“நம் பிள்ளைகளுக்குப்
பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா
மீசை முளைக்க வைத்து விட்டது” என்கிறார் வைரமுத்து
கலாச்சார சீரழிவு, வன்முறை, இளையர்களிடையே ஹீரோயிசம் என, சமூகத்தை சீரழிக்கும் செயல்கள் அனைத்திற்கும் வித்திடுவதில், இன்றைய சினிமா முக்கிய இடத்தைப் பிடிப்தை யாராலும் மறுக்க முடியாது. நாகரிகமற்ற வார்த்தைகள், ஆபாசமான அசைவுகள், அருவறுப்பான காட்சிகள், இரட்டை அர்த்தமுள்ள ஜோக்குகள் குண்டர் கும்பல் கதைகள் ஆகியவற்றையே கதையம்சங்களாக கொண்டு பெரும்பாலான படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குண்டர் கும்பல் நடவெடிக்கைககளில் சென்ற ஆண்டு ஈடுபட்டசிங்கப்பூர் இ ந்திய இளையர்கள் மொத்த குற்ற நடவடிக்கையில் 22 சதவிகிதம் சிங்கப்பூரில் 9 சதவிகிதமே உள்ள இ ந்தியர்களின் எண்ணிக்கையில் இது மிகவும் அதிகம்
இளையர்கள் குண்டர் கும்பல்களில் சேர்வதற்கு சினிமா மற்றும் காரணமல்ல சிக்கலான குடும்ப உறவுகள் சமூக ஊடகங்கள் நண்பர்கள் என்று பல காரணங்கள் உள்ளன.
வசந்தம் தொலைக்காட்சியில் தற்போது பிரபலமாக பேசப்பட்டுவரும் “சிந்தனை “நிகழ்ச்சியில்
( சிங்கப்பூரின் நீயா ?நானா?) இந்தக்கருப்பொருள் பற்றிய கல ந்துரையாடலில் கலந்து கொண்டேன்
இளம் வயதிலேயே குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறைபிள்ளைகள் உண்மையாகவே ஒழுக்கம் நிறை ந்தவர்களாகஆவதற்கு கற்பிக்கப்பட இயலுமா?
இளையர்களின் கொதிக்கும் மன நிலை கும்பல் சேரும்போது
எரிமலையாய் வெடிப்பதன் காரணம் இளையர்கள்
சிறு தவறுகளுக்காக தங்களுக்குள் மன்னிப்பு வழங்கிக்கொண்டு நட்பை தொடர் வதீல்லையே ஏன்
சினிமாக்காரர்கள் மன்னிப்பு கெட்ட வார்த்தை என்று சொல்லி பன்ச் வசனம் பேசுகிறார்களே அதனலா
என்ற தளத்தில் என் பேச்சு இரு ந்தது
என்னுடைய முதல் நூல் துண்டு மீனும் வன்முறைக்கலாச்சாரமும் சிங்கப்பூர் சிறைகளில் இளையர்களின் மன மாற்றத்திற்கு பயன் படூத்தும் வழி முறைகள் பற்றிய ஆய்வு நூல் என்பதைப்பற்றி விவரித்தேன்
சிறைசென்ற இளையர்களின் அனுபவங்கள் கண்களில் நீரை வரவழைத்தன இளைய்ர்களை
குண்டர் கும்பலில் இரு ந்து விலக்கிவைக்க
மற்ற நாடுகளில் பின்பற்றப்டாத சில நடைமுறைகள் சிங்கப்பூரில் உள்ளன
குண்டர் கும்பல்களில் சேரும் சாத்தியம் உள்ள இளையர்கள் குற்றச்செயல்கள் புரிவதிலிருந்தும் குண்டர் கும்பல்களிலிருந்தும் ஒதுங்கியிருக்க சில நடவடிக் கைகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. பல்வேறு நிலைகளில் குண்டர் கும்பல்களோடு தொடர்பு வைத்திருக்கும் இளையர்கள் மீது இந்த நடவடிக்கைகள் அது கவனம் செலுத்துகிறது
கைது செய்யப்படும் குண்டர் கும்பல் உறுப்பினர்கள் மற்றும் குண்டர் கும்பல்கள் தொடர்பான குற்றங் களைப் புரிந்தவர்களை நீதி மன்றத்திற்கு கொண்டு செல்வ தற்குப் பதிலாக
இந்தத் திட்டத்தில் சேர்த்து அதை நிறைவு செய்பவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படாமல் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு விடு விக்கப்படுவார்கள்
இந்தத் திட்டத்தில் சேரும் இளையர்கள் போலிசிடம் நேரடி யாகச் சென்று தன்னை முன்னிலை படுத்துவது, அவர்கள் பள்ளியில் அல்லது வேலையிடத்தில் இருக்கி றார்களா என்று கண்காணிக் கப்படுவது ஆகிய கூடுதல் அம்சங்கள் இ த் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது
சீர்திருத்தப் பள்ளிகளிலிருந்து வெளியானதும் மீண்டும் குண்டர் கும்பல்களில் சேரும் சாத்தியம் உள்ளவர்களைக் குறிப்பிட்டக் காலகட்டத்திற்குக் கண்காணிக் கும் விதிமுறை நடப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது
குண்டர் கும்பல்களில் இளையர் களைச் சேர்ப்பவர்ளுக்குக் கூடுதல் தண்டனை விதிக்கப்படுகிறது
இளம் குற்றவாளிகளைத் திருத்த அவர்களது குடும்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு இளம் குற்றவாளிகளுக்கான பல்வேறு நடவடிக்கைகளில் பெற்றோர்களை அதிகாரிகள் ஈடுபடுத்துகின்றனர்.குடும்பம் சமூகஊடகங்கள் கெட்ட நண்பர்கள் சகவாசம்
இவற்றை தாண்டி எ ந்தக்காரணமும் இல்லாமல் குண்டர் கும்பல் நடவடிக்கையில் ஈடுபட்டு சிறையிலிருந்து வெளிவ ந்த இளையர் என் பேச்சை கவணித்து நெருங்கிவந்து
தன் அனுபவங்களை என்னிடம் பேசினார்
புனைவுகளை தாண்டிய அனுபவங்கள் என்னை அங்மோகியோ நூலகம் வரை தன் காரில் கூட்டிவ ந்து
விட்டு சென்றார் .இதுவரை நூலக வாசலை மிதித்ததில்லை என்றார்
உள்ளே வாருங்கள் என்றேன் இல்லை நீங்கள் படித்ததை சொல்லுங்கள் உங்கள் உணவகத்தில் வ ந்து அடிக்கடி சந்திக்கிறேன் என்று கூறி அதிவேகமாக ஒரு யூ டர்ன் போட்டார்
கண்ணும் காதும் மனித உண்ர்வுகளுக்கு காரணிகள். அதை வெல்லத்தான் நம்முன்னோர்கள் நமக்கு துணைவருகிறார்கள். தவறியவர்கள் தங்கள் குற்ற
உணர்வுகளால் தனிமைப்பட்டுக்கொண்டு உறவுக்ளுடன் இணைவதில்லை. எனவே
தன்நெஞ்சு சுடுவது நமக்கு புரியாது. தெரியும் என்பதை புரியவைத்து அவர்களை உள்ளன்புடன் அரவணைப்பது நம் அனைவரின் கடமையும் ஆகும்.