Archive for the ‘பத்தி’ Category

கடைகளில்  வியாபாரம் மும்முரமாக நடந்துகொண்டிருக்கும் சமயத்தில்  இடுப்பில் ஒரு கத்தியும், தலையில் மானெக்‌ஷா தொப்பியும்அணிந்து கொண்டு, தன்னுடையகையிலுள்ள தடியால் இரண்டுதட்டுத் தட்டிக் கடைக்காரரைத்தன் பக்கம் திரும்ப வைத்து, அரே சாப்என்று ஒரு சல்யூட்அடித்துக் கொண்டே செல்லும்கூர்க்காவின் பிம்பம் இன்னும்என் மனதில் அழியாமல் இருக்கிறது.தன் குடும்பத்தையும், குழந்தைகளையும், சொந்த ஊரையும் விட்டு வந்து, இரவெல்லாம் விழித்திருந்து, கிடைக்கும் பகல் நேரங்களில்தூங்கி விழிக்கும் கூர்க்காக்களின்தேர்ந்த உடற்கட்டும், இறுக்கமானபார்வையும், தன்மையான மனமும், மீசையில்லாத முகமும் மறக்கமுடியாதவை.

கல்லூரியில்படிக்கும் போது, கூர்க்காக்களுக்குஅதிகமாக முடிகள் ஏன் வளர்வதில்லைஎன்பதில் ஆரம்பித்த அரட்டை, கூர்க்காவாக நடித்த சத்தியராஜுக்கு எப்படி கூர்க்காவேடம் பொருந்தும் என்பதில்முடிந்திருக்கிறது. அவரை விடக்கூர்க்கா வேடத்துக்கு மம்முட்டிதான்சரியான தேர்வு என்று தோன்றும்.

    விடிந்து விடு இரவே

 

      விழித்திருக்கிறான் கூர்க்கா

என்ற  அறிவுமதியின் கவிதையும், கூர்க்காவின்பகல் பொழுதுஎன்ற எஸ்.ராவின்பத்தியும் சிங்கப்பூர் கூர்க்காக்களுக்குஎப்படிப் பொருத்தமில்லாமல்போனது என்பதைப் பற்றியதுதான்இந்தப் பத்தி.

ஐந்துவருடங்களுக்கு முன்பு கூர்க்காக்கள்  குடியமர்த்தப்பட்டிருக்கும்ஜிசெங் பகுதியில் உணவுக்கடை திறக்கும் வாய்ப்புவந்தது. கூர்க்காக்களின் தேசியஉணவு சப்பாத்தி. அத்துடன் ரோட்டா. இந்த காம்பினேஷன் எனக்கும்மிகவும் பிடித்துப் போய், தாமதம்செய்யாமல் கடையைத் திறந்தேன்.பிறகுதான் தெரிந்ததுகூர்க்காக்கள்சிங்கப்பூருக்கு சமீப காலத்தில்வந்தவர்கள் அல்ல 1945லிருந்துஇங்கு இருக்கிறார்கள் என்பது!

பையா  சாதா வாலா, அண்டா வாலா (சாதாபடோட்டா, முட்டை பரோட்டா)என்றுநான் குரல் கொடுத்தால், நோபையா! ஐ லைக் மீ சூப், சிக்கன்ரைஸ், எக்கனாமிக் மீகூன் என்றுநழுவுகிறார்கள். மலாயும், நுனிநாக்கு பிரிடிஷ் ஆங்கிலமும்வெளுத்துக் கட்டுகிறார்கள்.இவர்கள் இரவில் விழித்திருக்கும்கூர்க்காக்கள் அல்ல; பகல் நேரத்தில்சிங்கப்பூரின் மிக சென்சிடிவானபகுதிகளைப் பாதுகாக்கும்காவலர்கள்.

அதிகாலையிலும்மாலையிலும் உடற்பயிற்சிகள்தனியாக அல்ல குடும்பத்துடன்மேற்கொளுகிறார்கள். எந்நேரமும்இயங்கிக் கொண்டு, குழந்தைகளைக்கொஞ்சிக் குலாவி வளர்க்கிறார்கள்.இன்றைய இளைஞர்கள், இவர்களைப்பார்த்துத்தான் ஹாட் பிராண்ட்சட்டைகள்சூ, ஜாக்கெட் போன்றவற்றின்நவீன மோஸ்தர்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்!

நாளதுதேதியில்,சுமார் 2000 கூர்க்காவீரர்கள் சிங்கப்பூரில் பணியாற்றுகிறார்கள்.அவரகளது குடும்ப உறுப்பினர்களியும்கணக்கில் எடுத்துக் கொண்டால்சுமார் 5000 பேர்  Gurkhas campல் இருக்கிறார்கள்.

என்நினைவில் தேக்கி வைத்திருந்த  உம்மென்ற கூர்க்காவை இங்கு  பார்க்க முடியவில்லை. என்னபரோட்டாவை அந்நிய தேசத்துஉணவாக நினைத்துக் கொண்டு என்கடையில் சாப்பிடாததுதான்எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை.

பத்திஎழுதுவதற்கு ஏதாவது விஷயத்தைக்கறக்கலாம் என்றால், நாம் வாயைத்திறந்து கேட்பதற்கு முன்னால்ஓட்டமெடுக்கிறார்கள். இந்நிலையில்நேபாளத்திலிருந்து ஓர் இளைஞர்  கணிப் பொறித் துறையில் வேலைசெய்வதற்காக வந்து ஜீசெங்கில்தங்கினார். மூன்று வேளையும்என் கடையில்தான் சாப்பாடு.எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.கொஞ்ச நாள் கழித்து அவருடன்ஒரு மலாய்க் காரப் பெண் உடன்வந்ததும்தான் எனக்கு விஷயம்புரிந்தது. இருவரும் கலப்புத்திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்கள்.

வயதுவந்த ஆணும் பெண்ணும் கலப்புத்திருமணம் செய்து கொள்ளுவதற்குசிங்கப்பூரில் எந்தவிதச்சமூகத் தடைகளையும் கடக்க வேண்டியதில்லை.நேபாள இளைஞர் தானாகவே முன்வந்து சுன்னத் செய்து கொண்டார்.அவர்களுடைய திருமணத்தின்சிறப்பு விருந்தினர்களில்நானும் ஒருவனானேன். வருகிறஆண்டு காத்மண்டுக்கு என்னைஅழைத்திருக்கிறார்கள்.

சுவாரசியமானவரலாற்றுப் பின்னணியையும்  அவர்கள் நடைமுறை வாழ்க்கைபற்றியும் நேப்பாள இளைஞரிடம்  பல தகவல்களைப் பெற முடிந்தது.

நே’  என்றால் புனிதம் என்றும்  பாள் என்றால் குகை என்றும்  அர்த்தம். இந்த நேபாள் புனிதக் குகையின் மைந்தர்களுக்குக் காவல் உழைப்புத்தான் சொத்து. பல்வேறு தொன்மங்களாலும் நம்பிக்கைகளாலும் புனிதப்படுத்தப்பட்ட விசுவாசத்தை ஆதாரமாகக் கொண்டுதான் தங்களது வாழ்வை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லுகிறார்கள். பாரம்பரியமான பயிற்சி கொண்ட தனித் திறன் பெற்ற தொழிலாளர்கள் என்று உலகமெங்கும் இவர்கள் பெயர் பெற்றுள்ளனர். ஆனால் இவர்கள் பணிபுரியும் எந்த ஒரு நாடும் (சிங்கப்பூர் உள்பட) இவர்களுக்கு நிரந்தர வாச உரிமையையோ குடி உரிமையையோ வழங்குவ தில்லை. சிங்கப்பூரில் 20 வயதிலிருந்து 45 வயது வரை பணிபுரிந்த பிறகு, ஓய்வு அளிக்கப்பட்டு நேப்பாளத்துக்கே அனுப்பி வைக்கப்பட்டு விடுவார்கள். ஓய்வூதியம் மாதா மாதம் நேப்பாளத்துக்கே போய்ச் சேர்ந்து விடும். (2007ல் லண்டனில் கடுமையான சட்டப் போராட்ட்த்துக்குப் பிறகு குடியுரிமை வழங்கப்படுகிறது.)

Gurkha, Gorkha, Ghurkha என்று பலவிதமாக உச்சரிக்கப்படும் கூர்க்கா நேப்பாளத்திலிருக்கும் ஒரு மாவட்டத்தின் பெயர். இவர்கள் கூர்க்கி என்ற கத்தியை வைத்திருப்பதால் காரணப் பெயராக கூர்க்காகஅமைந்தது என்றும் சொல்லுவார்கள்.

 1559ல்  லம்ஜூ ராஜ்ஜிய அரசரின்  மகனாகிய டிராபியா ஷா என்பவரின் வம்சத்தில் வந்த பிரித்வி நாராயண ஷா என்பவர், இனத்தின் அடிப்படையில் தனக்கென ஒரு படையை அமைத்ததுதான் கூர்க்கா படையின் துவக்கம். 1812ல் 12,000 எண்ணிக்கையில் இருந்த கூர்க்கா படையை எதிக்க சுமார் 30,000 ஆங்கிலப் படை வீர்ர்கள் போரிட்டனர். உறுதியான எதிர்ப்பால் Gorkhalis என்று அப்போது அழைக்கப்பட்ட இவர்களிடம் தோற்ற ஆங்கிலப்படைத் தளபதி Federick young, சில காரணங்களால் பிரிந்திருந்த கூர்க்காக்களையே பிரிடிஷ் படையில் சேர்த்துக் கொண்டு போரிட முயன்ற போது, தன் இனத்தையே எதிர்க்கத் துணியாத கூர்க்காக்கள் படை, தளபதி Federick young ஐத் தனியே விட்டு விட்டு ஓட்டமெடுத்தது. சிறைப்பட்ட young கூர்க்காக்களின் வீரத்தையும் ஒற்றுமையையும் பிரிடிஷாரது கவனத்துக்குக் கொண்டு சென்று, கூர்க்காப் படை அணியை உருவாக்கினார்.

கடந்தநூறு ஆண்டுகளாக பிரிடிஷாருக்கும்காலனித்துவ நாடுகளுக்கும்  காவல் பணியில் கூர்க்காக்கள்ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். 1945லிருந்து இந்திய ராணுவத்தில்கூர்க்காப் படை அணி உருவானது.இரண்டு உலகப் போர்களிலும்சுமார் இரண்டு லட்சம் கூர்க்காக்கள்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 43,000 பேர் இறந்திருக்கிறார்கள்.

இவர்களில்குறிப்பிட்ட GURUNGS, MANGORS, RAIS, LIMBI என்ற நான்கு இனக் குழுக்களில்இருந்துதான் காவல் பணிக்குவருகிறார்கள். காத்மண்டுவிலுள்ளபொக்காரோஎன்ற இடத்தில்இருந்து கூர்க்கா இளைஞர்கள்சிங்கப்பூர்ப் பணிக்குத்தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.அது Singapore Tole என்றழைக்கப் படுகிறது.ஆண்டு தோறும் 200 பணியிடங்களுக்கு, 20,000 பேர் வரை போட்டியிடுகிறார்கள்.கடினமான 70 கிலோ கல் நிரம்பியமூட்டையை முதுகில் சுமந்துகொண்டு 40 நிமிடங்களில் மலைப்பாதையில் ஏறி இறங்க வேண்டுமாம்.இங்கு வந்த பிறகு கடுமையானஒரு வருடப் பயிற்சிக்குப்பிறகு பணியில் சேர்கிறார்கள்.சிங்கப்பூரின் இன ஒற்றுமையில்இவர்களின் பங்களிப்புக் குறிப்பிடத்தக்கது.

1950ல்  மலாய்க் குடும்பத்தில்  எட்டு வருடங்களாக வளர்க்கப்பட்ட  மரியா ஹெர்டோக் என்பவரை அவருடைய கத்தோலிக்கப் பெற்றோருடன் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த போது, பெரிய அளவில் கலவரங்கள் வெடித்தன. அதே போல 1964ல் மீலாது விழா ஊர்வலத்தில் நடந்த கலவரத்தில் சுமார் 36 பேர் கொல்லப்பட்டு, 500 பேர் காயமடைந்தனர். சிங்கப்பூரின் தந்தை Mr. லீ குவான்யூ THIRD WORLD TO FIRST WORLD என்ற புத்தகத்தில், மலாய் போலீஸ், சீனர்கள் மீதோ சீன போலீஸ், மலாய்க் காரர்கள் மீதோ துப்பாகிச் சூடு நடத்தும் போது அது வேறு பல பிரச்னைகளையும் சேர்த்துக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது. அந்தச் சமயத்தில் கூர்க்காக்களின் பணி மிகவும் உதவிகரமானது என்கிறார்.

இவர்களின்வீரத்துக்குக் காரணம் ஜெய்மஹா காளி ஆயோ கூர்க்காஎன்றஇவர்களது முழக்கமா அல்லதுஇவர்களிடமிருக்கும் 18 அங்குலக்கூர்க்கிக் கத்தியா என்ற கேள்விக்குஇரண்டும்தான்என்று பதிலளிகிறார்கள்சிலர். இந்த ஆண்டு ஜனவரியில்ராஞ்சியிலிருந்து கோரக்பூர்சென்று கொண்டிருந்த மௌரியாஎக்ஸ்பிரஸில் பயணம் செய்துகொண்டிருந்த பின்னு சேஸ்த்தாதன்னுடைய கூர்க்கிக் கத்தியுடன் 40 பேர்களுடன் போராடி சக பயணிகளையும் 18 வயது மாணவி ஒருவரையும் காப்பாற்றினார்.ஒரு கையால் ஒரு திருடனை மடக்கிப்பிடித்து வைத்துக் கொண்டுசண்டையிட வரும் மற்ற திருடர்களைக்கூர்க்கிக் கத்தியால் தாக்கி, 3 பேரைக் கொன்று, 8 பேரைக் காயப்படுத்தினார்.அவர் போட்ட ஜெய் காளி ஆயோகூர்க்காகோஷத்தால், நிறையக்கூர்க்காக்கள் இருப்பதாகமற்ற திருடர்கள் நினைத்துஓட்டமெடுத்தார்களாம்.

2001ல்  இளவரசர் திபேந்திரா தனது  மணப் பெண் தொடர்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வெறியாட்டம் ஆடியதில் நேப்பாளிகளின் அறம் கொஞ்சம் ஆட்டம் கண்டது.

ஆனால்சமரசம் செய்து கொள்ளாத காவல்  பணியில் சிறந்தவர்கள் என்பதால்உலகின் முக்கியமான தலைவர்களுக்குக்  காவல் பணியில் கூர்க்காக்கள்தான்  அமர்த்தப்படுகிறார்கள். ஆஃப்கானிஸ்தானத்தில்போர்க்களம் கண்ட இளவரசர் ஹாரி, 10 வாரங்கள் கூர்க்கா படைகளுடன்தங்க வைக்கப்பட்டிருந்துதானும் போர் செய்த்தாகக் கூறிக்கொண்டார்.

1971ல்  இந்தியா  பாகிஸ்தான் போரின் வீரத் தளபதி ஃபீல்டு மார்ஷல் மானெக்‌ஷா ஒரு முறை சொன்னார்.

    சாவதற்குப் பயப்பட மாட்டேன் என்ரு யாராவது சொன்னால்

      அதுபொய்யாக  இருக்க வேண்டும்; அல்லது அதைச் சொல்லியவர்

      ஒரு கூர்க்காவாக இருக்க வேண்டும்

மானெக்ஷாஊட்டியில்காலமானபோதுஅரசியல்தலைவர்கள்யாரும்ஈமச்சடங்குகளில்கலந்துகொள்ளவரவில்லை. ஆனால்அவர்விரும்பியகூர்க்காப்பாதுகாப்புப்படைவீர்ர்கடைசிவரைகூடவேஇருந்தார்.

Edhiroli

Posted: திசெம்பர் 14, 2011 in பத்தி

நண்பர் திரு. முகைதீன் ஸதக்கத்துல்லா வசந்தம் தொலைக்காட்சியின் ‘எதிரொலி’ நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆவார். வலைப் பதிவுகள் சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய கருத்துக் களத்தில் பேச என்னை அழைத்திருந்தார். பல்கலைக்கழக மாணவியரும் புகழ் பெற்ற வழக்கறிஞரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இது. என்னைத் தயார்ப் படுத்திக் கொள்ள இணையம் பற்றிய குறிப்புக்களைத் தொகுத்துக் கொண்டேன்.

அமெரிக்காவின் எட்ஜ் ஃபவுண்டேஷன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் அறிஞர்களிடையே முக்கியமான கேள்விகளை எழுப்பி, அவர்களின் கருத்துக்களை வெளியிடுகின்றது. இந்த ஆண்டு 172 பேரிடம் இணையம் பற்றிக் கேட்கப்பட்டது. அதில் கிடைத்த சில சுவையான தகவல்கள் இவை :

மாஸாச்சுசெட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (Massachusetts Institute of TechnologyMIT) குவாண்டம் விஞ்ஞானி சேத் லாயிட், “விக்கி பீடியாவில் வெளியிடப்பட்டுள்ள விஞ்ஞான மேற்கோள்களில் 99.44 சதவீதம் சரியாகவே உள்ளன. மீதம் உள்ள முக்கியமான 0.56 சதவீதத்தைத்தான் தேடிப் பார்க்க வேண்டும். இதற்கு ஒரே வழி நூலகங்களில் குவிந்துள்ள புத்தகங்களில் இருந்து அதிகார பூர்வமானவற்றைத் தேடி எடுப்பதுதான்” என்று தெரிவிக்கிறார்.

 

நமது பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவை புத்தக வெளியீட்டு நிறுவனங்களில், நுட்பமாகப் பிழையின்றித் தகவல்களைச் சரிபார்க்கும் எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களைக் கொண்டு சோதித்த பிறகு விக்கி பீடியாவில் தகவல்களை வெளியிட்டு இருக்க வேண்டும். இதற்கு மாறாக இண்டர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ளவை எல்லாம் மிகக் குறைந்த அளவிலேயே சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளன. இண்டர்நெட்டில் வருடா வருடம் கிடைக்கும் இடங்கள் பல மடங்காக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தப் போக்கு இருக்கும் வரையில், இது மாதிரியான சரிபார்க்கப்படாத தகவல்கள் குறைந்து, இடப் பற்றாக் குறை ஏற்படும் போதுதான், தகவல்கள் சரிபார்க்கப்பட்டுத் தேவையில்லாத விஷயங்கள் நீக்கப்படும் என்று சேத் லாயிட் கருதுகிறார்.

 

அது வரை இண்டர்நெட், தகவல்களால் நிரப்பப்படுவது தவிர்க்க முடியாதது என்று மாஸாச்சுசெட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியைச் சேர்ந்த ஆர்கிடெக்ட் நீரி ஓக்ஸ்மேனும் கருதுகிறார்.

 

இண்டர்நெட்டில் பல்வேறு விஷயங்கள் குறித்து வெளிப்படையான அளவுக்கு அதிகமாகத் தகவல்கள் வெளியிடப் படுகின்றன. இது தகவல் களஞ்சியம்  என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் இது ஒரு விஷயத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து முடிவுக்கு வரும் அறிவுபூர்வமான சிந்தனைகளுக்குத் தடை ஏற்படுத்தும் ஆபத்தாகவும் இருக்கிறது. எனவே தற்போதைய இண்டர்நெட் வடிவம் சிந்தனையைத் தடுத்து, ஆக்க ரீதியான கருத்துக்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று நீரி ஓக்ஸ்மேன் தெரிவித்துள்ளார்.

 

ஹாவர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தத்துவ இயல் அறிஞர் ஜோஷுவா கிரீன், இண்டர்நெட் எந்த வகையிலும் நம்மைப் புத்திசாலிகள் ஆக்காது என்பதை ஏற்றுக் கொள்ளுகிறார். 20ஆம் நூற்றாண்டில், அறிவுத் திறன் அளவெண் (IQ) அதிக அளவு உயர்ந்திருப்பது கண்கூடாக நிரூபணமாகியுள்ளது. இது நமது சிந்தனையை வளர்த்துள்ளது. ஆனால் இண்டர்நெட் எந்த வகையிலும் புதிய தேவைகளின் அடிப்படையை நிறைவேற்றப் போவதில்லை என்று கூறுகிறர்.

 

இதே கருத்தை ஹாவர்ட் பலகலைக் கழகத்தைச் சேர்ந்த மற்றொரு விஞ்ஞானி ஸ்டீவன் பிங்கர் என்பவரும் தெரிவித்துள்ளார். இவர் மேலும் கூறுகையில், இண்டெர்நெட்டைப் பயன்படுத்துவது எந்த வகையிலும் தகவல்களைத் திரட்டுவதற்காக, நமது இயற்கையான நரம்பு மண்டலத்தின் செயல்களை மாற்றப் போவதில்லை. நமது சிந்திக்கும் திறனை இண்டர்நெட் எந்த வகையிலும் மாற்றப் போவதில்லை என்கிறார்.
அறிவுக்கூறு பற்றிய உளவியல் ஆராய்ச்சிகளில் இருந்து இண்டர்நெட்டில் தகவல்களைத் திரட்டுபவர்கள், கருத்துக்களை எழுதுபவர்கள், ஒரே நேரத்தில் பல விதமான புதிய தகவல்களைத் திரட்டி, அவற்றை ஆய்வு செய்யும் திறமையைப் பெற்று இருக்கவில்லை என்று தெரிய வருகின்றது.

 

இண்டர்நெட், தனித் திறன் பெற்றவர் என்பதன் பொருளை மாற்றி விட்டதாக இசை வல்லுநர் ப்ரைன் ஈனோ கருதுகிறார். தற்போது, குறிப்பிட்ட மதிப்பு வாய்ந்த தகவல்களைத் திரட்டும் ஆற்றல் பெற்றவர்கள் மட்டும் தனித் திறன் பெற்றவர்களகக் கருதப்படுகின்றனர் என்கிறார். தற்போது எல்லா விதத் தகவல்களும் எல்லோரும் பெறுவற்தற்கான வசதி உள்ளது. இவற்றில் இருந்து குறிப்பிட்ட தகவல்களை மிக நுட்பமாகத் தேடிக் கண்டு பிடிக்கும் ஆற்றல் பெற்றவர்களே தனித் திறன் உள்ளவர்களாக இருக்கின்றனர் என்று பிரைன் ஈனோ கூறுகிறார்.

 

தற்போது ஒவ்வொருவரும் எல்லா நேரங்களிலும் எல்லா நாட்களிலும் அதிக அளவு படிக்கின்றோம். தகவல்களைக் கேட்கின்றோம். பார்க்கின்றோம். ஈ மெயிலகள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன. உடனடியாகப் பதில் கூறுமாறு வற்புறுத்துகின்றன. இவற்றால் நமது சிந்தனை மழுங்கடிக்கப்படுகின்றது என்று கூறுகிறார் மாஸாச்சுசெட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி சேர்ந்த பிரபஞ்ச இயல் ஆய்வாளர் மேக்ஸ் டெக்மார்க்.

 

இவற்றையெல்லாம் விக்கிலீக்ஸ் இணைய தளத்தை இணைந்து உருவாக்கியவரான லாரி சாங்கர் மறுக்கிறார். அவர் கூறும் போது, நாம் எதைத் தேர்ந்தெடுக்க வெண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். நாம் இண்டர்நெட்டைப் பயனுள்ளதாக உபயோகிக்கும்போது, பலர் ஒன்றிணைந்து பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம். உதாரணமாக விக்கிலீக்ஸ் மற்றும் பிளாக்குகளைப் பயன்படுத்திப் பல்வேறு இடங்களில் உள்ள கணிதவியலாளர்கள், சமீபத்தில் ஹேல்ஸ், ஜீவெட் குறித்துப் புதிதாக நேர்த்தியான சூத்திரத்தை 37 நாட்களில் உருவாக்கியுள்ளனர். இதைத் தனித் தனியாகச் செய்திருந்தால் பல வருடங்கள் ஆகியிருக்கும் என்று கூறியுள்ளார்.

 

யேல் பலகலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் நிபுணர் பால் ப்ளூம் கூறுகையில் விக்கிபீடியா, அமேஸான், ட்ரிப் அட்வைசர் போன்ற இணைய தளங்களில் எவ்வித ஊதியம் இல்லாமல், அடையாளம் தெரியாத பலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். இவர்கள் மற்றவர்களின் நலனுக்காகத் தெரிவிக்கும் கருத்துக்கள், மற்ற யாருக்காவது பயன்படலாம். இது சிறப்பாக இருக்கின்றது என்று பாராட்டுகின்றார்.

 

ஹார்வார்ட் மருத்துவரும் சமூகவியல் நிபுணருமான நிகோலஸ் கிரிஸ்டகிஸ், இண்டர்நெட்டைப் பயன்படுத்தித் தொடர்புகளை விரிவடையச் செய்ய வேண்டும் என்று நினைப்பதால், அறிவு விசாலப்படுகின்றது. இருப்பினும், குறிப்பிட்டுள்ள அளவுதான் மனிதனால் நினைவில் வைத்துக் கொள்ள முடியும். ரோமானியப் படையின் ஒரு பிரிவில் 120 முதல் 130 பேர் வரைதான் இருப்பார்கள். இதே மாதிரி தற்போது ராணுவ வீரர்கள் அடங்கிய பிரிவு, கம்பெனி என்று அழைக்கப்படுகின்றது.

 

இதே போலத்தான் சமூகத் தொடர்புகளும் குறிப்பிட்ட அளவிலேயே இருக்கும். இதை இண்டர்நெட்டால் மாற்றி விட முடியாது. நாம் எவை எல்லாம் உண்மை என்று அறிவோம். இண்டர்நெட் வாயிலாகக் கிடைக்கும் எல்லா நண்பர்களும் உண்மையான நண்பர்கள் அல்ல என்றும் அவர் கருதுகிறார்.

 

அதே நேரத்தில் நாம் இண்டர்நெட்டைப் பயன்படுத்துவதால், அதற்கு உரிய விலை கொடுக்க வேண்டியதிருக்கும் என்கின்றார் மாஸாச்சுசெட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியைச் சேர்ந்த சமூகவியல் அறிஞர் ஷெர்ரி டர்கில். இன்றைய இளம் தலைமுறையினர், தங்களைப் பற்றிய சொந்தத் தகவல்கள் என்றாவது ஒரு நாள் விதிகளுக்குப் புறம்பாக மற்றவர்களால் பயன்படுத்தப்படும் என்பதை அறிந்தே இண்டர்நெட்டைப் பயன்படுத்துவதால், சிறிது இழப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தே உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

 

இவ்வளவு விஷயங்களையும் தேடிப் படித்து மீட்டிங்கிற்குச் சரியான நேரத்துக்குச் சென்று விட்டேன். இதில் இரண்டு விஷயங்களைத்தான் என்னால் அங்கு பேச முடிந்தது. பல்கலைக் கழக மானவிகள் தெளிவாகவும் எதிர்பார்க்காத கோணங்களிலும் விஷயங்களை முன் வைத்தார்கள். இண்டர்நெட்டில் தங்களைப் பற்றிய சொந்தத் தகவல்கள் என்றாவது ஒரு நாள் விதிகளுக்குப் புறம்பாக மற்றவர்களால் பயன்படுத்தப்படும் என்பதை மாணவிகள் ஒத்துக் கொண்டனர்.

 

இந்த இளம் தலைமுறையினர் மற்றவர்களிடம் உண்மையிலேயே அந்தரங்கமாகப் பேச வேண்டும் எனில் பொதுத் தொலைபேசியை நாடுகின்றனர்.

 

“நாம் இண்டர்நெட்டைப் பயன்படுத்தும் சமயத்தில் நமது சொந்த வாழ்க்கையைப் பாதிக்காத அளவு உபயோகமான வழியில் இண்டர்நெட்டை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமில்லையா? என்ற கேள்வியுடன் எனது பேச்சை முடித்தேன்.

 

நண்பர் ஸதக்கத்துல்லாவின் தமிழ் உச்சரிப்பு மிகவும் ரம்மியமாக இருக்கும். அந்நிகழ்வில் அவர்தான் கேள்விகளைத் தொடுப்பார் என்று நினைத்திருந்தேன். அவர் பின்னால் நின்று இயக்கிக் கொண்டிருந்தார்.

 

நிகழ்ச்சி திங்கள் கிழமை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பானது . மறுஒளிபரப்பு வியாழன் 15-12-2011 இரவு 11 மணிக்கு இடம்பெறும்.

சிங்கப்பூர் கிளிஷே

Posted: திசெம்பர் 5, 2011 in பத்தி

உலகில் 200 சதுர கிலோமீட்டருக்கும் குறைவான பரப்பளவுள்ள நாடுகள் மொத்தம் 17. இதில் கொஞ்சம் அதிகமாக 246 சதுர கிலோமீட்டர் பரப்புள்ளது சிங்கப்பூர்.

சென்ற வாரம் நடைபெற்ற G 20 மாநாட்டில் ஆசிய ஜாம்பவான்களான சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தோனேஷியா, இந்தியா ஆகிய நாடுகளோடு சரி சமமாக உட்கார்ந்து பேசச் சிறப்பு அழைப்பு இரண்டாவது தடவை சிங்கப்பூருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

 ‘அல்லாம்மா பவர் லா’ என்று ஆரம்பித்து உலக விஷயங்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டு, சுமார் ஐந்து வருடங்களாக என்னுடன் உரையாடிக் கொண்டிருக்கும் மலாய் நண்பர் ஹாலித் இன்னும் இரண்டு வாரங்களுக்கு வேலைக்குப் போக மாட்டார். அது ஒன்றுதான் அவருக்குப் பிரச்னை. 15 நாட்கள் தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் அவர் வேலை செய்வது மிகவும் அரிது. கோப்பியும் நியூஸ் பேப்பருமாக அவரைப் பார்த்துக்குபோது உலக விஷயங்களை ஓர் அலசு அலசிவிட்டுத்தான் அவர் ஓய்வார்.

கொஞ்ச நாட்களாக, “வேலைக்குப் போக வில்லையா?” என்று அவரைக் கேட்ப்பதை நான் குறைத்துக் கொண்டேன். ஒரு நாள் சொன்னார்: “நவாஸ்! கிழக்கிலிருந்து மேற்காகக் கோடு கிழித்துப் பார்த்தால் சிங்கப்பூர் மொத்தம் 41.8 கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. ஒரு மாரத்தான் ஓட்ட தூரம் 4000 மீட்டர். அத்தனை இடங்களையும் ஒரு காலத்தில் சைக்கிளிலேயே சுற்றியவன் நான். கடுமையான வேலைகளை ‘சின்னாங்கா’ செய்து பேர் வாங்கியிருக்கிறேன். இதையே ‘துருஸ்’ஸா செய்ய முடியுமா? மனிதனுக்கு ஓய்வு வேண்டாமா? சுறுசுறுப்பு வாழ்க்கைக்கு வேண்டியதுதான். அதையே வாழ்க்கையாகத் தூக்கிக் கொண்டு அலையக் கூடாது. இயற்கையின் படைப்பைக் கொஞ்ச நேரம் பரபரப்பில்லாமல் ரசிக்க வேண்டும்”

இந்தப் பேச்சைக் கேட்டதிலில் இருந்து அவர் சொல்லுவதை மட்டும் மட்டும் கேட்டுக்கொள்ளுவது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

அவருடைய தரப்பை நிரூபிப்பதில் படு கில்லாடி. மலாய் மொழியைத் தப்புத் தப்பாகப் பேசி அவர் மூலம் அவைகளைத் திருத்திக் கொண்ட நிகழ்ச்சிகள் ஏராளம். ஆரம்பத்தில் தோட்டக் கலை வேலையில் அவர் இருந்திருக்கிறார். எதைப் பற்றிப் பேசினாலும் மரம், செடி, கொடி என்று முடிப்பார். சிங்கப்பூரில் உள்ள பல இடங்களும் மரம் செடி கொடிகளின் பெயரில்தான் உள்ளன என்பது அவரது வாதம்.

உதாரணங்கள்  சிலவற்றைச் சொன்னார்.

கம்போங் கிளாம் (Kampoong Glam) : கம்போங் என்றால் கிராமம். க்ளாம் என்றால் யூகலிப்டஸ் மரங்கள் அடர்ந்த பகுதி. Tek kah (தேக்கா) என்றால் சீன மொழியில் மூங்கில். அதே போல Changi சாங்கி chengai என்ற உயரமான மரத்தின் பெயர் என்றார். அவருக்கு ஆர்வத்தைத் தூண்டினால் இன்னும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும் என்ற ஆவலில் Bukit Batok பற்றி விக்கிபீடியாவில் கிடைத்த விபரங்களைத் தெரிந்து கொண்டு, முக்கியமான மலைப் பிரதேசமான Bukit Batokக்கு சிரிக்கும் மலை என்ற பெயர் உள்ளதன் காரணத்தைத் தேடினேன். கிரானைட் கற்களை வெடி வைத்துத் தகர்ப்பதை அப்பகுதி மக்கள் ‘மலை சிரிக்கிறது’ என்றிருக்கிறார்கள்.

 

அடுத்து ‘புக்கிட்’ என்றால் மலாய் மொழியில் மலை என்று அர்த்தம்.  பேடாக் என்றால் வழுக்கைத் தலை. அதுவும் ஒரு காரணப் பெயர்.

சீன மொழியில் Batok என்றால் கடினமான கல் என்கிறார்கள்.

மலாயில் Batok என்பதற்கு இருமல் என்றும் ஒரு அர்த்தம் இருக்கிறது. மலைப் பகுதியில் குளிர் காற்றால் மக்கள் அடிக்கடி இருமியதால் அப்படிப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். ’அதெல்லாம் இல்லை! ஆங்கிலேயர் மலியின் தோற்றம், பின்புறங்களின் பின்புறங்களி ஒத்திருக்கிறது என்பதால், Buttocks என்று அவர்கள் வைத்த பெயர் மருவி, batock என்று ஆகி விட்டது’ என்றும் சிலர் சொல்லுகிறார்கள். முடிவாக காரணப் பெயர்கள்தான் அதிகமாக இருக்கின்றன என்றேன்.

அவர் இதையெல்லாம் ‘பொருந்தாக் காரணங்கள்’ என்று சொல்லி விட்டார். Batock என்றால் ஜவானீஸ் மொழியில் தென்னை மரம் என்று பெயர். தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்ததால் Bukit Batock பெயர் வந்தது என்று முடித்தார்.

மாம்பழத்துக்கு,

மலாயில் Manggo – Mampalam

சீனத்தில் Manggul – Minga

ஜப்பானில் –Mangos

கொரியாவில் – Mango

ஆங்கிலத்தில் – Mango

போர்ச்சுகீசியத்தில் – Manga

ஃபிரான்ஸில் – Mangue

என்று தமிழ்ப் பெயரிலேயே பெரும்பாலான மொழிகளில் மாம்பழம் அழைக்கப்படுவது பல பேருக்குத் தெரியாத செய்தியாகும். சிங்கப்பூரில் மா மரங்கள் சாலையோரங்களில் நடுகிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டி, மா, பலா, ரம்புத்தான் பழ மரங்கள் ஏராளமாக இருப்பதாகப் பல இடங்களைப் பட்டியலிட்டார் அபாங் ஹாலிக்.

Chempedock என்றொரு பழ மரம் சாலையோரங்களில் பார்த்திருப்போம். அது ஏதோ பலாப் பழ வகை என்று வாங்கிச் சாப்பிட்டால் அதில் டுரியான் ருசி இருந்தது.

அதே போல Rambuthan பழம் மாதிரி, அதில் உள்ள முடிகள் இல்லாமல் இருக்கும் பழ மரங்களைப் பார்த்திருப்பீர்கள்.  ஆனால் ருசியில் Rambuthan மாதிரி இருக்காது. அது Bush pulasan.

அதே போல Chick பழம். இது சப்போட்டாவின் தம்பி.

 

இவையெல்லாம் எனக்குத் தெரிந்த ரொம்ப வித்தியாசமான பழ வகை மரங்கள்.  சிலர் இன்னும் அறிந்திருக்கலாம். ஆனால் கடையில் வாங்கப் போகும் போது, சரியாகப் பெயரைச் சொல்லத் தெரியாமல் நழுவி விடும் அன்பர்களுக்காகத்தான் இதை எழுதுகிறேன்.

அப்படி முடியாவிட்டால் ஐஃபோனில் நாசூக்காக்க் ‘கிளிக்’ செய்து வீட்டுக்குக் கொண்டு வந்து விக்கிபீடியாவில் அலசி சரியான ‘மலாய் உச்சரிப்புடன்’ பழம் வாங்கப் பழகிக் கொள்ளலாம்.

ஆரம்பத்தில் இப்படியெல்லாம் செயல்படுவதற்கு IQ (Intelligence Quotient)  தேவை. அதற்குப் பிறகு EQ (Emotional Quotient) இருந்தால் போதுமானது என்றானது. இப்போது (Digital Quotient) இல்லாமல் எதுவும் நடக்காது. அபாங் ஹாலித் சொல்வது மாதிரி காலியாகக் கிடக்கும் இடங்களில் புல் வளர்ப்பதற்குப் பதிலாகக் காய்கறி பயிரிட்டால் தேக்காவில் இத்தனை கடைகள் தேவையிருக்காது. இது சிங்கப்பூரில் உண்மையிலேயே செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. அவர் சொல்வது போல் அல்லாமல் HDB புளோக்குகளின் மொட்டை மாடிகளில் உணவுப் பொருட்களின் பாதுகாப்புக்கு உலக அளவில் வழிகாட்டக் கூடிய ஆராய்ச்சிகளின் மையமாக  Tenasek Life Science Lab செயல்பட்டு வருகிறது. அங்குதான் International Research Institute இயங்கி வருகின்றது. தட்ப வெப்ப நிலைகளைத் தாக்குப்பிடிக்கக் கூடிய அரிசி வித்துக்களைக் கண்டு பிடிக்கும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

கீழேயே பார்த்துக் கொண்டிருக்காமல் கொஞ்சம் ஆகாயத்தையும் பார்க்க வேண்டும் என்ற தத்துவம் ஒரு மின்னல் யோசனையாகி, இப்போது HDB புளோக்குகளில் Roof Top Farming முறையில் உணவு தானியங்களைப் பயிரிடும் செயல்பாடு வர இருக்கிறது. இதில் இரண்டு விதமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

Aero ponics
தண்ணீர் மற்றும் மண் இல்லாமல் காற்றில் வளரும் தாவர வளர்ப்பு

Aqua ponics
தேக்காவில் வெட்டி வீசப்படும் மீன் கழிவுகள் போன்றவற்றைச் சேகரித்துப் பயிர் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது.
முட்டை, கீரை மற்றும் மீன் ஆகியவற்றில் சிங்கப்பூரின் தேவைக்குப் போக மீதி உள்ளனவற்றை ஏற்றுமதி செய்வது என்ற குறிக்கோளுடன் காரியங்கள் வேகமாக நடக்கின்றன.

1965ல் சிங்கப்பூரின் தண்ணீத் தேவைக்காக முழுக்க முழுக்க மலேஷியாவை நம்பியிருந்த நிலையில் இருந்து மாறி, தற்போது 40 சதவீதத் தேவைக்கு மட்டுமே மலேஷியாவின் தண்ணீரை எதிர்நோக்கும் இந்த நிலையை யாராவது எதிர்பார்த்தோமா?

காய்கறி ஏற்றுமதி வெகு தூரத்தில் இல்லை!

 

அழைப்பது
பாண்டித்துரை + 65 82377006
ஷாநவாஸ் + 65 82858065
பூங்குன்ற பாண்டியன் +65 83602341

 

எல்லோருமே
பிள்ளையார் ஆகிவிட்டோம்
உலகமே எலி வாகனத்தில் பயணிக்கிறது
சிவ பார்வதியைச் சுற்றிய
பிள்ளையாராக
வாமண வாரிசுகள்
ஒரடிப் பெட்டிக்குள்
உலகைச் சுற்றுகிறார்கள்
கால்களைக் கழற்றிவிட்டு
கைவிரல்களால்
ஊழித் தாண்டவம் ஆடுகிறோம்
அரூபச் சிலந்தி வலையை
எலியாய்ப் பிறாண்டிப்
பிராண்டி
பிரபஞ்சம் தாண்டிதேடுகிறோம்
எலிக்கு மனித வாகனம்
இருபத்தொன்றில் வாழ்க எலி சாம்ராஜ்யம்
எலிமயமான எதிர்காலம்

இப்போது நான்காம் தலைமுறை மொபைல் வலையமைப்புத் தொழில்நுட்ப சேவை சிங்கப்பூரில் அறிமுகம் கண்டுவிட்டது. ஒரு விநாடிக்கு 75 மெகாபைட் தரவிறக்க வேகத்திலும் 37.5 தரவேற்ற வேகத்திலும் இனி எகிரலாம்.

வலைத்தளத்தில் எத்தனை கனமான விஷயங்கள் உள்ளன. எத்தனை ஆர்வமூட்டும் விஷயங்கள் உள்ளன. அரசியல், சினிமா, இலக்கியம், ஆன்மீகம், சமூக ஆராய்ச்சிகள், விவாதங்கள் இப்படி. ஆனால், இவற்றையெல்லாம் விட்டு விட்டுக் கோழிச் சண்டை பார்க்கும் குதூகலம்தான் தூக்கலாக இருக்கிறது. கருத்துகள், விழுமியங்களைப் பற்றிக் கவலைகள் எதுவுமில்லை. மாறி மாறி கமெண்ட்ஸ் கொடுத்துக் கொண்டிருப்பது. சீக்கிரமே முடிவுக்கு வந்துவிடும் என்று பெர்டினாட் ரஸ்ஸல் சொன்ன தத்துவத்தை மேற்கோள்காட்டி ஓர் இணையப் பட்சி சொல்கிறது. 1001 gadgets, gizmes, Duds, game consoles, computers, mobile phones, MP3, electronic book reader இவற்றை வைத்துக் கொண்டு நாம் வெறுமனே இருப்பதை வேண்டுமானால் குறைத்துக் கொள்ளலாம். ஆனால், அந்த வெற்றிடம் மறையவே மறையாது. இன்னும் அதிகமாக அதைப் பற்றிய கவலைகள்தான் மிஞ்சும் என்கிறார்கள். இதையெல்லாம் மிஞ்சும் ஒரு நண்பர் ஐ போனில் தினமும் கைரேகை, ஜாதகம், கிளிஷோசியம் என்று அறிவியல் ரீதியில் அஸ்திவாரமில்லாமல் போன விஷயங்களை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் தேடிக் கொண்டிருப்பார். அது கூட பரவாயில்லை. இணையத்தில் cizy cot, Netizenபார்த்துவிட்டு online consultants மூலம் முகவரி வாங்கி வாட்டர்லூ ஸ்தீரிட் போக ஆரம்பித்தார். அங்கு Classic fengsuiல் அரைமணி நேரத்திற்கு மூன்று வெள்ளியில் நடந்தது நடக்கப் போவது என்று அனைத்தையும் சொல்லிவிடுகிறார்கள் என்கிறார். சிலருக்கு வருடத்தில் பாதி நாட்கள் வருங்காலத்தை கணிப்பதிலும் மீதி தூக்கத்திலும் கழிந்துவிடுகின்றன.

பொதுவாக 30 வயதுக்குள் இருக்கும் நபர்கள்தான் அதிகமாக ஜோஸ்யம் பார்ப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் முக்கியமாக வருங்காலம், காதல் இரண்டிலும் செல்ல வேண்டிய பாதை ஒரு புள்ளியில் அவர்களைத் திகைக்க வைத்துவிடுவதும், உலகில் திடீர் திடீரென்று நடக்கும் எதிர்பாராத சம்பவங்களும் அவர்களை ஜோஸ்யம் பார்க்கத் தூண்டுவதாகச் சொல்கிறார்கள்.

அருணகிரிநாதர் ‘‘நாள் என்ன செய்யும், வினைதான் என்ன செய்யும் என்னை நாடி வந்த கோல் என்ன செய்யும்’’ என்று பாடிய பாட்டுத்தான் எனக்கு அந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது.

மெரினா பே சென்ஸ், சந்தோஷா, பேர்ட் பார்க் என்று இணையத்தில் தேடித் தேடி இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஊருக்குக் கிளம்பும்போது ஒரு நண்பர் கேட்டார். இங்குக் குரங்குக் குட்டியை கிடுக்கிப் பிடி போட்டு உயிரோடு கட்டி வைத்துத் தலையை மட்டும் இளநீர் மாதிரி சீவி வைத்துக்கொண்டு மூளையை மட்டும் உறிஞ்சும் இடம் கிளார்க் தீயில் இருக்கிறதாமே அங்குப் போவோமா என்றார். இங்கு அப்படியெல்லாம் விருந்து ஒன்றுமில்லை. குரங்கோடு வேண்டுமானால் உட்கார்ந்து போட்டோ எடுத்து விலங்குப் பண்ணையில் விருந்து சாப்பிடலாம். நைட் சஃபாரி சென்று வாருங்கள் என்றேன்.சைனா, தைவான், ஹாங்காங், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் Rhino கொம்பு, Tiger penis, Deer penis, pig Brains குரங்கு மூளை என்று சாப்பிடும் பழக்கத்தை வலைத்தளத்தில் பார்த்துவிட்டு அந்த நாட்டவர்களெல்லாம் இங்கிருப்பதால் சிங்கப்பூரிலும் அவை கிடைக்கும் என்று அவருக்கு நினைப்பு.

ஆப்பிரிக்கர்கள் கொரில்லாவைச் சாப்பிடுவார்கள். மலேசியா, இந்தோஷேனியாவில் ஒராங் உட்டான் சாப்பிடுவார்கள். இவையெல்லாம் நான் கேள்விப்பட்டதுதான். சீனாவில் பல இடங்களில் தெருக்களில் நாய்க்குட்டிகளை உயிரோடு சுடுநீரில் போட்டுக் கொதிக்க வைப்பதை இணையத்தில் வெளியிட்டு உணர்வுகளைக் கொதிக்க வைத்துவிட்டார்கள். 2003ல் சிங்கப்பூரில் சார்ஸ் நோய் பரவியதற்குக் காரணம் சீனாவில் Guangdong மாநிலத்திலிருந்து ஹாங்காங்கிற்கு வந்த விமானத்தின் வழி ஒரு விமானப் பணிப்பெண் மூலம் சிங்கப்பூரை வந்தடைந்தது என்று சொல்வார்கள். அப்போது பூனை, நாய்களைக் கொல்வதை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் காலக்கட்டத்தில் சுமார் 6 மில்லியன் வெள்ளி (culling bill) செலவழிக்கப்பட்டது. இப்போது பூனைகளைக் கொல்லாதீர்கள் இயக்கம் இணையம் மூலமே ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதலில் Chong pong தொகுதியில் பூனைகளைக் கொல்லாமல் இனவிருத்திக் கட்டுப்பாடு செய்யும் ஏற்பாடு வெளியுறவுத் துறை மற்றும் சட்ட அமைச்சர் திரு சண்முகம் அவர்களால் இம்மாதம் தொடங்கப்பட்டது. சென்ற மாதம் ஜீரோங் ஈஸ்ட்டில் ‘‘நாய்கறி விற்கப்படும்’’ என்று விளம்பரப் பலகையில் ‘song Aua Jiang” உணவுக் கடையில் விளம்பரம் செய்து தர யாரோ ஒரு புண்ணியவான் முகப்பக்கத்தில் அப்லோட் செய்துவிட்டார்.

அதெல்லாம் ஒன்றுமில்லை ஒரு விளம்பரத்திற்காக அப்படிச் செய்துவிட்டேன். ‘‘சீனத்தில்’’ saigourouஎன்றார் அதன் உரிமையாளர்.AVA அப்படியென்றால் அது என்ன கறி என்று சோதிக்க பரிசோதனைக் கூட்டம் சென்றது உரிமையாளர் அபராதம் 10 ஆயிரம் வெள்ளி 12 மாதங்கள் சிறையிலிருந்து தப்பினார். அது வெறும் பன்றிக் கறி என்று தெரியவந்தது. முகப்பக்கதில் ‘‘அது என்ன வெறும் பன்றிக் கறி’’ நாயை விட நாம் என்ன மட்டமா என்று பன்றி ஃபீல் பண்ணுவதை யாருமே கண்டு கொள்ளவில்லை என்று Comments வந்தது.

மிருகங்களுக்குப் பசி எடுக்கும்போது நம்மைக் குதறுவது இயற்கை. ஆனால் நாம் ஏன் அதைக் குதறவேண்டும் என்று 1800களில் மிருக வதைத் தடுப்புச் சட்டம்  கொண்டுவருவதற்கு‘‘Mr uptonsinclair” எழுதிய The Jungle என்ற நாவல்தான் தூண்டுகோலாக அமைந்தது. ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் நடக்கும் மிருக வதைகளை Meet your meat.com ல் பாருங்கள். அமெரிக்காவில் நாய்களைக் கொல்லக்கூடாது என்று சட்டமிருக்கிறது. ஆனால், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் நாய் உணவுகள் சீனாவில் நாய்களைக் கொல்கின்றன என்கிறார்கள்.

முகப்பக்கத்தை உருவாக்கிய Mark Zuckerburg அசைவ உணவைக் குறைத்துக் கொள்வதற்கு ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறேன். அசைவ உணவு சாப்பிட வேண்டுமெனில் என் கையாலேயே அதைக் கொல்லவேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதாக Face bookல் வெளியிட்டார். அத்துடன் முதன்முதலில் ஒரு லாப்ஸ்டரைச் சுடு தண்ணீரில் அமுக்கிக் கொன்று சாப்பிட்டதாச் சொல்ல Face bookல்  கமென்ட்ங்கள் இப்படியே சொல்ல ஆரம்பித்தால், தினமும் எதையாவது கொல்ல வேண்டும் என்று ஆசை வந்துவிடும் என்றது. எனக்கும் ஒரு Comments போடவேண்டும் என்று ஆசைவந்தது. கொல்வதற்கு முன்பு கொஞ்சம் அவற்றோடு பழகி அதற்குப் பிறகு நாம் அவைகளை சாப்பிட நினைப்பது அவற்றுக்குச் சம்மதம்தானா என்று ஒருவருக்கொருவர் ஒரு தீர்மானத்திற்கு வந்த பிறகு கொல்லலாம். அதாவது ‘‘பழகிக் கொல்லலாம்’’. ஆனால், நான் Comments போடவில்லை. 

‘‘மிருகங்கள்தான் மிருகங்களைக் கொல்கின்றன. ஏனெனில், அவற்றிற்கு வேறு வழியில்லை. நமக்கு ஏகப்பட்ட மாற்று வழிகள் உள்ளன’’ comments I like it. போனவாரம் Face book ஒரு சுவரஸ்யம். 23 வயது Mr Joel Ling எம் ஆர்டியில் ரிசர்வ்டு சீட்டில் 63 வயது Josanwangஎன்பவருக்க் இடம் கொடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்ததை பேஸ் புக்கில் Josonபடம் போட்டுவிட்டார். ஒரே நேரத்தில் 400 comments Joel ling மன்னிப்புக் கேட்டார். மருந்து சாப்பிட்டுவிட்டு இரயிலில் ஏறிவிட்டேன். மயக்கமாக இருந்தது. அப்படி நடக்கும் ஆள் நான் இல்லை என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். எனக்குச் சில வருடங்களுக்கு முன்னால் அமரர் Sujathaசிலாகித்த ஹைக்கூ ஞாபகம் வருகின்றது. என்னருகில் அமர்ந்திருப்பவர் எழுந்திருக்கிறவராய்த் தெரியவில்லை . கர்ப்பிணி நிற்கிறாள்.

டெய்ல் பீஸ்

சிங்கப்பூரில் ‘இரகசிய விருந்து’ என்ற தலைப்பில் ஒரு செய்தி இணையத்தில் படித்திருப்பீர்கள். அது ஜப்பானில் பின்பற்றப்படும் ‘‘nyotaimori” சூஸிக் கஞ்சியை நிர்வாணமாகப் படுத்திருக்கும் பெண் மீது வைத்து சாப்பிடும் முறை.

அதில் உணவு சாப்பிடுவதின் ஆனந்த நிலை ஏற்படுவதாக Dr Kcra (NUS) சொல்கிறார். சிங்கப்பூரில் இது இருப்பது இது நாள் வரை தெரியவில்லை. தெரிந்தாலும் நாம் பார்க்கமுடியாது. ஏனெனில் அது private.

what ought to be public and what ought to be private.

thanks:http://thangameen.com/ContentDetails.aspx?tid=396

 

 

 

 

 

 

மலேசியாவில் ‘‘Obedient wives club” தொடங்கப்பட்டிருக்கும் செய்தி பலரைப் போலவே எனக்கும் வியப்பளித்தது. சென்றவாரம் சிங்கப்பூரிலும் அதன் கிளை தொடங்கப்படும் என்று டாக்டர் Dalan zaini  என்பவர் ஹமிதா, அஜிமின் இருவருடன் பேட்டி அளித்திருந்தார். கீழ்படியும் மனைவிகள் சங்கத்தின் முக்கிய கொள்கைப் பிரகடனம், சமுதாயத்தின் ஒட்டுமொத்த சீரழிவுக்கு முழுமுதற்காரணம். பெண்கள் தங்களது கணவன்மார்களிடம் பணிவாக நடந்து கொள்ளாதது, குடும்பத்தில் கணவனிடம் முதல் தர விபச்சாரியாக மனைவிகள் நடந்துகொண்டால் சமூகத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரலாம் என்பதைப் பேட்டி காணும் அனைத்துப் பத்திரிகைகளிலும், ரேடியோ, தொலைக்காட்சி நேர்காணல்களிலும் தொடர்ந்து சொன்னார்கள்.

1968ல் அஸாரி முஹம்மது என்பவர் தினமும் தான் இறைத்தூதர் நபிகளைச் சந்திப்பதாகவும் இமாம் மஹதி விரைவில் தன் மறைவிடத்திலிருந்து தோன்றி உலகில் மறுமலர்ச்சியைக் கொண்டு வரப்போவதாகவும் பெண்கள் தங்களுடைய பணிவிடையை மேன்மைப்படுத்தி இஸ்லாமிய சமுதாயத்தை உயர்த்தவேண்டும் என்றும் ஆண்களிடம் மஹர் பெறுவதின் மூலம் பெண்களின் உரிமை முழுவதும் ஆண்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். அதை மீறினால் mushuz (Rebellion)  மலக்குகளின் கோபப்பார்வை குடும்பத்தைத் தாக்கும் என்றும் பிரகடனப்படுத்தி 1980&90களில் மலேசியாவில் சுமார் 10 ஆயிரம் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். 2009ல் இவரது மனைவிகளில் ஒருவர் பலதாரம் புரிவோர் (Poly gamy club)சங்கத்தை ஏற்படுத்தினார். சென்றவருடம் தனது 73வது வயதில் இவர் இறக்கும்போது பல மனைவிகள், 40 குழந்தைகள் 200 பேரக் குழந்தைகள் இருந்தனர், அத்தோடு அவருக்கு 300 மில்லியன் சொத்தும் இருந்ததாம். இவர் சிங்கப்பூருக்குள் நுழைய தடை இருந்தது. 28 மில்லியன் மலாய் மக்களின் இந்த Gobel Ikhwan அமைப்பின் உதவி தலைவி ரொஹையா கீழ்படியும் மனைவிகள் உலக நன்மையைக் கையிலெடுக்கிறார்கள். விவாகரத்து, குடும்ப வன்முறை, விபச்சாரம் என்ற பேச்சுக்கே இனிமேல் இடமிருக்காது என்றும் கணவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற வகுப்புக்களை மலேசியாவெங்கும் ஆரம்பிக்கவிருப்பதாகவும் சொல்கிறார். சிங்கப்பூரில் கிளை ஆரம்பிக்கவிருக்கும் டாக்டர் Darlan கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடப்பது இலதா Ibadah (Blessed derd in Islam) என்கிறார். கணவன் விரும்பினால் மனைவி உடலுறவை மறுக்கக்கூடாது. அது அவர்களுடைய உரிமை அல்ல என்றும் கூறுகிறார். கோலாலம்பூரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த சங்கம் ஜோர்டான், இந்தோனேஷியாவிலும் கிளை பரப்பியுள்ளது.

சிங்கப்பூரில் அதிகாரபூர்வமான முயிஸ் அமைப்பு ஒட்டுமொத்தமாக இவர்களின் வியாக்கியானங்களை மறுத்து இது இஸ்லாத்திற்கு எதிரான செயல் என்று அறிவித்துள்ளது

உடனே Dr. Darlan  “நாங்கள் வேண்டுமானால் கீழ்படியும் மனைவிகள் என்றிருப்பதை ‘‘மகிழ்ச்சியான குடும்பத்திற்கான வழி’’ என்று பெயர் மாற்றிக் கொள்கிறோம்” என்கிறார்.

நல்ல சமையல்காரி, நல்ல தாய், கீழ்படியும் மனைவி என்று கோஷத்தை முன் வைக்கும் இவர்களது பழமைவாதம் குறித்த விஷயங்களை அல்லாமா இக்பால் பல கவிதைகளில் விளக்கமாகவும் அழுத்தமாகவும் வடித்துள்ளார். சமூக நடவடிக்கையில் இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம வாய்ப்புக்களை வழங்குகிறது. பெண்மைக்கு அளிக்கும் பெருமையே சமுதாய வளர்ச்சிக்குத் தூண்டுதல் என்றார்.

‘அஸ்ரால் ஒராமுல்’ கவிதைப் படைப்பில்

ஆணின் நிர்வாணத்தை

ஆடையாய் மறைப்பவள் பெண்

அழகிய இதயத்துக்கான ஆடையை

அன்பினால் தருபவன் ஆண் என்கிறார்.

அவர் சமயம் சாராத கோட்பாடுகளை இஸ்லாமியத்துடன் ஒப்பீடு செய்வதிலும், இஸ்லாத்திற்கு இசைவாக அவற்றை எடுத்துச் செல்வதிலும், இஸ்லாத்திற்கு இசைவாக அவற்றை எடுத்து செல்வதிலும் முன்னேற்றமான எண்ணங்களின் வளர்ச்சிக்குத் தூண்டுதலாக இருந்தவர்.

OWC அமைப்பு தெரிவித்திருக்கும், தவ்ஹீத் மஹர், முஸ்குஸ் போன்ற சொற்களுக்குச் சரியான விளக்கம் பெற எண்ணி இமாம் ரஹ்மான் என்ற ஓய்வுபெற்ற பேராசிரியர் தற்போது பகுதி நேரமாக மதரஸாக்களில் சமயப் பாடங்கள் நடத்தி வருகிறார். சனி, ஞாயிறு தவிர அவரைச் சந்திக்கமுடியாது. இந்த நாட்களில் எங்கும் கடையை விட்டு நகரமுடியாது.

சென்றவாரம் அவரிடம் இந்த அமைப்பு பற்றி விளக்கம் கேட்டு தொடர்ந்து தொலைபேசி தொடர்பு கொண்டேன். அவர் இஸ்லாமியப் பெண் எழுத்தாளர் Kecia Aliயின் ‘‘Marriage and Slavery in early Islam” அல்லது தாலித் அபு எழுதிய God’s name, Islamic law Authority and woman என்று இரண்டு புத்தகங்களைப் பரிந்துரைத்து படித்துப் பார்க்கச் சொன்னார்.

நான் இந்த வாரம் உயிரோசையில் இந்த சூடான விஷயத்தை வலையேற்றிவிட வேண்டும் என்ற ஆவலில் கேள்விகளைத் தயார் பண்ணிக்கொண்டு போனிலேயே உரையாட நேரம் கேட்டு ஆளைப் பிடித்துவிட்டேன்.

மலாயில் Taat என்றால் கீழ்படிதல் என்று பொருள்taat isteri kepoda swami (a wife’s obedience to her husbend) என்பதைப் பெயராக வைத்து இந்த வார்த்தை மனைவிகள் கீழ்ப்படிவதற்கானது என்று விளக்கம் சொல்வதை அவர் மறுத்தார். இஸ்லாத்தில் கீழ்படிதல் என்பது இறைவனுக்கு மட்டுந்தான்.

பெண்களின் பணிவு கணவன் மூலம் இறைவனுக்குச் சேர்வதாக தவ்ஹீத் (tawherd) என்பதே தவறு என்றார் அமைப்புக்கள் வெவ்வேறு நோக்கங்களைப் பிரதிபலிக்கின்றன. சமயத்தின் பழமையையும் பொற்கால உணர்வுகளயும் மீட்சிக்குள்ளாக்கும் நோக்கில் இயக்க நடவடிக்கைகளை சமயத்தின் சில விதிமுறைகளை முதன்மை நிலைக்குக் கொண்டுவந்து உண்மையான பிரதிகளைப் புறந்தள்ளிவிட்டு அந்த இயக்கங்களின் இலட்சியங்களுக்கு ஏற்றதாக வடிவமைத்துக் கொள்கிறார்கள்.

இது வரலாறு முழுக்க நிகழ்ந்து வருகிறது. அவர்களின் இலட்சியங்கள் சாத்தியமாகாதபோது சமய உட்பிரிவுகளோ அல்லது புதிய சமயமோ உருவாகலாம். இப்படிப்பட்ட கருத்துருவாக்கங்களை எல்லா சமயங்களுமே சந்திக்கின்றன என்றார்.

ஆணும் பெண்ணும் சமத்துவ அந்தஸ்து பெற்றிருப்பது பற்றிய கருத்துக்கள், இருவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு கூடி வேலை செய்தல், தமது தேவைகள் பற்றிய பரஸ்பர பரிந்துணர்வு குர் ஆரில் பல இடங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வரலாற்றிலிருந்து சில இடங்களில் ஆண்களை விட மேலான நிலைக்கு உயர்ந்த கதைகள் நிறைய உள்ளன. சலீமாக்களின் காலத்தின்போதே கலிபா அல் முக்ததிர் அவரது தாயை உயர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தலைவியாக நியமித்தது படித்திருக்கிறீர்களா என்று கேட்டு விட்டு,

நபிகளின் வாழ்வு கூறும் உண்மை ஆன்மீகமா, உலகியலா என்பதைவிட அவர்கள் மனிதனாய் வாழ்ந்து உலகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கக்கூடிய ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் வழியைக் காட்டினார்கள். பெண்களின் சமத்துவத்துக்கு அவர்கள் வாழ்வே சாட்சி என்றவர்.

OWC அமைப்பிற்குப் பல மில்லியன் சொத்துக்களும், மெக்காவில் 20 அறைகள் கொண்ட வில்லாவும் இருக்கின்றன. அவைகளை வளர்த்தெடுக்க வேண்டாமா? என்று சொல்லி முடித்தார்

 thanks: http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=4497

 

நாளை இந்தக் குளத்தில்

      நீர் வந்துவிடும்

இதன் ஊடே ஊர்ந்து நடந்து

      ஓடிச் செல்லும் வண்டித் தடங்களை

இனி காணமுடியாது

      இன்று புல்லைத் தின்று கொண்டிருக்கும்

ஆடு நாளை அந்த இடத்தை

      வெறுமையுடன் சந்திக்கும்

மேலே பறக்கும் கழுகின் நிழல்

      கீழே கட்டாந்தரையில்

      பறப்பதை நாளை பார்க்கமுடியாது

இந்தக் குளத்தில் நாளை

      நீர் வந்துவிடும்………………
& கலாப்ரியா&

 ஒவ்வொரு கணத்திற்குப் பிறகும் நமக்கு பல அனுபவங்கள் வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன.  அடுத்த பிறந்த நாள், முதல் பிறந்தநாளை அர்த்தமற்றதாக்கி விடுகிறது. நம் நினைவுகளில் நம் எத்தனை பிறந்த நாட்கள் ஞாபகம் வைத்திருக்கிறோம்? சிலருக்கு ஒரு பத்து ஞாபகமிருப்பது மிகப் பெரிய விஷயம். ஆனால் அந்த வருடத்தில் நடந்த ஏதாவது சில விஷயங்களை நாம் நினைவில் இருத்திக் கொண்டால் ‘‘நச்” என்று ஞாபகம் வந்துவிடும். இந்த விஷயத்தில் பிப்ரவரி 29 பிறந்தவர்கள்  பாடுதான் கொஞ்சம் திண்டாட்டம். அந்த மாதமே ஒரு பரிதாபத்துக்குரியதுதான். இரண்டு முரட்டு மாதங்கள் ஜனூஸ் என்ற ரோமானியக் கடவுள், மார்ஸ் என்ற எப்போதும் மல்லுக்கு நிற்கும் கடவுள். இவற்றிற்கிடையே மாட்டிக்கொண்டு பிப்ரவரி விதியின் விளையாட்டால் சுருங்கிவிட்டது.

முதன்முதலில் வெளியிடப்பட்ட ரோமானியக் காலண்டரில் 10 மாதங்கள்தான் இருந்தன. பிப்ரவரி அதில் இடம்பெறவில்லை. முதல் மாதம் மார்ச்சில் ஆரம்பித்து டிசம்பரில் முடிந்தது. கி.மு 700 ல் ஜனவரி, பிப்ரவரி சேர்த்துக்கொள்ளப்பட்டன. ரோமானியப் பேரரசர் Numopompilsus 12 மாதங்களும் ஒற்றைப்பட எண்கள் வருவது மாதிரி மாற்றி அமைத்தார். (29 அல்லது 31) இரட்டைப்படை எண்கள் ரோமானியர்களுக்கு அப்போதே ஒத்துக்கொள்ளவில்லை.

 

நான் கல்லூரியில் படிக்கும்போது இந்தக் காலண்டர் விவாதம் நடந்தது. அதில் என் அறை நண்பர் ஒருவர் ஜனவரியிலிருந்தும் மார்ச்சிலிருந்தும் 31ந்தேதியை எடுத்து பிப்ரவரியில் போட்டு 30 ஆக்கிவிட்டால் வருடம் பிறந்து 4 மாதங்கள் 30 என்ற அளவிலேயே புதுவருடம் கரடுமுரடில்லாமல் போகும் என்றார். ஜனவரி, டிசம்பரில் 31ல் பிறந்தவர்கள் 365ல் 0.5 சதவீதம்தான் கணக்கு வரும். அவர்கள் முன் கூட்டியே 30ல் பிறந்தநாளைக் கொண்டாடிக் கொள்ளலாம் என்றார். இன்னொரு நண்பர் “Maths Major”அவர் Sexaqesima) விதிப்படி 11 மாதத்திற்கு 30 (11X30) வருவது மாதிரிக் கணக்கிட்டு டிசம்பரை மட்டும் சூப்பர் ஜம்போ 35 அல்லது 36 நாட்கள் கொடுத்து டிசம்பர் மாத விடுமுறை நாட்களை அதிகமாக்கிக் கொள்ளலாம் என்றார். இவர் இப்போது ஊரில் அரசியல்வாதியாக இருக்கிறார்.

 ஆனாலும் இந்த ‘‘கிரே கொரிலின்’’ நாட்காட்டி அப்படியே நிலைத்துவிட்டது. “Bazing Gou” என்று சீனத்தில் 80 களுக்குப் பிறகு பிறந்த இளைஞர்களைக் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் அபரிதமான புத்தாக்க சிந்தனைகளுடன் தம்மைப் பற்றி மட்டுமே அதிகம் கவலைப்படும் சந்ததி, வரும் காலத்தில் இந்த காலண்டரை தூக்கிப் போட்டுவிட்டு வேறு ஒரு நாட்காட்டியை கொண்டு வர முனையலாம் என்கிறார்கள்.

 

சென்ற மாதம் பல விஷயங்களில் சிங்கப்பூர் சாதனை படைத்திருக்கிறது. இளையர்களை அறிவியல் தொழில்நுட்பத்தில் ஈடுபட வைக்கும் நோக்கில் சென்ற மே 6ந்தேதி இந்திய விண்வெளித் துறையில் ஏவப்பட்ட சிங்கப்பூர் X sat மைக்ரோ சேட்டிலைட் அதற்கு அடுத்த நாளே துவாஸில் உள்ள நிலையத்திற்கு சிவப்பும், பச்சையும் கலந்த பல புகைப்படங்களை அனுப்பத் துவங்கியிருக்கிறது. 800 கிலோமீட்டர் உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மிகவும் துல்லியமாக (சிவப்பு நிறம் பசுமை பூக்காங்களையும் பச்சை நிறம் நீர் பிடிப்பு பகுதிகள்) எடுத்து அனுப்பியிருக்கிறது. மற்ற நாடுகளைப் போல் பாதுகாப்பு அம்சத்திற்காக அல்லாமல் நிலப்பகுதிகளின் தன்மையை ஆராய்வதற்கு X sat சேட்டிலைட் ஒரு நாளுக்கு 14 தடவைகள் சிங்கப்பூருக்கு மேல் பறப்பதற்கு ஏதுவாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சிறிய நாடு அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சிகளுக்கு 16 பில்லியன் ஒதுங்கியிருப்பதை உலக நாடுகள் வியப்புடன் வரவேற்றிருக்கின்றன. அதன் முதல் பலன் சிங்கப்பூருக்கு விரைவில் கிடைக்கவிருக்கிறது.

 புற்றுநோய்க்கு மாத்திரை தயாரிப்பதில் phase (1) ல் சிங்கப்பூரின் அறிவியல்துறை வெற்றி அடைந்திருக்கிறது.

100 வருடங்களில் பெறக்கூடிய வளர்ச்சியை 25 வருடங்களில் பெற இளையர்களை ஆராய்ச்சிகளுக்கு தேர்ந்தெடுப்பதில் 28 வயதிலிருந்து 32 வரை படிப்பு 32ல் தனிப்பொறுப் பு, 35ல் ஒரு குழுவை நிர்வகிக்கும் பொறுப்பு என்று கணக்காக அரசு செயல்படுகிறது. இன்னொரு குறிப்பிடத்தக்க மே மாத நிகழ்வு சிங்கப்பூர் பொதுத்தேர்தல். நாங்கள் குடியிருக்கும் Tanjong Pagar ஏரியாவில் ‘வாக் ஓவர்’ தேர்தல் முடிவை அறிவித்த அதிகாரி நெட்டில் மிகவும் பிரபலமடைந்துவிட்டார். முன்னாள் மந்திரிகள் ஒன்பது பேருடன் இரண்டு முன்னாள் பிரதமர்களும் அமைச்சரவையிலிருந்து ஓய்வு பெற்றார்கள். அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மந்திரிகளின் சராசரி வயது 59 லிருந்து 53 ஆக குறைந்திருக்கிறது. உங்களுக்கு 35 லிருந்து 50 ஆகியிருந்தால் அத்துடன் நடுத்தரவயது முடிந்துவிடுகிறது என்று இருந்ததை தற்போது 58 வரை நடுத்தரவயது என்று வளர்ந்த நாடுகளில் அறிவித்துள்ளார்கள்.

வயது போய்க்கொண்டிருந்தாலும் சில இளமைக் கால நினைவுகள் மறக்குமா என்ன? 1974ல் தொடங்கப்பட்ட கேபிள் காரில் முதன்முதலில் பயணம் செய்த நினைவுகள் அந்த வருடம் எனக்கு தம்பி பிறந்ததால் வருடம் ‘நச்’ என்று நினைவுக்கு வருகிறது. அந்த கேபிள் கார் 1983ல் எண்ணெய் துரப்பன கப்பலுடன் மோதி 7 பேர் இறந்துபோனது, கேபிள் கார் வருவதற்குமுன்பே ஜீரோங் பறவைகள் (1971) விலங்குப் பண்ணை (1973) ஆரம்பிக்கப்பட்டது, அந்த இடங்களை யார் யாருடன் முதலில் பார்க்கச் சென்றோம் என்ற நினைவுகள் அப்படியே பசுமை மாறாமல் இருக்கின்றன. சென்ற மாதம் ஒஸாமா கொல்லப்பட்டதும் செய்தி வாசித்துக் கொண்டிருக்கும்போதே BBC நிருபர் அதே தேதியில் 66 வருடங்களுக்கு முன்னால் ஹிட்லர் கொல்லப்பட்டதை நச்சென்று ஒரு அடி அடித்தார். (அவரும் நினைவாற்றலுக்கு ஏதோ பார்முலா வைத்திருப்பார் போலும்!)

இதற்கிடையே சென்ற மாதம் இறுதித் தீர்ப்பு நாள் Judgement day வந்துவிட்டது. உலகம் இன்னும் 24 மணி நேரத்தில் அழியப்போகிறது என்று ஒருவர் அறிவித்தார். நேரம் கடந்த்து.. மக்கள் எப்போதும் போல் நியூயார்க் சதுக்கத்தில் நடந்துகொண்டிருந்தார்கள். சொன்னவர் எங்கோ ஓடி ஒளிந்துகொண்டார். உலகில் ஒரு பக்கம் நம்பிக்கைகள் பொய்த்துப் போவதும் இன்னொரு பக்கம் நம்பிக்கை ஒளி சுடர்விடுவதுமாக அர்ப்பணிப்புகள், அக்கறைகள், தியாகங்கள் நடந்தபடியாகத்தான் இருக்கின்றன. அதில் உலகம் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

அன்றாட வேலையின் வேலிகளையும் தன் வயதையும் கடந்து ஏதாவது ஒரு நம்பிக்கையில் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் பலரை பார்த்திருக்கிறேன். அப்படியே ஒருவரை பற்றிச் சொல்லி இந்தப் பத்தியை முடிக்கலாம்.

 மிஸ்டர் ‘ஆலன்’ வயது 70 தாண்டியிருக்கும். அவரை ‘அப்பே’ என்றுதான் கூப்பிடுவோம். பைசைக்கிளில் எந்நேரமும் சுற்றிக்கொண்டிருப்பதால் அவர் பெயர் ‘‘பை சைக்கிள் அப்பே” என்றாகிவிட்டது. தேபான் கார்டனில் குடியிருந்தார்.

கடந்த 2007ல் ஜீரோங் வெஸ்ட் தெரு 42ல் ஒரு மரம் குரங்கு வடிவில் இருப்பதாக புரளி கிளம்பியது. உடனே ஒரு சீனர் ‘‘Kwan yin” அருள் கொடுக்கும் தெய்வம் என்று போர்டை மரத்தில் தொங்கவிட்டுவிட்டார். அந்த இடம்வரை ‘‘பை சைக்கிள் அப்பே” சைக்கிளில் சென்று வந்துவிடுவார். இந்த வயதில் இப்படி உடம்பை வைத்திருக்கிறாரே என்று ஆச்சரியப்படுவோம். சனி ஞாயிறுகளில் தவறாமல் அங்கு சென்று எங்களுக்கு 4D குலுக்கலுக்கு ‘டிப்ஸ்’ கொடுப்பார் (அதனால்தான் இதைப்பற்றி விரிவாக எனக்குத் தெரிந்திருக்கிறது)

 

கொஞ்ச நாளாக ஆளைக் காணோம். எனக்கு சந்தேகம் வந்தது. அவர் வயதை நினைத்து அல்ல’ Bicycle ஓட்டும் வேகத்தில் என்ன ஆனாரோ என்ற நினைப்பில்தான்.  சென்றமாதம் ஆள் தட்டுப்பட்டார், அதே சைக்கிளுடன்.

 ‘‘அப்பே! லாங் டைம் ரெடி, நெவர் சீ யூ நோ கிவ் 4D டிப்ஸ் வொய்?’ என்றேன்.

அந்தக் குரங்கு வடிவ மரத்தில் ஒரு லாரி மோதிவிட்டதாம்.  உடனே அங்கிருந்த குரங்கு கடவுள் வெளியேறிவிட்டதால்,  ‘‘நோ மோர் டிப்ஸ்’’ என்றார்.

 இப்போதைக்கு அந்த மரத்தில் மோதிவிட்டுப் போன லாரியைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.

அந்த லாரி நம்பர் மட்டும் கிடைக்கட்டும். if Khanna! பை சைக்கிளை த்ரோ பண்ணிவிட்டு காடி வாங்கிடுவேன் லா” என்றார்.

 

 thanks: http://thangameen.com/ContentDetails.aspx?tid=352

 

 

நான் முதுகலை அரசியல் மதுரை காமாராஜர் பல்கலையில் படித்தபோது அரசியல்வாதிகளின் பாலியல் விவகாரங்கள் தொடர்பான திறந்த கதையாடல்களைப் பாடங்களோடு இணைத்து நடத்திச் செல்லும் பேராசிரியரின் வகுப்பு என்றுமே நிறைந்து வழிந்தபடிதான் இருக்கும். மேற்கத்திய பாலியல் புரட்சி தமிழ் சூழலில் நிலவும் பாலியல் தொடர்பான விஷயங்களைப் பொருத்தி, வேறுபடுத்தி அவர் அடிக்கும் லெக்சரில் புதுப் புது வதந்திகளையும் சேர்த்து விடுவது அவரின் தனி ஸ்டைல்.

 

வகுப்பு ஆரம்பிக்கு முன்பு ‘‘ஒட்டோவான் பிஸ்மார்க்கின்’’ பொன் மொழியான ‘‘அரசியல் என்பது சாத்தியப்பாட்டுக்குரிய ஒரு கலை’’ என்பதை தினந்தோறும் குறள் சொல்வது மாதிரி சொல்லி ‘எல்லா விதத்திலும் சாத்தியப்பாட்டுக்குரிய’ என்று அவர் ரிப்பீட் பண்ணும்போது செக்ஸைத்தான் சொல்கிறார் என்பது எல்லோருக்கும் புரியும்படியான செய்தி.

 

அரசியல்வாதிகள் தாங்கள் அதிகாரத்தில் இருக்கும்போது செய்யும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மோசடி இப்படி பலவற்றில் கள்ள உறவுகளும் மிக முக்கியமான சாத்தியப்பாடு. இது சிலருக்கு இருக்குமிடத்தை இழக்கச் செய்கிறது. வேறு சிலருக்கு இன்னும் பிரகாசமான அரசியல் எதிர்காலத்தையும் உருவாக்கியிருக்கிறது.

 

ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டனில்தான் இந்த விவகாரங்களுக்குப் பதவி இழந்த அரசியல்வாதிகள் அதிகம். 1990 களிலிருந்து இந்த விவகாரங்கள் உத்வேகம் அடைந்துவருகின்றன. Mr John Presott துணைப் பிரதமராக இருந்தவர். தனது செக்ரெடரியுடன் கள்ள உறவு வைத்திருந்ததாகப் பிடிபட்டு பதவி இழந்தார். அதேபோல் பாதுகாப்பு அமைச்சராக இருந்த Mr Nicholas ம் தன் அலுவலகத்தில் வேலை செய்த பெண்ணால் குற்றம் சாட்டப்பட்டு பதவி இழந்தார்.

 

1970களில் Mr Jerry Thrope லிபரல் கட்சியின் தலைவர் தன்னுடைய ஆண் நண்பரைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் வெளியீடான விபரங்கள் பத்திரிகையில் வெளியிட முடியாத அளவுக்கு மோசமாக இருந்ததால் பத்திரிகைகள் ஒதுங்கிக் கொண்டன.

 

பிரான்ஸ் அதிபர் Mr Francois Mitterend 1980களில் இன்னொரு மனைவி இருப்பதை மறைத்துக் குடும்பம் நடத்தி வந்தது உலகறிந்த விஷயம். பிரான்ஸின் சரித்திரத்தில் இம்மாதிரி விஷயங்களை விட ‘ஊழல்’தான் மிக முக்கிய பதவிக் கொல்லியாக இருந்துள்ளது.

 

இத்தாலிய கோடீஸ்வர பிரதம மந்திரி Mr.Silvio Berlusconi 18 வயதுக்கும் குறைந்த கரீமா ருலியுடன் உறவு கொண்டதாகப் பத்திரிகைகள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டன. அந்த 74 வயதுக்காரர் பெரும்பாலும் தன் பேத்தி வயதுடைய பெண்களுடனும் விலை மாதர்களுடனும்தான் ‘‘BUNGA BUNGA” என்ற இத்தாலிய நடனம் ஆடுவாராம். இதைப்பற்றிக் கேள்வி கேட்ட எதிர்க்கட்சிகளிடம் ‘‘பெண்களுடன்தானே ஆடினேன். ஆண்களுடன் அல்லவே’’ என்றாராம். இவர் விஷயம் பற்றி மக்கள் அதிகம் கரிசனம் கொள்ளாமைக்குக் காரணம் ‘‘தங்களிடம் கோடிக்கணக்கான பணமும், அதிகாரமும் இருக்கும்போது யாருமே இப்படித்தான் நடந்து கொள்வார்கள்’’ என்ற மக்களின் எண்ணம்தான் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

 

ரஷ்ய அதிபர் Mr Boris Yeltsin தன்னுடைய செக்ரெடரியின் பிரா கொக்கிகளை ஒரு பார்ட்டியில் கழற்ற முயன்ற விவகாரம், ஏதோ ஒரு வேகத்தில் செய்துவிட்டார் என்பதோடு முடிந்தது.

 

ஜெர்மனியில் ஒரு பத்திரிகை தயவுசெய்து அரசியல்வாதிகள் கள்ள உறவுகளில் ஈடுபடுவதாகத் திரிக்காதீர்கள். வெறும் செக்ஸில்தான் என்று குறிப்பிடுங்கள் என்று தலையங்கம் எழுதியது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் Mr Angele Markel வுடன் போட்டியிட்ட அந்தக் கட்சியின் இன்னொரு பெண் வேட்பாளர் தங்களுடைய ‘கிளிவேஜ்’ தெரியும்படி பேனர் போட்டு ‘‘இதற்குமேல் தரிசனம் தருவதற்குக் காத்திருக்கிறோம்’’ என்று தூள் கிளப்பினார்கள், வெற்றியும் பெற்றார்கள்.

 

அமெரிக்காவின் Tharmas Jafferson முதல்  John.F.தி கென்னடி வரை தங்களுடைய கள்ள உறவுகள் பத்திரிகையின் முதல் பக்கத்தை சில நாட்கள் நிறைத்துவிட்டு பரபரப்பை முடித்துக்கொண்டன. ஆனால் இன்றைய இணைய உலகில் மாட்டியிருந்தால் தோரணம் கட்டியிருப்பார்கள்.

 

Jafferson தன்னிடம் 38 வருடங்களாக அடிமையாகயிருந்த பெண்மூலம் பல குழந்தைகளுக்குத் தந்தையானார். 1802ல் நடந்த இந்த விஷயத்தை உலகிற்குத் தெரியப்படுத்த ரேடியோ, டி.வி. கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல் 1960ல் நடந்த கென்னடி-மர்லின் மன்றோ விவகாரத்தைப் பெரிதாக்க இண்டர்நெட் வரவில்லை. 1998ல் கிளிண்டன் வசமாக சிக்கிக் கொண்டார். இதே கிளிண்டன் விவகாரத்தைப் புலனாய்வு செய்த Mr.Newt Gigrich தன்னைவிட 23 வயது குறைவான பெண்ணுடன் உறவு வைத்திருந்ததாக இப்போது பிடிபட்டிருக்கிறார்.

 

பிலிப்பைன்ஸின் 78 வயது எஸ்டர்டோ நம்ம புரட்சித் தலைவர் மாதிரி கொடை வள்ளல். ஆனால் நிறையக் குழந்தைகளுக்கு வெவ்வேறு பெண்களின் மூலம் தந்தையானவர். 1998ல் பிலிப்பைன்ஸின் மிக உயர்ந்த அமைப்பான கத்தோலிக்க சர்ச் இவருக்கு வோட்டளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டும் இவர் மிகப் பெரிய வெற்றி அடைந்தார். இந்த ஏழைப் பங்காளனை பிலிப்பைன்ஸில் பெண்களை விட ஆண்களே அதிகம் ஆதரித்தார்கள். இவர் ஒரு ‘ரொமாண்டிக் ஹீரோ’ என்றார். ஆனால் 2001 தேர்தலில் ஊழல் விவகாரத்தில் இவரை வீட்டுக்கு அனுப்பினார்கள் இல்லை ஓய்வு கொடுத்துவிட்டார்கள்.

 

ஜப்பானின் முன்னாள் அதிபர் Kakuei Tanaka இரண்டாம் உலகப் போருக்கு முன்பு அந்த நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக கருதப்பட்டவர். அவர் இறந்த பிறகுதான் அவருக்கிருந்த கள்ள உறவு அவர் எழுதிவைத்த உயிலின் மூலம் தெரிய வந்ததாம். போக்கியோ கவர்னர் Shintaro Ishihara தன் ஊழியருடன் படுக்கையில் இருந்தபோது பிடிபட்டும், அதற்குப் பிறகு ஆக அதிக தடவைகள் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை யாராலும் தடுக்க முடியவில்லை.

 

இந்தோனேஷிய முதல் அதிபர் சுகர்னோ தான் பெண்களை மணந்து கொண்டதை கௌரவமாகச் சொல்லிக்கொள்வார். 1960 களில் ரஷ்ய உளவு அமைப்பு அவர் ரஷ்ய விஜயத்தின்போது பெண்களுடன் கும்மாளம் அடித்ததை ‘வீடியோ’ எடுத்து வைத்துக் கொண்டு ஒரு விஷயத்தில் அவரை வழிக்குக் கொண்டுவர முயன்றது அதற்கு அவர் ‘‘அந்த வீடியோவை அனுப்பி வையுங்கள் திரையரங்குகளில் திரையிட்டு மக்களைக் குஷிப்படுத்துகிறேன்’’ என்றாராம்.

 

ஆனாலும் தற்போது சூழல் மாறிவிடுகிறது. Mr.Yahiya Zaini கொல்கார் கட்சியின் மதப்பிரிவுத் தலைவர் Dangdut பாடகியுடன் கொண்டிருந்த கள்ள உறவை செய்தியாக்க, அவர் உடனே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

 

மலேசியாவின் அன்வர் விவகாரம் அரசியலில் பாலியல் விவகாரங்கள் எந்த அளவுக்குத் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகிவிட்டது. முன்னால் சுகாதாரத்துறை அமைச்சர் Chua Soilek ஒரு பெண்ணுடன் ஹோட்டல் அறையில் இருந்த வீடியோ காட்சிகள் வெளியில் கசிய விடப்பட்டு பரபரப்பாகிவிட்டது. ஆனாலும் அவருக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இப்போது அவர் மலேசிய சீனர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

 

‘ரோஜாவின் ராஜா’ நேருவுடன் லேடி எட்வினா மெலின்டேட்டனின் உறவு அவர் மறைந்த பிறகுதான் ஊடகங்கள் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தன. தன்னுடைய அந்தரங்க விஷயங்கள் வெளியில் தெரியாதபடி கவனமாக நடந்து கொள்வதற்கு இன்றைய இந்திய அரசியல்வாதிகளுக்கு அவர்தான் வழிகாட்டி. நேரு புகைபிடிக்கும் பழக்கமுள்ளவர். ஆனால் அவர் புகைபிடிப்பதை யாரும் பார்க்கமுடியாதபடி நடந்துகொண்டிருப்பதை ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்டபோது ‘‘உஷ், இந்தியக் கடவுள்கள் புகைபிடிக்கமாட்டார்கள்’’ என்று சொன்னாராம்.

 

மற்ற நாட்டு ஊடகங்களுக்கும் இந்திய ஊடகங்களுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு, அரசியல்வாதிகளின் படுக்கை அறைப்பக்கம் அவ்வளவாக எட்டிப் பார்ப்பதில்லை. H.K.Dua -முன்னாள் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ எடிட்டர்- இந்திய சமூகம் இதை அவ்வளவாக ரசிப்பதற்கு நேரம் வரவில்லை என்று சொல்கிறார்.

 

ஆனால் இதிலும் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் தடாலடி மன்னர்கள். Mr.நவாஸ் ஷெரிஃப் எப்போதுமே சட்டையின் முதல் பொத்தானைக் கழற்றிவிட்டுக் கொண்டே காட்சியளிப்பார். அவரிடம் ஒரு நிரூபர் எப்போதுமே ரொமாண்டிக் லுக் விடுகிறீர்கள் என்று கேட்டபோது ‘‘நோ நோ…. எங்கள் தேசம் மிகவும் பாதுகாப்பானது. நான் புல்லட் புரூட் போடவில்லை என்பதைக் காண்பிக்கவே இப்படி செய்கிறேன்” என்றாராம். அதைவிட சௌகத் அலி என்ற முன்னாள் அதிபர் அமெரிக்கா சென்றிருக்கும்போது ‘‘நான் பார்த்த இரண்டு நிமிடங்களில் பெண்களை வீழ்த்திவிட முடியும்’’ என்று ஜோக்கடித்தாராம்.

 

ஆனாலும் ஒன்று, ஊடக சுதந்திரமும் அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் தனி மனித சுதந்திரமும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஆரோக்கியமான தளத்தில் இவ்விரண்டின் சமநிலையைப் பாதுகாப்பது மிகப்பெரிய சவால்தான்.

 

அடுத்தவரின் அந்தரங்கமறிய

 

ஆசைப்படாதவர்

 

யாருமில்லையிங்கு

 

ஒழுகிப்போன ஒவ்வொரு

 

அந்தரங்கமும்

 

ஆயிரம் முறைகள் பொழி

 

அடைமழையாய்

 

அந்தரங்கம் அறிதலென்பது

 

யாருக்கும் வெறுப்பதேயில்லை

 

தனதானது தெரு முனையில்

 

சிரிக்கப்படும் வரையிலும்

 

(கவிதை கோகுலன்)

 

 thanks: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4428

 

 

 

பாலிவுட் வெஜ்ஜி

Posted: மே 20, 2011 in பத்தி
குறிச்சொற்கள்:

 நாம் உண்ணும் உணவை நம்மால் தீர்மானிக்க முடியுமா? அது கிட்டத்தட்ட இயலாத காரியம். நம் உணவைத் தீர்மானிப்பவர்களை இப்படி வேண்டுமானால் வரிசைப் படுத்தலாம்.

விவசாயிகள், உணவு பொருள் விற்பனையாளர், மருத்துவர்கள், சமையல்காரர் நம்முடைய தேர்வின் விருப்பம் மிகக்குறைந்த சதவீதமாகத்தான் இருக்கமுடியும்.

அனைவரும் விரும்பக்கூடிய உணவுப் பொருட்கள் கடந்துவரும் பாதைகள் நம் ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயம் நிறைந்தவைகளாக இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் தற்காலத்தில் உயிர்ப்புள்ள (Organic foods) உணவுகளை உண்ணவேண்டும் என்ற இயக்கம் உலகில் வெகு வேகமாகப் பரவிவருகின்றது Organic food  என்ற வார்த்தையை Lord North burne எழுதிய Look to the land என்ற நாவலில் பிரபலமடைந்தது. உயிர்ப்பு உணவுகளை உற்பத்தி செய்பவர்களுக்கு 1990-ல் ஐரோப்பிய நாடுகள் கூடி Organic Food Product Act (OFPA) கொண்டு வந்தன. முறையான Organic Food உற்பத்தியாளர்கள் அதற்குரிய சான்றிதழ் பெறவேண்டும்.

கோழிகளிடமிருந்து உயிர்ப்புள்ள முட்டையை பெறவேண்டுமெனில் அவைகளுக்கு உயிர்ப்புள்ள தீவணத்தைக் கொடுக்கவேண்டும். கூண்டில் அடைத்து மின்சார சாதனத்தின் வழி முட்டையை எடுக்காமல் சுதந்திரமாக உலவவிட்டு வைட்டமின் A, omaga 3 அதிகமுள்ள முட்டைகளை பெற முயலவேண்டும்.

  

ஆண்டி பயாடிக், ஹார்மோன்கள் செலுத்தி பாலைக் கறந்தால் அந்தப் பாலைக் குடிக்கும் பெண்குழந்தைகள் ஏழு வயதிலேயே ‘ருது’வாவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. கால்நடைகளை புல் தின்ன வைத்து பாலைக் கறந்தால் அது சுவை கொஞ்சம் குறைவாக இருந்தாலும் ஒமேகா – 3 யும், தொற்று நோய் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலுள்ள ஊட்டச்சத்தும் கிடைக்கும். செயற்கை உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தி விளைவிக்கப்படும் பழங்களும் காய்கறிகளும் நமக்கும் சுற்றுச் சூழலுக்கும் நன்மை தரும் விஷயங்களல்ல.

சிங்கப்பூரில் NTUC பேரங்காடி, கேர்ஃபோர் கோல்டு ஸ்டோரேஜ், விவோசிட்டி ஆகிய விற்பனை நிலையங்களில் Organic உணவுகள் வசதிபடைத்த ஊழியரணியைக் குறிவைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

உடல் பருமன் பிரச்னையை Organic Food  வகைகளால் கட்டுப்படுத்தமுடியும் என ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் உடல்பருமன் சதவீதம் 27  ஐ நெருங்கிவிட்டது. அமெரிக்கர்கள் மட்டுமே ஆண்டுக்கு சராசரியாக 36 மில்லியன் கிலோ இறைச்சி சாப்பிடுகிறார்கள். ஆசியாவில் எல்லா நாடுகளுக்கும் சேர்த்து 103 மில்லியன் கிலோ இறைச்சி தேவைப்படுகிறது. இதனால் இறைச்சிக்காக கொல்லப்படும் விலங்குகள் துரித கதியில் வளர்க்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்ந்து கூடிக் கொண்டே போகிறது.

விலங்குகளுக்கு முன்னால் கத்தியைக் கொண்டு செல்வதற்கு முன்பு அவைகளை நாம் வாழ அனுமதித்த காலத்தில் அவைகள் சரிவர பராமரிக்கப்பட்டனவா என்று ஒவ்வொருவரும் தன் மனசாட்சியை எழுப்பி கேள்வி கேட்டுக் கொள்ளவேண்டும் என்று ஒரு சுற்று சூழல் ஆர்வலர் கூறுகிறார்.

Organic இறைச்சிக்கு உலகத்தை மாற்றிவிடலாம் என்று நினைத்தால் அது இப்போதைக்கு நடக்காத காரியம். மொத்தமே Organic உணவுகள் உற்பத்தி 3 சதவீதம் மட்டுமே. அதனால் மீன் சாப்பிடுங்கள் என்பது இக்காலத்திற்கு பொருத்தமான அறிவுரையாக இருக்கும். ஆனால் மீன் குஞ்சுகளைக் கூட விட்டு வைக்காமல் வலையில் போட்டு காசு பார்க்கும் நாடுகள் கூடிக் கொண்டு போகின்றன.

 

இது ஒருபுறமிருக்க துரித உணவுகள் Organic Food க்கு வில்லனாக பயமுறுத்துகிறது. உப்பும் Fructose corn Syrypம் சேர்க்கப்படாவிட்டால் துரித உணவுகள் வெறும் சக்கை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் Organic Food தேவைகளை அறிவுறுத்துவதில் முதலிடம் வகிக்கும் அமெரிக்கா சோளம்  உற்பத்திக்கு அதிக சலுகைகள் வழங்குவதோடு சுற்றுச் சூழலை பாழ்படுத்தும், மில்லியன் டன் உரத்தை சோள உற்பத்திக்கு நிலத்தில் கொட்டுகிறது. அதேபோல் சீனா தன் பங்கிற்கு ஒட்டு மொத்த விவசாயத்திற்கு 47 மில்லியன் டன் உரங்கள் உபயோகிக்கிறது.

ரசாயன உரங்கள் பயன்பாட்டை எதிர்த்து புனர் ஜென்ம வேளாண்மை (Rebirth Agriculture) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் கலாநிதி அனில் குப்தாவின் ‘‘நம் வழி வேளாண்மை” என்ற கோஷத்துடன் ஆரம்பிக்கப்பட்டு இதன் கிளைகள் தமிழ்நாட்டின் மதுரை, ஓரிஸ்ஸாவின் புவணேஸ்வர், கேரளாவில் கோட்டயம், பூட்டானில் திம்பு – உத்தரபிரதேசத்தின் சஹான்பூர் – கிரனூரில் நம்மாழ்வார் நடத்தும் லெய்சா (Leisa), உடுமலைப் பேட்டையில் C.R.ராமநாதனின், விவசாயக் காட்டியல் (Agro farm), Mr. VR. சுவாமிநாதன் நடத்தும் சில பண்ணைகள்  இந்தியாவின் இயற்கை வேளாண் முறைகளை முன்னெடுப்போருக்கு வழிகாட்டும் பண்ணைகளாக விளங்குகின்றன.

கோவையிலிருந்து நண்பர் திரு.சேகரன் சிங்கப்பூர் வந்திருந்தார். ஒரு வாரம் பார்க்க வேண்டிய இடங்களை பார்த்து முடித்துவிட்டு என்னுடன் ஒரு சனிக்கிழமை வெளியில் செல்ல கிளம்பி வந்தார்.

ரூமிலிருந்து புறப்படுவதற்கு முன்பு ‘‘ஷாநவாஸ் நாம் எங்கே போகிறோம்’’ என்றார்.

“பாலிவுட் வெஜ்ஜி” என்றேன்.

டிப்டாப்பான சூட்டில் டாக்ஸியிலிருந்து இறங்கினார்.

 

பாலிவுட் வெஜ்ஜி என்றவுடன் அவருக்கு கரினாகபூர், மல்லிகா செராவாத் நினைப்பு வந்தது. அவர்கள் பெயரிலுள்ள  ‘‘கரவோக்கே”  இடத்திற்கு அழைத்துச் செல்வதாக நினைத்துக்கொண்டார். அல்ஜினைட் எம்.ஆர்.டியில் ஏறி கிரான்ஜியில் இறங்கி பஸ்ஸில் பாலிவுட் வெஜ்ஜி (சிங்கப்பூர் இயற்கை வேளாண்மை பண்மைக்கு) அழைத்துச் சென்றேன்.

10 ஏக்கர் பரப்பளவில் வாழையும், பப்பாளி மரங்களும் பூத்துக் குலுங்கும் பாலிவுட் வெஜ்ஜியை திருமதி ஐவி சிங்லிம் (56 வயது) நடத்தி வருகிறார். அவருடைய கணவர் NTUC  CEO வாக இருந்து ஓய்வு பெற்ற ‘‘லொம் ஹோ செங்” உதவியுடன் பண்ணையும், Poison – Ivy என்ற இயற்கை உணவு உணவகமும் நடத்தி வருகிறார்.

நண்பர் சேகரன் கோவையில் விவசாயப் பண்ணையில் இருப்பது போல் உணர்வதாகச் சொன்னார்.

IVY – SING LIM ‘‘நான் பாதி இந்தியா, மீதி சீனா” என்று அடிக்கடி தன்னைக் குறிப்பிட்டுக் கொள்வார். அவருடைய தந்தை ஒரு இந்தியர்.

“மனிதர்கள் பணத்தை சாப்பிடமுடியாது என்பதை உணர்வதற்குள் அவர்களுக்கு வயதாகி விடுகிறது” என்கிறார். இந்த லாப நோக்கமற்ற பண்ணையை நடத்திவரும் IVY.SING-LIM

சிங்கப்பூர் வரும்போது தவறாமல் Bolly wood veggie சென்று பாருங்கள்.

2050ல் உருவாகக் கூடிய மக்கள் தொகை பெருக்கத்திற்கு Organic Food இயக்கமும் எந்த விதத்திலும் தீர்வாக இருக்கமுடியாது என்கிற வாதமும் – American journal of Clinical nutrition 2007ல் சாதாரண உணவுப் பொருட்களுக்கும் Organic Foodக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் தெரியவில்லை என்று வெளியிட்ட திடுக்கிடும் செய்தியும் ஆரோக்கியமான சத்துள்ள உணவுகள் தயாரிக்கக்கூடிய தொழில் அமைப்புக்களை அடையாளம் கண்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விலை குறைத்து வாங்கி கூடவே ஆரோக்கியத்தையும் கொஞ்சம் பெற்றுக் கொள்ளலாம் என்பது சிலரது வாதமாக உள்ளது.

மரபணு மாற்ற உணவுகள் பற்றி நான் சில புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தபோது Mr.Manny Haward எழுதிய “My empire of dirt” என்ற புத்தகத்தில் இந்த மாதிரி Organic உணவு இயக்கங்கள் பலமான உணவு தொழிலுக்கு உலகை இட்டுச் செல்லும் என்று சொல்கிறார்.

 

ஜாலி ஜமாலியன்ஸ்

Posted: மே 12, 2011 in பத்தி
குறிச்சொற்கள்:

இரண்டு காரணங்களுக்காக ஒவ்வொருவரும் கல்லூரிப் பருவத்தை அசை போடுகிறோம். ஒன்று அந்த வயது நினைவுகள் வழங்கிய மகிழ்ச்சிக்காக, இன்னொன்று அந்த வயதுக்குரிய மனத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையே என்கிற ஏக்கத்துக்காக, சட்டைப் பையில் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெளியில் போவதற்கு துவைத்துப் போட்ட சட்டை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சர்வ சாதாரணமாக அறை நண்பர்களின் சட்டையில் கை வைத்து எப்போதும் ஆனந்தமாக நம்மால் இருக்க முடிந்தது எப்படி. அந்தப் பருவத்தில் நிரம்பி வழிந்த கள்ளமின்மைதான் காரணம். அப்போது இல்லாத எல்லாமே இன்று நம்மிடையே இருக்கிறது. ஆனால் இந்த ஆனந்தம் என்ற ஒன்று மட்டும் நம்மை விட்டு ஓடி ஒளிந்து கொண்டது. இது எந்தப் புள்ளியில் நிகழ்ந்தது என்றுதான் தெரியவில்லை. திருச்சி ஜமாலில் பட்டப்படிப்பு படிக்கும்போது அறை நண்பர்கள் மொத்தம் நான்கு பேர். ஒவ்வொருவருக்கும் ஒரு டேஸ்ட். அதில் அன்சாரி டோல்கேட்டில் ஆட்டோ எடுத்துத்தான் மெயின்கார்டு கேட் செல்வார். அந்த ஆட்டோ எப்போதும் தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸில்தான் போய் நிற்கும், அரை மணி நேரம் ஒரு சிகரெட்டை ஊதிவிட்டு சிந்தாமணியில் சுடச் சுட வெஜிடபிள் சமோசாவுடன் ஒரு காபி குடித்துவிட்டு மலைக்கோட்டை படிகளில் கொஞ்சம் உட்கார்ந்து எழுந்திருப்பார். இன்னொரு நண்பருக்கு குளத்தூர் பிரியாணி, கற்கண்டு பால் சாராதாஸில் எதுவும் துணி வாங்காமல் வெறுமனே உள்ளே போய் வரவேண்டும்.

நண்பர் ராஜாமுஹம்மது (பெரம்பலூர்) விடுதியில் சேர்ந்த முதல் நாளே சிங்காரத் தோப்புக்குப் போகலாமே என்று சொன்னவுடன் நான் ஏதோ மாந்தோப்பு புளியந்தோப்பு சவுக்குத் தோப்பு பச்சை பசேல் என்றிருக்கும் என்று நினைத்துச் சென்றால் கலர் கலராக ஃபிகர்கள். அவருக்கு சங்கிலியாண்டிபுரம், பொன்மலைப்பட்டியில் பழைய படங்களைப் பார்ப்பதென்றால் கொள்ளைப்பிரியம். ஆனால் விடுதிக் காவலாளி ‘‘கோனார்” மீசையுடன் கேட்டுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து தூங்காமல் இருப்பதுதான் மிக எரிச்சலான விஷயம். ரூமில் யார் அதிக ‘‘பெல்பாட்டம்” வைத்து பேண்ட் போடுகிறோமோ அவர்தான் முற்போக்குவாதி, சிங்காரத் தோப்பு டைலர் பெயரை மறந்துவிட்டேன். அவரிடம் போய் அளவு கொடுக்கும்போது பெல்ஸ் எத்தனை ‘‘இன்ச்” வைக்கவேண்டும் என்று சொல்வது அவ்வளவு இன்பமான ஒரு விஷயம்.

மறக்கக்கூடிய விஷயங்களா அவை.

ஹோட்டல் ராதாஸ், பாலக்கரை தியேட்டர்………….

பேராசிரியர்களுக்குப் பெயர் வைப்பதிலும், அவர்களுடைய உடல் மொழிகளை நக்கல் செய்வதற்கென்றே ஒரு கும்பல் அலைந்துகொண்டிருக்கும். அந்தக் கும்பலில் துண்டு ஜோக்குகளையும், கவிதைகளையும் எழுதிக் கொண்டிருந்த என்னிடம் ஒரு நண்பர் திருச்சி ஆல் இந்திய ரேடியோவில் ஒரு நிகழ்ச்சி செய்ய வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்றார். சொன்னபடியே செய்தார். அந்த நிகழ்ச்சி ‘‘சிரிப்பு வருது, சிரிப்பு வருது”. ஸ்கிரிப்ட் எழுதி ஒரு நாலுபேரைக் கிண்டல் கும்பலில் தேர்ந்தெடுத்து வானொலி நிகழ்ச்சியில் களமிறக்கினேன். வெளியில் ஜோக்குகளாக அடித்துத் தான் கிளப்பும் ரபிக் ஸ்டூடியோவில் மைக் ஆன் பண்ணியதும் டைமிங் காலை வாரியதால் சொதப்பினார்.

ஒரு புதன்கிழமை இரவு 8.30க்கு நிகழ்ச்சி ஒலிபரப்பினார்கள். அதை ஆர்வமாகக் கேட்ட நண்பர்கள் ‘‘ஏதோ கும்பல் அரட்டை அடிப்பது மாதிரி சத்தம் கேட்கிறது” என்று சொன்னார்கள்.அவர்கள் ஒன்றை க்கவனிக்க மறந்துவிட்டார்கள். நான் மதன் ஜோக்கை வெட்டி ஒட்டி அந்த நிகழ்ச்சியைத் தயாரித்திருந்தேன். ஆடிக்கொருதரம் ‘ஆனந்த விகடன்’ படிக்கும் நண்பர்களுக்குக் கூட ‘‘இது எங்கோ படித்த ஜோக்” என்பது நினைவில் வரவில்லை. ஆனால் அதில் ஒரு ஜோக் விரசமாக இருக்கிறது என்று வானொலி இயக்குநர் வெட்டிவிட்டார். அந்த ஜோக்.

“தெருவில் ஒண்ணுக்குப் போகாதே.

போலீஸ் பிடிக்கும்”

“பிடிச்சா பிடிக்கட்டுமே வேஸ்டாதானே போகுது!’’

அந்த ரஃபி சிங்கப்பூரில்தான் இத்தனை வருடம் இருந்திருக்கிறார். ஆனால் எனக்குத் தெரியாது. ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நண்பர்கள் முதல் கூட்டத்தில் ஜலால் ‘‘யாரென்று தெரிகிறதா?’’ என்று கூட்டி வந்து நிறுத்தினார். உணர்வுபூர்வமான சந்திப்புப் பழைய நாட்கள், பழைய நண்பர்கள், பழைய நினைவுகள் மேல் நமக்கிருக்கும் அக்கறை ஆர்வம் முன்னாள் மாணவர்கள் சங்கங்களை பல்கலைக்கழகங்களில் துவங்குவதற்கு உந்துதலாக இருக்கிறது. முதன் முதலில் 1872களில் அமெரிக்காவின் இலியானோஸ் பல்கலையில் 20 முன்னாள் மாணவர்களுடன் துவங்கப்பட்ட இலியானோஸ் அலும்னி. தற்போது சுமார் 6 லட்சம் உறுப்பினர்களுடன் அலும்னிகளின் முன் மாதிரியாக விளங்குகிறது.

அலும்னி (Alumni) என்ற இலத்தீன் சொல்லுக்கு முன்னாட்களில் பயின்ற பட்டதாரி மாணவ மாணவியர்களைக் குறிக்கிறது. இந்த அலும்னி பாத்திரங்கள் ஜமால் முஹம்மது கல்லூரி பொன்விழா ஆண்டிற்காக சென்ற 2.5.2011 அன்று ஒன்று கூடினோம். சில அலும்னி பாத்திரங்கள் பழசாக இருந்தாலும் பளபளப்பாக இருந்தன. ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டபோது சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் தங்களுடைய முத்திரை பதித்தவர்களையும் 1990க்குப் பிறகு சிங்கப்பூரில் குடியேறி தங்களுக்கும் தாங்கள் சார்ந்த சமுதாயத்திற்கும் பல வகைகளில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களையும் காணமுடிந்தது. கடந்தகால மற்றும் நிகழ்காலத்திற்கான ஒரு பரிணாம இணைப்பு, தங்கள் அனுபவம் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு மேடையை அமைப்பதற்கான முயற்சி.

பொன்விழா கொண்டாடும் நிகழ்வில் அன்று நான் சந்தித்த ஒவ்வொருவரும் மாற்றமடைந்திருக்கும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டோம். நான் படித்தபோது பட்டப்படிப்பு முடிந்த கையோடு ரசாயனப் பிரிவில் முதுநிலை 1980களில் ஏற்படுத்தப்படவில்லையாதலால் வேறு கல்லூரி செல்ல வேண்டிய நிலை. ஆனால் இப்போது 19 பட்டப்படிப்புக்களுடன் முதுநிலைப் படிப்புகளும் M.phil, 12 ph.d பாடங்களும் வந்துவிட்டன. 9625 மாணவர் எண்ணிக்கையை தொட்டிருக்கிறது. இதில் 2879 பெண்கள். தனியாக ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, வெகுவிரைவில் பொறியியல் கல்லூரி ஆரம்பிக்க இருக்கிறார்கள். சமீபத்தில் K.ஜமால் அவர்கள் எழுதிய ‘முப்பெரும் வள்ளல்கள்’ என்ற புத்தகத்தைப் படித்தேன். மத ஒற்றுமைக்காகத் தனது இரண்டு பேத்திகளுக்கு கல்லூரியின் ஸ்பாதகர் ஜமால் முஹம்மது சீதா காதர் பீவி, ராதா தமீமா என்று பெயர் சூட்டியது. காந்தி 1931ல் வட்டமேஜை மாநாட்டிற்கு லண்டன் சென்றபோது அதன் குழுவில் ஒரு உறுப்பினராக திரு ஜமால் முஹம்மது அவர்கள் இடம் பெற்றது.

ஒரு கட்டத்தில் காந்தி திரு.ஆகா கானிடம் ‘‘நீங்களும் ஜமால் முஹம்மதும் என்ன முடிவு செய்தாலும் சரி , நான் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்திட்டுத் தர தயாராக இருக்கிறேன்” என்றது. திரு. ராஜாஜி அவர்களிடம் சுதந்திரப் போராட்ட நிதியாக ‘நிரப்பப்படாத காசோலையைக் கொடுத்தது போன்ற செய்திகள் நாங்கள் கல்லூரியில் படித்தபோது கேள்விப்படாத விஷயங்கள். JMC, Alumni சென்னை, பெங்களூர், கோழிக்கோடு, பஹ்ரைன், துபாய், ஜித்தா, குவைத், மலேசியா, இப்போது சிங்கப்பூரில் தொடங்கப்பட்டிருக்கிறது. அன்று நடந்த நிகழ்வில் எழுத்தாளர் கவிஞர் நாகூர் ரூமி அவர்கள் இயற்றிய பாடல் உணர்வுபூர்வமாக அரங்கை அதிரவைத்தது. பக்கத்திலிருந்த நண்பர், நாகூர் சரி! அது என்ன ரூமி என்றார்.

ரூமி என்றால் ரோம் நகரத்துக் கவிஞர் ஜலாலுதீன் தன் பெயரை ஜலாலுதீன் ரூமி என்று வைத்திருந்ததால் அவர் ஜமால் முஹம்மது கல்லூரி விடுதி ரூமில் எந்நேரமும் உட்கார்ந்து கவிதை எழுதியதால் தன் பெயருக்குப் பின்னால் ரூமி என்றும் சேர்த்துக் கொண்டிருக்கலாம் என்றேன். பல தளங்களில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அறிஞர்கள் பலர் முன்பு கல்லூரி முதல்வர் திரு ஷேக் முஹம்மது அவர்களின் அறிவுபூர்வமான உரை அனைவரையும் அசத்திவிட்டது. Alumniயின் தலைவரும் ஒரு கவிஞர் நாகூர்தீன். இந்த அலும்னிகளை இணைத்து வழி நடத்தும் டாக்டர் ஹிமானா சையீத் 1964ல் ‘மறுமலர்ச்சி’ வார இதழில் தொடங்கி சுமார் 565 சிறுகதைகள், 9 நாவல்கள், 100 கவிதைகள், 1000 கட்டுரைகள் என்று இலக்கிய உலகிற்கு நன்கு அறிமுகமானவர். இருவருமே கவிஞர்கள். அதனால் கவிதையோடு இந்தக் கட்டுரையை முடிக்கலாம்.

மழைவிட்ட பின்னும் விழுந்த

இலைவிட்டுப் பிரிய மனமில்லாமல்

அதன் நுனிபற்றித் தொங்கும் நீர்த்துளிபோல்

கால மழை ஓய்ந்த பின்னும்

இதயம் விட்டுப் பிரிய மனமில்லாமல்

அதன் சுவர் பற்றித் தொங்கும் ஞாபகத்தூண்கள்

இது எண்ணத் தேவையா

இல்லை நினைவின் பாரமா!

 

thanks: http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4281