சனிக்கிழமை சைவம்

Posted: ஜனவரி 7, 2021 in வகைப்படுத்தப்படாதது

உணவுக்கடையில் கஷ்டமான வேலை சமைப்பதா இல்லை ,எது என்று கேட்டால் ஆர்டர் எடுப்பதுதான் என்று சொல்வேன் . சிலர் சைவம் என்பார்கள். ஆனால் முட்டை சாப்பிடுவார்கள் பால் பொருட்கள் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் (Ovo Vegetarian). சிலர் பால் பொருட்கள் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் முட்டை சாப்பிட மாட்டார்கள் (Lacto Vegetarian). சிலர் ovo.lacto vegetarian பிரிவு. புலால் உணவுகள் மட்டும் சாப்பிடுவதில்லை என்பார்கள். ஆனால் உணவைத் தேர்ந்து எடுக்கும் சாய்ஸ் நம் யாரிடமும் இல்லை என்பதே உண்மையாக இருக்கிறது. ‘நான் சுத்த சைவம் சீஸ் பரோட்டா கொடுங்கள்’ என்பவர்களுக்கு சீசீல் கலந்திருக்கும். Animal ingredients பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கேக், குக்கீஸ், சாக்லேட் சுத்த சைவம், என்ற நிலை இப்போது இல்லை. ‘மீன், கோழி சாப்பிடலாம். இறைச்சி சாப்பிட்டால்தான் மாமிச பட்சினி என்று அர்த்தம்.’ என்று அதைக் கடைப்பிடிப்பவர்களும் உண்டு. எதையும் நம்ப முடியாது. மொத்தத்தில் நான் Raw vegetarian என்று வெறுமனே பழங்கள், காய்கறிகள் மட்டும் பச்சையாக சாப்பிட்டு அந்தக் கவலையால் வாழ்நாள் முழுதும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு வாடுபவர்களும் உண்டு. இதில் புத்த மதத்தை சார்ந்தவர்கள் வெங்காயம் பூண்டு (Allium family) கூட சாப்பிட மாட்டார்கள்.


ஒருநாள் கடையில் வாடிக்கையாளர் ஒருவர் மிகவும் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு பிரதர் , சைவ சாப்பாடு கிடைக்குமா? என்றார் . நான் சூழ்நிலையை அவரிடம் சொல்லி வேண்டு மானால் ‘உருளைக்கிழங்கு தவ்வு மட்டும் கலந்து நூடுல்ஸ் தரட்டுமா?’ என்றேன். சட்டி அகப்பை எல்லாவற்றையும் நன்றாகக் கழுவச் சொன்னார்.  இஷ்டதெய்வத்தை வணங்கிவிட்டு சாப்பிட ஆரம்பித்தார்.அடுத்த நாள் பார்த்தால் அதே நபர் சீனன் கடையில் கருப்புக்கோழி சூப் இறைச்சி கலந்து வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்தார். நான் அவரைப் பார்ப்பதைக் கவனித்துவிட்டு ‘சனிக்கிழமை மட்டும் நான் சைவம் என்றார். ஈரோடு வட்டாரத்தில் முன்பு நூறு சதவீதம் சைவ முட்டை தயாரிக்கிறோம். Veg egg powder egg yolk, egg albumin. இவை எல்லாமே vegetarian.. ஏனெனில் வெறும்சோயாதான் கோழி உணவு என்ற விளம்பரம் பார்த்திருப்பீர்கள். இதற்குமேனகா காந்தி, அந்த முட்டை என்ன மாங்காய் மாதிரி மரத்திலிருந்தா வந்தது என்று கேட்டார். அசைவம் பழகிவிட்டாலும் அதை மனம் உவந்து தொடர்ந்து சாப்பிட சிலருக்கு எலும்பு மற்றும் அதன் வாடை தடையாக இருக்கிறது என்பவர்களுக்கு Advanced Meat Recovery மூலம் இறைச்சியின் தன்மையே இல்லாத இறைச்சிகள் உருவாக்கப்படுகின்றன. மிருகங்களின் சதைகளை நவீன முறையில் பிரித்து, வாடை போவதற்கு அம்மோனியா கரைசலில் முக்கி எடுத்து தருவதுதான் இந்த முறை.


அசைவம் சாப்பிட்ட அனுபவம் வேண்டும். ஆனால் சைவக்கொள்கைக்குப் பங்கம் வந்துவிடக்கூடாது என்பவர்களுக்காக, fake meat, moke meats, seiten sandwitch,vegie dogs, morning star burger, fake sausage fake ribletts என பல வடிவங்களில் மார்க்கெட்டில் விடுகிறார்கள். இவை சுவையில் அசைவம். ஆனால் சுத்த சைவம். பனீர் ஸ்லைஸ் போல கெட்டியாக்கப்பட்ட சோயா சாறு, கோதுமை, பார்லி போன்ற தானியங்களிலிருந்து எடுக்கப்பட்ட புரோட்டீன் போன்றவையே இதற்கு மூலப்பொருட்கள்.
பலர் தங்கள் விருப்பங்களை விட்டுக்கொடுக்கும் விஷயங்களின் பட்டியலில் பெரும்பாலும் உணவுகள் இடம்பெறுவதில்லை. சிலருக்கு உணவுகளில் தங்கள் சாய்ஸை வெளிப்படுத்துவதில் எந்தச் சூழ்நிலையும் தடை இல்லை. சிறையில் தன் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த சதாம் தனக்குப் பிடித்த Kelloggs Raisin crunch cereal கேட்டு கோபப்பட்டாராம்.போட்டி நடக்கும் தினங்களில் சிக்காகோவில் உள்ள அறுவைக் கொட்டடிக்குச் சென்று பச்சை இரத்தம் குடித்தால்தான் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் Jo. Lois க்கு மூடு வருமாம். ரஷ்ய நாவலாசிரியர் Veladimir nabakov தினமும் ஒரு வண்ணத்துப்பூச்சி பிடித்து சாப்பிடு வாராம். பாதாமும் சீசும் கலந்ததுபோல் ஒருவகை சுவை இருப்பதாக அவர் சொல்வாராம்.


விடாப்பிடியான விருப்பம் மட்டுமல்ல, உணவைப் பற்றிய பேச்சுக் களும் சரித்திர முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. விவசாயிகள் ரொட்டி கிடைக்காமல் பட்டினி கிடக்கிறார்களே என்று முறை யிட்டதற்கு, ஏன் கேக் சாப்பிட வேண்டியதுதானே?’ என்று பிரான்ஸ் அரசி Marie Antoinette கமெண்ட் அடித்ததைப் படித்திருப்போம். அந்த வார்த்தைகள் பிரெஞ்சு புரட்சி வெடிப்பதற்கும் அவர் கில்லட்டினில் கொல்லப்படுவதற்கும் காரணமாகிவிட்டது. உணவில் ஆட்சி யாளர்கள் கைவைத்தால் அரசியலில் மக்கள் தலைகீழ் மாற்றங்களைக் கொண்டு வந்துவிடுவார்கள் என்பதற்கு வரலாற்றில் பல சம்பவங்கள் உண்டு. தேயிலைக்கு அரசு வரி விதித்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் போராட்டத்திற்குத் தூண்டுகோலாக அமைந்தது. 19ஆம் நூற்றாண்டில் உருளைக்கிழங்கு பயிர்களில் பரவிய நோய் அயர்லாந் தின் அரசு மாற்றத்திற்குக் காரணம் ஆனது என்பார்கள்.


அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் ’உங்களில் ஒருவன் என்று காட்டிக்கொள்வதற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உணவு விளங்குகிறது. ஏழைகள் சாப்பிடும் உணவை சாப்பிட்டுத்தான் அவர்களின் பிரதிநிதியாகக் காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. சமபந்திவிருந்து, குடிசையில் புகுந்து சாப்பிடுவது போன்ற நிகழ்ச்சிகள் மேலை நாடுகளிலும் வேறு விதமாக நடக்கிறது. புஷ் வாக்கு சேகரிக்கும்போது பர்கர் ஆடு மாடு சாபொஇடுவது மாதிரி சிலநிமிடங்கள் அசை போட்டுச் சாப்பிடுவாராம். ஏன்? இப்படி சாப்பிட்டால்தானே தொலைக்காட்சிகள் கூடுதல் நேரம் அவரைப் படம் பிடிக்கும்.
உணவுகளின் மீதான தன்னை மீறித்தனம் பல வகைகளில் வெளிப்படுவதை மறைந்த எழுத்தாளர் ஞானி என் கடைக்கு வந்திருந்தபோது கேட்டேன் ,எனக்கு உங்க கடையில் எது சைவம் என்று நினைக்கிறீர்களோ ,அதைக் கொடுங்க போதும் என்றார் ,தனது தோள்பட்டையில் மனைவியின் படத்தை ஆசையாக வரைந்தபோது, அதோடு lamb chop படத்தையும் வரைந்து வைத்தாராம் மீசைக்கார ஓவியர் Salvodor Dali. ஏன் என்று கேட்டதற்கு, ‘எனக்கு மனைவியும்   பிடிக்கும், lamb chopம் பிடிக்கும் என்றாராம் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s