்ற உணர்வுக்கு ஆட்படவேண்டியதில்லை.இதெல்லாம் தொழிலில் சகஜம் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.சந்தோஷப்படுத்தும் என்பதற்காக செய்கிறேன் என்று சொல்லி வைக்காதீர்கள் இல்லை முடியாது என்று சொல்லும்போது மிகத் தெளிவாக சந்தேகத்துக்கு இடமின்றி நெத்தி அடியாக சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்.ஆணி நெத்தியில் அடித்தால்தான் சரியாக இறங்கும்.பக்கவாட்டில் அடித்து எந்த பயனும் இல்லை.ஆணித்தரமாக இருங்கள் என்றார்.
இடைவேளை கால்மணிநேரங் கழித்து மாணவர்களாக மாறிய ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஒருவர் கூட மிஸ் ஆகாமல் திரும்ப வந்து உட்கார்ந்ததை கணித்து இதுவே என் முதல் பகுதி பேச்சின் வெற்றிக்கு அடையாளம்தான் என்று இரண்டாம் பகுதி பேச்சைத் தொடர்ந்தார்.
தொழில்முனைவோருக்கு இருக்கவேண்டிய முக்கியமான குணம் விற்று விட்டு ஓடிப்போய் விடவேண்டும் என்று நினைக்காமல் எனது வியாபாரம் திரும்ப திரும்ப நடக்க வேண்டும் என்ற கண்ணியமானதொரு கொள்கையில் அமைவதுதான்.தொழில் தொடங்குவதற்கு முன்னால் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியாமல் தொழில் முனைவராக எடுத்துக்கொள்ளும் முயற்சிகளில் திறமையாகச் செயல்படமுடியாது.வேலையைத் தொடங்கும் முன்பு கருவிகளை எடுத்துக்கொள்பவனே அறிவாளி.
தொழில் நம்பத்தன்மை வார்த்தைகளில் மட்டுமல்ல தந்த வாக்கை காப்பாற்றுவதில் இருக்கிறது.மனித உறவுகளை கட்டமிக்கும் பலமான அஸ்திவாரமே பரஸ்பர நம்பிக்கைதான்.தொழிலில் எதை இழந்தாலும் நம்பகத்தன்மை மட்டும் இருந்தால் அதனைக் கொண்டு இழந்த அனைத்தையும் மீட்கலாம். ஆனால் நம்பகத்தன்மையை இழந்து விட்டால் பின்னர் எதுவுமே இருக்காது.கசங்கிய காகிதம் மீண்டும் தன நிலையை அடைய முடியுமா?
ஜப்பான் கார் நிறுவனமான டொயோட்டா கடந்த 2009 -2010 இல் உலகம் முழுவதும் விற்பனை செய்த 90 லட்சம் கார்களை சுமார் 9000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்ட போதும் திரும்ப எடுத்துக்கொண்டது..அது மாதிரி நாம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாமல் நம்மையும் மீறி பல காரணங்கள் ஏற்படலாம்.அவற்றையும் மீறி சொன்ன சொல்லை காப்பதே சிறந்தது என்று செயல்படும் நிறுவனங்களே களத்தில் நிலைத்து நிற்கின்றன.உங்களையும் மீறி சொன்ன சொல் தவற நேர்ந்தால் முன்கூட்டியே சம்பந்தப்பட்டவர்களிடம் தகவல் வந்து வருத்தம் தெரிவியுங்கள்.நாம் தந்த வார்த்தையை மீற நமக்கே உரிமையில்லை என்பதை உணர்ந்து கூடிய விரைவில் அதனை செய்து தர முயலுங்கள்.உலகம் உங்களை நம்பத் தொடங்கும்.உயர்ந்த இடங்களில் இருப்பவர்கள் உங்கள் மேலுள்ள நம்பிக்கையால் உதவுவார்கள்.உங்கள் பெயரை மற்றவர்களுக்குப் பரிந்துரை செய்வார்கள்.உங்கள் வட்டம் விரிவடையும். உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.
குருவான துரோணரிடம் பாண்டவர்களும் கௌரவர்களும் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்கள்.தொலைவில் இருந்த மரத்தின் கிளையில் அமர்திருந்த பறவை கண்ணை குறிபார்த்து அம்பை செலுத்துமாறு துரோணர் கூறினார்.அனைவரும் வில்லில் நாணேற்றி அம்பை விடத் தயாராய் நின்றார்கள்.மற்றவர்களுக்கு இலையும்,மரக்கிளையும் மதுரம் குருவியின் கால்களும் மட்டும் தெரிவதாகச் சொல்ல அர்ச்சுனனுக்கு பறவையின் கண் மட்டுமே தெரிந்தது.பறவை வீழ்ந்தது.அதுபோல உங்கள் தொழில் முழு ஈடுபாட்டுடன் கவனத்தை செலுத்தினால் “முடியும்” என்ற பட்டியலில் உங்களிடம் நிறைய விஷயங்கள் வந்து சேர்ந்துவிடும்.

சிங்கப்பூரை மையமாகக் கொண்டு உலக நாடுகள் பலவற்றின் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.எங்கேயோ விளைந்த பொருளை வேறெங்கோ விற்று வாங்கவும் உள்கட்டமைப்பு மையங்களை பயன்படுத்தி இங்கு அரசாங்கத்திற்கு வரி கட்டும் பல நிறுவனங்கள் தொடர்ந்து துவங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
வெற்றிகரமான தொழில் முனைவர்கள் எதிர்ப்படக்கூடிய சரியான மனிதரிடம் வணிக வாய்ப்பை முதலில் கேட்கீறார்கள்.அதோடு நின்று விடுவதில்லை அவர்களிடமே பரிந்துரை பெற்று புதிய வாடிக்கையாளர்களின் கேட்டுப்பெறுகிறார்கள்.ஒரு நிறுவனம் வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் ஒரு வாடிக்கையாளர் உங்கள் தங்கள் தயாரிப்பிலோ சேவையிலோ வெளிப்படுத்தும் அம்சங்களை குறித்துக் கொண்டு அதை நிறைவேற்ற முயல்வதின் மூலம் வாடிக்கையாளர்களின் இயல்பான அணுகுமுறை தனக்கு கிடைத்த சேவை அடுத்தவர்களுக்கு கிடைக்கட்டுமே என்ற எண்ணத்தில் அதை அடுத்தவர்களிடம் சொல்லி புதிய வாடிக்கையாளர்களை உங்களுக்கு கொண்டு வருவார்கள்.
வளர்ந்து வரும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தொழிலில் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் சிந்தனைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.அதற்கு தன் நிறுவனத்தின் வேலைகளை பகிர்ந்து வெளியில் ஒப்பந்த அடிப்படையில் தன் நிறுவன வேலைகளைக் குறைத்துகொள்ளும் வகையில் பணியாற்ற வேண்டும்.பெரும்பாலான சிங்கப்பூர் நிறுவனங்கள் அவ்வாறுதான் செயல்படுகின்றன. சிங்கப்பூரின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டின் வீறுநடை அவ்வளவு துரிதமானதாக உள்ளது.அதற்கு முன்பை விட உயர்வான குறிக்கோளுடன் உன்னதமான புதிய திட்டங்களுடன் உயர் தொழில் நுட்ப அறிவுத் திறனோடு தொழிற்முயற்சி எடுக்கக் கூடிய தொழிற்முனைவர்கள் தேவை.அதுவே எல்லாத் துறைகளிலும் நம் வெற்றியை உறுதி செய்யும்.
ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் விளையாடும் களம் மாறிக் கொண்டிருந்தாலும் நீங்கள் முதலில் தொடங்கிய நிறுவனத்தை விடாமல் தொடர்ந்து நடத்துவது மிகவும் முக்கியம்.
வெற்றியை நிகழ்த்திக் காட்டிய யாருக்கும் அந்த வெற்றியை உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது.தொடர்ந்து வெற்றிகளை நிகழ்த்திக்காட்டி கொண்டேயிருக்கும் போதுதான் ஒரு வெற்றியாளர் என்கிற அங்கீகாரத்தை பெறுகிறார்.அத்துடன் உழைப்பு,துணிவு,முடிவெடுக்கும் ஆற்றல்,திட்டமிடுதல் இவற்றால் நமக்கு கிடைத்ததை சமுதாயத்திற்கு திருப்பி கொடுக்கும் சேவையிலும் நீங்கள் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.நான் ஒரு முறை சிண்டாவின் நன்கொடை வில்லை விற்கும்போது அப்போது தோன்றிய ஒரு வழிமுறையை கையாண்டு தான் நன்கொடை வில்லைகளை விற்றிருக்கிறேன்.அந்த வழிமுறை ஏற்புடையதல்ல என்று நினைப்பவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது அதனால் பயன் பெறப் போகும் இரண்டு சாரார்களின் நலன் கருதி செய்யும் போது அதுவும் ஒரு நல்ல வழிமுறைதான் என்றார்.
வியாபாரத்தில் போட்டியாளர்கள் யார் யார்? அவர்களைக்கண்டு பயப்படக்கூடாது. அவர்கள் எவ்வாறு வியாபாரம் செய்கிறார்கள்; எப்படி வியாபாரத்தை செய்கிறார்கள் என்று கவனியுங்கள். அவர்கள் செய்யும் நல்ல வழிகளை பின்பற்றி நீங்களும் வியாபாரத்தில் வெற்றி அடையுங்கள்.
தொடங்கிய தொழிலில் வளர்ச்சியில்லையென்றால் எவ்வாறு மாற்றி அமைத்து செய்யலாம் என்று யோசியுங்கள். IKEA, NOKIA போன்ற நிறுவனங்கள் தொடங்கிய தொழில் வேறு; இப்பொழுது உலகம் முழுவதும் செய்யும் தொழில் வேறு. அவர்கள் எதிர்வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி தொழிலை மாற்றி வாழ்க்கையில் முன்னேறியிருக்கிறார்கள்.
ஒரு வியாபாரத்தை மட்டும் செய்து கொண்டிருக்காதீர்கள். மற்ற சார்ந்த தொழில்களை கண்டறிந்து அவைகளையும் சேர்த்து செய்யுங்கள். தொழில் வளர்ச்சியடைய வாய்ப்புகள் அதிகமாகும்.
தன்னம்பிக்கையுடன், கடின உழைப்புடன் தொழிலை நடத்திச் செல்லுங்கள். பளு தூக்குபவர் இந்த பளு நம் காலில் விழுந்தால் அடிபட்டுவிடும்; இந்த பளுவை என்னால் தூக்கமுடியுமா என்ற பயங்கள் இருந்தால் அவரால் வெற்றி பெற முடியாது.
தொழிலில் ஒரு வளர்ச்சி அடைந்தபிறகு இருக்கும் பணத்தை எடுத்து சொத்து மற்றும் இதர சொந்த செலவுகளில் ஈடுபடாதீர்கள். நீங்கள் உங்கள் வியாபாரத்திலிருந்து எடுக்கும் பணம் உங்கள் SUPPLIERSக்கு கொடுக்க வேண்டிய பணமாகவோ, நீங்கள் செய்த முதலீடாகவும் இருக்கும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் தொழில் பாதிக்கப்படும்.
வரும் பிரச்சனைகள் பெரியதா அல்லது சிறியதா என்று ஆராயாமல் பயப்பட ஆரம்பித்து விடாதீர்கள். தீர ஆராயுங்கள். வாட்டா சாட்டமாக ஒரு வாலிபன் பஸ்ஸில் ஏறி பயணம் செய்தான். டிக்கெட் கொடுக்கும் கண்டக்டர் அவனிடம் சென்று டிக்கெட் எடுக்கும்படி கேட்டார். அவன் தேவையில்லை என்று சொல்லிவிட்டான். அவருக்கு பயம் வந்து விட்டது. ஏன் என்று கேட்க தைரியம் இல்லை. ஒரு மாதம் கடந்தது. பஸ் கண்டக்டர் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தார். ஒருநாள் அந்த பயணியிடம் போய் தைரியமாக ஒரு கேள்வி கேட்டார். ஏன் டிக்கெட் எடுக்க மாட்டேன் என்று சொல்லுகிறீர்கள் என்று. அதற்கு அவன் நான் BUS PASS வைத்திருக்கிறேன் என்று பதில் சொன்னான்.
மனம் குழம்பி இருக்கும்பொழுது முடிவுகளை எடுக்காதீர்கள். ஒரு குரு தன் சீடரை அழைத்து, ஆற்றுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும்படி சொன்னார். சீடர்கள் தண்ணீர் எடுத்துவர சென்றார்கள். சலவைத் தொழிலாளர்கள் துணி துவைத்துக்கொண்டிருந்தார்கள். தண்ணீர் ஓட்டமாகவும் இல்லை; அழுக்காகவும் இருந்தது. சீடர்கள் திரும்பி வந்து குருவிடம் சொன்னார்கள்.
குரு திரும்பவும் மாலையில் சென்று தண்ணீர் எடுத்து வரும்படி சொன்னார். சீடர்கள் தண்ணீர் சுத்தமாகவும் ஓட்டமாகவும் இருந்தது. தண்ணீரை எடுத்துவந்து குருக்கு கொடுத்தார்கள்.
உங்களின் இலக்குகளை மாற்றிக்கொண்டிருக்காதீர்கள். தீர ஆராய்ந்த பிறகு ஒரு முடிவு எடுத்து அதை தொடர்ந்து கடின உழைப்புடன், ஈடுபாட்டுடன் செய்தீர்கள் என்றால் வெற்றி நிச்சயம்.
ஒருவன் கிணறு வெட்ட ஆரம்பித்தான். அந்த வழி சென்ற ஒருவன் இங்கு ஏன் தோண்டிக் கொண்டிருக்கிறாய்; வேறு இடத்தில் தோண்டு என்று அறிவுரை செய்தான். அவனைப் போல் பல வழிப்போக்கர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தான். கடைசியில் கிணறும் தோண்டவில்லை; தண்ணீரையும் அடைய முடியவில்லை. ஒரே இடத்தில் தொண்டியிருந்தால் 10 அடி அல்லது 20 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்திருக்கும்.
மழையாகக் கொட்டிய பேச்சு முடிவுக்கு வந்தபோது மூன்று விதமான பிரிவுகளில் கூட்டத்தினரைப் பிரித்துப் பார்த்தேன். முதல் ரகம் தொழில் தொடங்கி ஒரு நிறைவுடன் தொழில் நடத்தி கொண்டிருப்பவர்கள். அவர்கள் நன்கு வளர்ந்த மரங்களைப் போல அவர்களிடமிருந்து வாய்ப்புக்கள், புதிய தொடர்புகள் என்கிற கனிகளை மற்றவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் இரண்டாவது தம் தொழிலில் சராசரியாக வளர்ந்து வருவர்கள். இன்றையப் பேச்சில் இவர்கள் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம். முன்றாவது ரகத்தினர் இப்போது தான் துளிர் விட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இருப்பவர்கள் திரு.நாராயண மோகன் அவர்களின் பேச்சு இவர்களுக்கு உரம் போட்டுத் தண்ணீரும் ஊற்றியிருக்கிறது.
இப்படியாக மற்றவர்களுக்கு கிடைக்கக் கூடிய பயன்களையும் அதற்கு எங்கள் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்திற்குரு வாய்ப்பைக் கொடுத்த திரு. நாராயண மோகன் அவர்களுக்கு நன்றி கூறிக் கொண்டு அடுத்த பயணத்திற்கான வேலையைத் தொடங்கும்……

Edited and approved by Mr.Narayanamohan
தொகுப்பு – திரு.முகைதீன் அப்துல் காதர்,தலைவர் – JMC Alumni
திரு.ஷானவாஸ்